இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

வெள்ளி, 13 மே, 2011

ஊழலே,உனது பெயர் இந்தியாவா?

கி.பி.2020 -ல் இந்தியா வல்லரசாகிவிடும் என ஒரு சாரர் சொல்லிக்கொண்டிருக்க,இந்தியா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் ஊழலில் வல்லரசாகி விடுமோ என அச்சமடைய வேண்டியயுள்ளது.

ராமாயணம்,மகாபாரதம்,போன்ற இதிகாசங்களையும்,திருக்குறள் போன்ற உலக பொதுமறைகளையும் படித்த பண்பட்ட பாரத மக்கள்தான் விஞ்ஞான வழியில் ஊழல் செய்வது எப்படி?என்று வாழ்நிலையை அமைத்துக் கொண்டார்களோ? ''இப்படி எல்லாம் ஊழல் செய்ய முடியுமா? மதராசிகளே''என்று தமிழக பத்திரிக்கையாளர்களை பார்த்து வட இந்திய பத்திரிக்கையாளர்கள் சொல்லும் சொல்லைக் கேட்டால் நாங்கள் எல்லாம் திருக்குறளை பின்தொடர்ந்து செல்லும் உண்மையான மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளலாமா?எனத் தோன்றுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை ஸ்பெக்ட்ட்ரம் ஊழல்,கேதன்பரேர் ஊழல்,டெல்லி ஊழல்,மதுகோடா ஊழல்,சத்யம் ஊழல்,ஹவாலா ஊழல்,ஹர்சத் மேக்தா ஊழல்,பீகார் கால்நடை ஊழல்,சுக்ராம் ஊழல்,போபார்ஸ் ஊழல்,காமன்வெல்த் விளையாட்டு ஊழல்,பெங்களூர் மைசூர்சாலை கட்டுவதில் ஊழல்,I .P .L .ஊழல் இன்னும் இதில் விடுபட்ட பல ஊழல்களை சேர்த்தால் நமக்கு தலையே சுற்றிகிறது .

அது சரி ஊழல் செய்யாமல் வாழ முடியுமா?ஊழலின் ஊற்றுக்கண் என்ன?எந்த செயலுக்கும் லஞ்சம் கொடுக்க கூடாது?லஞ்சம் வாங்கக் கூடாது?என ஒவ்வரு தனி மனிதர்களும் நினைத்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும்.இது இந்தியாவில்  சாத்தியமா?

வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ,தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ அதை சரிசெய்ய வரும் அரசு ஊழியருக்கு ஏதாவது பணம் கொடுக்கிறோம்.சினிமா பார்க்கும் அவசரத்தில் தேவைக்கு மேல் பணம் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி செல்கிறோம்.இப்படி சிறு சிறு செயலுக்கு எல்லாம் லஞ்சம் கொடுத்து பழகி,இப்பொழுது காவல் துறை,பத்திரபதிவு துறை, வட்டார போக்குவரத்து துறை,மருத்துவ துறை,சட்டத்துறை,நீதித்துறை,வனத்துறை,பொதுப்பணித்துறை,நகராட்சி,மாநகராட்சி,அலுவலகங்கள்,தணிக்கைத்துறை,என்று எல்லாத்துறைகளிலும் லஞ்சம் கொடுப்பதும்,வாங்குவது ரொம்ப சாதாரணமாகிவிட்டது.ஊழலும் பழகிவிட்டது.இந்த லச்சனத்தில் இந்தியா 2020 -வல்லரசாகி விடுமாம்.என்னத்த  சொல்ல.

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது,என்பதற்கு ஏற்ப ஒவ்வரு தனிமனிதனும் தனது கடமையை செய்ய லஞ்சம் வாங்கவோ,கொடுக்கவோ மாட்டேன் என்று நினைத்தால்தான் இந்தியா வல்லரசாக மாற வாய்ப்பு உள்ளது.மாற்றம் என்பது தனிமனிதன் மனதில் இருந்து தான் உருவாக வேண்டும் இதற்கேற்ற கல்வி முறையை குழந்தைப்பருவத்திலிருந்தே கற்றுக்குடுக்க வேண்டும்.மனித மனங்களில் நெறி முறைகள் வளர்க்கப்பட வேண்டும்.அதுவரை எத்தனை அண்ணா ஹசாரே வந்தாலும்,எத்தனை லோக்பால் சட்டங்கள் போட்டாலும் மாற்றம் என்பது இந்தியாவில் சாத்தியமில்லை.இதை இந்தியராகிய நாம் உணருவோமா?

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.

வெள்ளி, 6 மே, 2011

அட்சயதிருதியை-அப்பட்டமான வியாபார மோசடியா?

உலகம் முழுவதும் வியாபாரிகளின் ராச்சியம் தான் கொடிக் கட்டி பறக்கிறது.தனது பொருள்களை விற்ப்பதற்க்காக வியாபாரிகள் செய்யும் தந்திரம் சொல்லி மாளாது.மக்கள் நுகர்வு பொருள்களை வாங்கி குவிக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் வருடம் முழுவதும் ரூம் போட்டு யோசித்ததின் விளைவு தான் இந்த அட்சய திருதியை.

வியாபாரிகளுக்கு வருடம் முழுவதும் வியாபாரம் இருக்க வேண்டும்.ஏதாவது காரணத்தால் வியாபாரம் குறைந்து விட்டால்,உடனே ஆடிக்கழிவு,சம்மர் கொண்டாட்டம்,அட்சயதிருதியை,தீபாவளி,பொங்கல்,கிறிஸ்துமஸ்,ரம்சான்,        பக்ரீத்,விழாக்கால சலுகைகள்,பள்ளி மாணவ,மாணவிகளுக்கு,நோட்டுப்புத்தகம்,சீருடைதள்ளுபடிகள்,முகூர்த்த சீசன்கள் என்றால் ஒரு பட்டு புடவை எடுத்தால் இரண்டு இலவசம்.ஐயா,வியாபாரிகளே உங்கள் லீலைக்கு அளவே இல்லையா?

தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்க்காக மக்களை எந்த வழியில் எல்லாம் முட்டாள் ஆக்க முடியுமோ அந்த வழியை எல்லாம் தேர்ந்து எடுப்பார்கள்.பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகள்,இணையதளங்கள்,வானொலிகள்,மூலம் அட்சய திருதியை என்ற இல்லாத ஒன்றை உருவாக்குவார்கள்.தொலைகாட்சி செய்திகளில் தங்கம் விலை குறைவு,கிராமுக்கு அவ்வளவு தள்ளுபடி,இவ்வளவு தள்ளுபடி எனக்கதை விடுவார்கள்.அட்சயைதிருதியை முடிந்த பிறகு 500kilo தங்கம் விற்றது என கதை விடுவார்கள்.இன்று தங்கம் வாங்கினால் மங்கலம் வரும் என்று பத்திரிக்கை மூலம் கட்டுரை எழுதுவார்கள்.[போன அட்சயதிருதியையில் எனது நண்பன் வாங்கிய பத்து சவரன் தங்கம் திருட்டு போய் இன்னும் கிடைக்கவில்லை ,இது தனிக்கதை]மகாபாரதம்,ராமாயணம்,போன்ற கதைகளை எல்லாம் எடுத்து விட்டு,சாமிக்கதைகளை சொல்லி கட்டுரை எழுதி மக்களின் பணத்தை எல்லாம் சுரண்டுவார்கள்.தங்களிடம் உள்ள தரம் குறைந்த நகைகளை எல்லாம் இந்த அட்சயதிருதியையில் விற்று காசாக்கி விடுவார்கள்.

இதை சரி  செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்? அட்சயதிருதியை என்று சொல்லிக்கொள்ளும் ஒருநாள் மட்டும் உண்ணாவிரதம் இருந்து மௌன விரதம் கடைப்பிடித்தால் உங்கள் பணம் காப்பாற்றப்படுவதோடு,உங்கள் உடல் நிலையும் ஆரோக்கியமாக இருக்கும்.இதை மனிதனாகிய நாம் உணர்வோமா.

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.   
                  

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

.நாமெல்லாம் மனிதர்களா?விலங்குகளா?

ஒரு மனிதன்,இந்த உலகில் எப்படி நிம்மதியாக வாழ்வது?எதையும் சிந்திக்காமல் எதையும் வாசிக்காமல் எந்த நிகழ்வையும் பார்க்காமல் தாம் உண்டு தம் வேலை உண்டு என்று இருந்து விடலாமா?என்று எனக்கு அடிக்கடி மனக்கசப்பு ஏற்ப்படுவதுண்டு.நாமல்லாம் மனிதர்களா?இல்லை விலங்குகளா?என்று அடிக்கடி எனக்கு சந்தேகம் வந்து கொண்டே இருக்கிறது.

இணையதளங்களிலும்,ஊடகங்களிலும் இலங்கையில் ஏற்ப்பட்ட மனித உரிமை மீறல்களை கண்டால் உடம்பு முழுவதும் பதறுகிறது.கொடூரமாக கொள்ளப்படும் ஆண்கள்,நிர்வாணமாக்கப்பட்டு சிதைக்கப்பட்டு கொல்லப்படும் பெண்கள்,வெடி குண்டுகளினால் கைகளையும்,கால்களையும் உடல் உறுப்புகளையும் இழந்து கதறும் குழந்தைகள் என்று காட்சிகளை பார்க்க,பார்க்க இதயமே வெடித்து விடும் போல் இருக்கிறது.அனைவரையும் அழித்தப்பிறகு அங்குள்ள நல்[!]வாழ்வு முகாமில் மீதிருக்கும் மனிதர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வாழும் வாழ்க்கை நிலையைக் கண்டால் கண்களில் ரத்தம் தான் வருகிறது.

உலகத்தின் போர்க் குற்றவாளி என ஐ.நா.சபையினால் அழைக்கப்பட்ட ராஜப்பக்சேயின் கொடூரங்கள் ஒருபுறம் இருக்கட்டும்,ஐயா,உலகம் முழுவதும் பரவி இருக்கும் இலங்கை தமிழர்களே உங்கள் நல்வாழ்வுக்கு,இலங்கையில் மீதி வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இங்குள்ள அரசியல்வாதி யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை.பழ.நெடுமாறன்,வை.கோ,சீமான்,தமிழருவி மணியன் இன்னும் சில சாதாரண மனிதர்கள் இவர்கள்தான் உங்களுக்காக இங்கு பேசியும்எழுதியும் வருகிறார்கள்.

அரசியல்வாதி என்று சொல்லிக்கொள்பவர்கள்,முதல்வர் என்று சொல்லிக்கொள்பவர்கள் யாவரும் உங்களை வைத்து தமிழர்களிடையே எப்படி ஓட்டு சேகரிப்பது என்றுதான் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.உங்களை வைத்து மட்டும்மல்ல இங்குள்ள காமடி நடிகர்களை வைத்து இவர்கள் ஓட்டு வேட்டையாடும் நிகழ்வைக் கண்டால் நாம் எல்லாம் ஏன்?தமிழராய் பிறந்தோம் என வெட்கித் தலை குனிய வேண்டியருக்கிறது.நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள பச்சை தமிழனை நம்பாதிர்கள்.இவர்கள் எல்லாம் கபடதாரிகள்.இவர்கள் தங்கள் குடும்பங்களை மட்டுமே உயர்த்த வந்த சுயநலக்காரர்கள்.நீங்கள் யூதனாய் பிறந்தால் கூட உங்களை காப்பாற்ற அமெரிக்கா இருக்கிறது.ஆனால் நீங்கள் செய்த ஒரே பாவம் தமிழனாய்ப் பிறந்தது.


நண்பர்களை பதிவைப் படித்து கருத்தை தரவும். நன்றி.
                         

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

ஆதம் ஒரு கொடூரனா?

மனிதனின் தீராத ஆசையினாலே இன்று பல பாவங்கள் பவனி வருகின்றன.''அந்த கனியை புசியாதே'' என்று கடவுள் கட்டளையிட்ட பின்பும்,ஏவாளின் தூண்டுதலின் பேரில் ஆதம் அக்கனியை பறித்து உண்ண முதல் பாவம் நிறைவேற்றப்பட்டது.இக்கதை பைபிளில் உள்ளது.

ஆதம் வரலாற்றில் செய்த முதல் பாவம் இன்று காலங்காலமாக தொடர்ந்து வருகிறது.ஆதத்தின் ஆவி இன்று பல தலைமுறைகள் தாண்டியும் மனித மனங்களில் சம்மணமிட்டு ஆதிக்கம் செலுத்திகிறது என்றால் அது ஆதம் என்ற பெயரின் மகிமை தானோ?

ஆதத்திற்கு சுய சிந்தனை உண்டா?இந்த உலகில் நல்லது எது?கெட்டது எது?என்று பகுத்து பார்த்து அறியும் அறிவு உண்டா? இந்த உலகம் அனைத்து மனிதர்களுக்கும் உரியது என்று எண்ணாமல் தனக்கு மட்டுமே உரியது என்று எண்ணும் மனநிலைக்கு உரியவரா?உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தாம் சிறந்த முன்னுதுரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணாமல் தனது சிறு மூளையின் மூலமும்,குறுகிய  புத்தியின் மூலமும் இந்த உலகத்தை தவறான பாதைக்கு அழைத்து சென்ற மனநிலையை என்னவென்று சொல்வது?

ஆதத்திற்கு என்றுமே சுய சிந்தனை கிடையாது.அவர் எப்போதுமே அவரின் மனைவி தலையாட்டுதலின் பேரில் தான் வாழ்ந்தார்.வரலாறு செய்த பாவத்தின் விளைவு இன்று உலகில் ஆதம் என்ற பெயர் உள்ள அனைத்து மனிதர்களுமே அப்படித்தான் இருப்பார்களோ?என்னவோ?

ஐயா,மனிதர்களே நீங்கள் ஆதம் போல் வாழாமல்,ஆலம் [ஆலமரம் ]போல் வாழ்ந்தால் உலகம் சுபீட்சமடைவது போல் உங்கள் தலைமுறையும் குறைவில்லாமல் நீடித்து வாழும்.இதை மனிதனாகிய நாம் உணர்வோமா?        
  

புதன், 6 ஏப்ரல், 2011

இந்த உலகத்தின் முடிவு நம் கையீளா?

இந்த உலகம் தான் எவ்வளவு இயற்கையானது.எவ்வளவு அழகானது.பூமிப்பந்தில் முக்கால்வாசி நீரும்,கால்வாசி நிலமும் சேர்ந்து,விண்வெளியில் இருந்து பார்த்தால் [உபயம் ;டிஸ்கவரி சேனல்]நீல நிறத்தில் அதன் அழகே தனி.

நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்கு சென்ற பொழுது பூமிப்பந்தை பார்த்து அதன் அழகை,அதன் கோள வடிவத்தை கண்டு அவர் விவரித்த பாங்கு அலாதியானது.அக்காலக்கட்டங்களில் விண்வெளியில் இருந்து பூமியை பார்த்தால் பசுமை நிறத்தில் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.ஆனால் இன்று?விஞ்ஞானிகள் என்ன சொல்லுகிறார்கள்.''எரிந்த கரும் பந்து''போல் பூமி உள்ளது.இயற்கையை எந்த அளவுக்கு சிதைத்திருக்கிறோம்.

மனிதனின் நாடு பிடிக்கும் ஆசையில்,தன் உற்பத்தி பொருள்களை உலகம் முழுவதும் விற்ப்பதற்கு அவன் செய்யும் தந்திரத்தில்,தன் நாட்டின் பெட்ரோல் தேவைக்காக உலகத்தில் எங்கெல்லாம் பெட்ரோல் வளம் உள்ளதோ அந்த நாட்டில் எல்லாம் உள் நாட்டு கலவரங்களை ஏற்ப்படுத்தி,தான் உற்பத்தி செய்த ஆயுதங்களை சோதிக்கும் இடமாகவும்,மென்மேலும் ஆயுதங்களை உற்பத்தி செய்து லாபம் ஈட்டுவதற்கும் அவன் செய்யும் தந்திரம் சொல்லி மாளாது.

போர்களினாலும்,அதிக வாகன உற்பத்தியாலும்,அதிக நுகர்வு பொருள்களினாலும் இயற்கை செல்வங்களை அழிப்பதின் மூலமாகவும்,இந்த பூமி அதன் இயற்க்கை தன்மையிலிருந்து எவ்வளவு மாற்ற முடியுமோ அவ்வளவு மாற்றி விட்டோம்.இதன் விளைவு என்ன?


முக்கால்வாசி நீர் உள்ள இந்த பூமியில்,கால்வாசி நிலத்தில் உள்ள இந்த மனிதர்கள் செய்யும் அட்டூழியத்தால் இயற்க்கை அதன் சமன் நிலையை இழக்கும்.துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகும்.கடலின் நீர் மட்டம் உயரும்.முக்கால்வாசி நீர்,பூமி முழுவதுமாக நீராக மாற்றப்படும்.உலகம் அழியும்.

இதற்க்கு என்ன ஆதாரம்?என்று கேட்கிறிர்களா?இதற்க்கு ஆதாரம் வேண்டுமா?முடிவு மனிதர்களாகிய நம் கையில்தான் உள்ளது.சிந்திப்போமா?

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி

திங்கள், 4 ஏப்ரல், 2011

கடவுளை கண்டுபிடித்த ''சூப்பர் ஸ்டார்''யார்?

இந்த உலகில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு,அவற்றில் பல காலாவதியாகி மறைந்தே விட்டது.சில இன்றும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.அவற்றில் ஒன்றுதான் ''கடவுள்'' என்ற கருத்தாக்கம்.இந்த கடவுளை கண்டு பிடித்து,இந்த உலகத்தில் உலவ விட்ட மகாராசனை உண்மையிலே பாராட்ட வேண்டும்.அவருக்கு எவ்வளவு தொலைநோக்கு பார்வை இருந்தால்,இந்த ஒரு வார்த்தைக்குத்தான் மனிதன் பயப்படுவான் என்று சிந்தித்து,இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருப்பார்.


யாரோ கண்டு பிடித்த இந்த கடவுளை இன்று மனிதர்கள் அவர் அவர்களின் சுயநலத்திற்காக எப்படி எல்லாம் பயன் படுத்திக்கொள்கிறார்கள்.ஒரு நாட்டை ஆக்கிரமித்து கொள்வதற்கு,ஒரு இனத்தை அழிப்பதற்கு தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கு,அப்பாவி தொழிலாளர்களை பயம் காட்டி வழி நடத்தி செல்வதற்கு,குடும்பங்களில் தனது தலைமை பணியை தக்க வைத்துக் கொள்வதற்கு,ஊர்த் தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு இன்னும் விவரிக்க முடியாத அனைத்து செயல்களுக்கும் கடவுளையே ஆதாரமாக கொண்டு மனிதர்களை பணிய வைக்கிறார்கள்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்தகடவுளை பிடித்து தொங்கி கொண்டிருப்பார்கள்.ஐயா,நவீன மனிதர்களே,நீங்கள் ஏதாவது புதிதாக ஒன்றை  கண்டுபிடித்து அறிமுக படுத்துங்களேன்.  அதுவரைக்கும் இந்த கடவுளுக்கு  ''எக்ஸ்பரி டேட்டே''கிடையாதா?

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

உங்கள் ஓட்டு யாருக்கு?

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி விட்டது.இருமுனை போட்டி நிகழ்கிறது.தி .மு .க,அ.தி .மு க   இரு அணிகளில் ஜெய்க்க போவது யாரு?ஓட்டு போடுவதற்கு முன் இரு அணிகளின் பலம்,பலவீனம் தெரிந்து கொண்டால் நல்லது தானே. முதலில் தி.மு.க.

தி.மு.க.வின் பலம் 

1 .தமிழகம் முழுவதும் பாலங்கள் கட்டி நகரை அழகு படுத்துவது.
2 .சமச்சீர் கல்விமுறையை நடை முறை படுத்துவது.
3 .மினி பேருந்து வசதியை ஏற்படுத்தியது.
4 .1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி கொடுத்து ஏழைகளை ஆதரித்தது.
5 .உழவர் சந்தையை ஆரம்பித்தது.

தி.மு.க.வின் பலவீனம் 

1 .2 G ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்தியாவிலேயே வரலாறு காணாத ஊழல் செய்தது.
2 .மதுரையை சுற்றி கிரானைட்டு கொள்ளை.
3 .மணல் கொள்ளை.
4 .தமிழ் நாடு முழுவதும் தெருவுக்கு தெரு ''டாஸ்மாக்''கை தொடங்கி தாய்மார்களின் வயிற்றில் அடித்தது.
5 .கட்டபஞ்சாயத்து,ரௌடி இசத்தை ஒடுக்காதது.
6 .சாதாரண மக்களால் சமாளிக்க முடியாதபடி விலைவாசி உயர்வு.
7 .மின் தட்டு பாடு.
8 .தமிழகம் முழுவதும் வாரிசுகளின் அடாவடி.
9 .திரைத்துறையில் அனைத்து வாரிசுகளின் ஆதிக்கம்.
10 .இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை பிச்சை காரனாக்கியது.
11 .தமிழக மீனவர்கள் பிரச்சனையை கண்டும் காணாமலும் இருப்பது.
12 .ஈழ தமிழர் பிரச்சனையில் தன்னால் சாதிக்க முடியும் என்ற வாய்ப்பிருந்தும் ,மௌனமாக இருந்தது.
13 .வாரிசுகளுக்கு பதவி வாங்கி தர மட்டும் டெல்லி செல்வது .
14 .தொலை நோக்கு பார்வை இல்லாதது.
15 .வாரிசுகள் T .V .,ரேடியோ,விமானகம்பெனி என பணத்தை குவிப்பது.

அ .தி .மு க .வின் பலம் 


1 .குடும்ப உறுப்பினர்,வாரிசுகள் அதிகம் இல்லாததால் சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாதது.
2 .லாட்டரி சீட்டை ஒழித்தது.
3 .ரௌடி இசம்,கட்டபஞ்சயத்தை தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுத்தது.
4 .மழைநீர் சேகரிப்பை ஊக்குவித்தது.
5 .தொட்டில் பெண் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தது.
6 .துணிந்து முடிவு எடுக்கும் திறன்.
7 .கந்துவட்டி தடை சட்டத்தை கொண்டு வந்தது.

அ,தி.மு.க வின் பலவீனம்

1 .கூட்டணி கட்சிகளை மதிக்காமல் ''தான் தோன்றி தனமாக ''நடந்து கொள்வது.
2 .சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம்.
3 .சிறந்த எதிர் கட்சியாக செயல் படாமல் இருப்பது.
4 .சிறுபான்மை இனத்தவரை கண்டு கொள்ளாமல் இருப்பது.
5 .இவ்வளவு அனுபவம் பெற்றும் அரசியல் நெளிவு சுழிவுகளை படிக்காமல் இருப்பது.
6 .சிறந்த பேச்சாளர்கள் இல்லாதது.

இது எனது பார்வை தான்.இதில் விடுபட்டது நிறைய இருக்கலாம்.உங்கள் பார்வையையும் சேர்த்து ,சிந்தித்து வாக்களிக்கவும்.என்ன சரிதானே.

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி. 

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

தமிழனின் சாபம் ''சும்மா''விடுமா?

ஒரு மனிதன் தான் யார்? தான் வாழ்வது எதற்கு? தன்  பலம் என்ன?  தன்னால் சமூகத்திற்கு பலன் உண்டா? தனது சக்தியைக்கொண்டு சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியுமா? அப்படி சமூகத்திற்கு சேவை செய்ய தனது மனதிற்கு தைரியம் உண்டா? யாருடைய கைப்பாவையாக இல்லாமல் தன்னால் சுயமாக சிந்திக்க முடியுமா? என்றல்லாம் யோசிக்க வேண்டும்.இது தான் ஒரு தரம் உள்ள மனிதனின் செயல்.


''தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது ''.இது ரஜினி கடந்து  போன தேர்தலில் உதிர்த்த வார்த்தை.அதனால் ஆட்சி மாறியது . இப்பொழுது உள்ள நிலையில் ''தமிழ்நாட்டை ஆண்டவனால் காப்பாற்றமுடியும் ''என்று இவர் நினைக்கிறாரா? சொல்லுங்கள் ரஜினி.

நீங்கள் சினிமாத்துறையில் இருக்கிறிர்கள்.சினிமாத்துறை என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறது  என்பது உங்களுக்கு தெரியும்.ஒரு மேடையில் நீங்கள் சொல்ல முடியாததை நடிகர் அஜித் தைரியமாக சொன்னார்.இவ்வளவு ஆதிக்கம் சினிமாத்துறையில் நடந்து கொண்டிருக்கிறது .இதை உங்கள் படம் எந்திரநிலே உணர்ந்து இருப்பிர்கள். 

இப்பொழுது தேர்தல் நெருங்கி விட்டது.உங்களுக்கு சுய சிந்தனை உண்டு என்று நாங்கள் நினைக்கிறோம்.பலவிதங்களில் உங்களுக்கு நெருக்கடி தந்து ஏதாவது ''வாய்ஸ்''கொடுங்கள் என்று யாராவது உங்களை கட்டாயப்படுத்தலாம்.நீங்களும் உணர்ச்சி வசப்பட்டு இவர் இவருக்கு வாக்களித்தால் ''இந்த  பூமியே சுற்றாது''என்றல்லாம் பஞ்ச் வசனம் பேசி விடாதிர்கள்.இதை ஏன்? நாங்கள் சொல்லுகிறோம்  என்றால் நீங்கள் எந்த நேரத்தில் என்ன பேசுவீர்கள் என்று நீங்கள் நம்பும் அந்த ஆண்டவனுக்கே தெரியாது.நீங்கள் பாட்டுக்கு ஏதாவது பேசிவிட்டு ''அந்த ஆண்டவன் சொன்னான் இந்த அருணாச்சலம் செய்தான் ''என்ற ரீதியில் பேசினீர்கள் என்றால் ,தமிழனின் சாபம் உங்களை சும்மா விடாது இதை நீங்கள் உணர்வீர்களா?

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.

திங்கள், 28 மார்ச், 2011

அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா?

சண்டே.அப்பா ஓய்வு நாள்.தொலைகாட்சியில்  டிஸ்கவரி சானலில் ஏதாவது அறிவியல் நிகழ்ச்சியை பார்ப்போம்,பரபரப்பான தேர்தல் செய்தியை பார்ப்போம் என்ற ஆவலில் ரிமோட்டை மாற்றினால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

முதலில் ராஜ் தொலைக்காட்சியில் எதோ சினிமா கலாட்டாவாம்.இரு நடிகர் நடிகைகளின் உருவத்தை ஓட்டி வைத்துக்கொண்டுகீழே அலைபேசி எண்ணை தொடர்ப்பு  கொள்ள வேண்டுமாம்.சரியாக சொன்னால் 50 ஆயிராமாம்.தொடர்ப்பு கொள்வதற்கு நிமிடத்திற்கு 10 ரூபாயாம்.அவ்வுருவத்தை பிறந்த குழந்தை பார்த்தால் கூட சொல்லிவிடும்.ஆனால் தொடர்ப்பு கொண்ட யாரும் சரியாக சொல்லவில்லை.இப்படியும் ஒரு ஏமாற்று.
அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ராசிக்கல்,அதிர்ஷ்ட பெயர்,மற்றொரு சேனலில் தாயத்து,அம்மன் எந்திரம்,அடுத்த சேனலில் ஜோசியம்,உங்கள் ராசிக்கு என்ன பலன்?மற்றொன்றில் ஆண்மைக்குறைவா எங்களிடம் வாருங்கள் லேகியம் தருகிறோம்.இதுபோக நிசம் நிகழ்ச்சி என்ற பெயரில் பில்லி,சூனியம்,ஆவி,பேய் மாந்திரிகம்.அப்பப்பா போதுமடா சாமி,இவர்களும் இவர்கள் தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளும்.அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா?
ஐயா,தொலைகாட்சி அதிபர்களே,நிர்வாகிகளே உங்களுக்கு விளம்பரம் கிடைக்கவில்லை என்றால் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துங்கள்.தமிழர்களை எவ்வளவு கிறுக்கனாக ஆக்க முடியுமோ,எவ்வளவு மூடநம்பிக்கைவாதியாக மாற்ற முடியுமோ,அப்பாவி மக்களை எவ்வளவு பயம் காட்டிஉங்கள் ரேட்டிங்கை உயர்த்த முடியுமோ அனைத்தையும் செய்து விட்டு நீங்கள் தொலைகாட்சி நடத்துவதை விட கௌரவமான தொழில் நிறையவே உள்ளது.அதைச் செய்யலாம்.செய்வீர்களா?
நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும் .நன்றி .                        

சனி, 26 மார்ச், 2011

கல்வி மன்னர்களா?கந்துவட்டி மன்னர்களா?

             ஒரு மனிதன் தான் வயிறு வளர்ப்பதற்கு எத்தனையோ வலிகள் உள்ளன.பள்ளியில்,கல்லூரியில் நன்கு படித்த மாணவன் பிற்காலத்தில் ஒரு அரசு அலுவலகத்திலோ,இல்லை தனியார் அலுவலகத்திலோ பணிபுரிந்து காலத்தை ஓட்டலாம்.இன்னும் சற்று புத்திசாலிகள் சுயமாக தொழில் செய்து பொருளாதாரரீதியில் உயர்ந்த நிலையடைந்து சுகமாக வாழலாம்.இன்னும் சில விந்தையான மனிதர்கள் இருக்கிறார்கள்.இவர்கள்,தான் பொருளாதார நிலையில் மிக உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும்.ஆனால் சமூகம் மதிக்கும் ஏதாவதுதுறையில் இருக்க வேண்டும்.அதற்காக இவர்கள் போடாத வேசமில்லை.கல்விமன்னர்கள் எனச் சொல்லிகொல்வார்கள்.சமுகத்தை நாங்கள்தான் தூக்கி நிறுத்துவோம் என போலி வேசமிட்டு சமுகத்தை சுரண்டுவார்கள்.
                                 இன்று சமுகத்தில் பெரிய மனிதர்கள் என்று சொல்லி கொள்பவர்களை நன்கு கவனித்து பாருங்கள்.அவர்கள் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியோ,பொறிஇயல் கல்லூரியோ,ஒன்றுமில்லை என்றால் ஒரு மழலையர் தொடக்க பள்ளியோ இல்லாமல் இருக்க மாட்டார்கள்.தாங்கள் பிறந்ததே இந்த உலகிற்கு சேவை செய்வதற்கு மட்டும் தான் என்ற ரீதியில் பேசுவார்கள்.
                        ஐயா,உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள்.நீங்கள் தொடக்கபள்ளி ஆரம்பித்து,மெட்ரிகுலேசன் பள்ளியாக மாற்றி,மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி எவ்வளவு பணம் மக்களிடம் கறக்க முடியுமோ அவ்வளவு பணத்தை கரக்கிறிர்கள்.கந்து வட்டி கும்பலை விட மோசமாக பணத்தை பிடுங்கிரிர்கள்.கல்வியை கடை சரக்காக மாற்றி விட்டிர்கள்.
                இன்று அரசும் உங்களுக்கு சாதமாகத்தான் இருக்கிறது.எதோ,கிராமப்புற மாணவர்கள்,நகர்புற மாணவர்களுடன் போட்டிட முடியாமல் திணறுவார்கள் என்ற காரணத்தால் இன்று பொறிஇயல்,மருத்த்வதுறைக்குநுழைவுத் தேர்வையே ரத்து செய்து விட்டார்கள். அவர்களின் உண்மையான நோக்கம் கிராமப்புற மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.அரசியல்வாதிகளும்,அவர்கள் பினாமிகளும் நிறைய பொறிஇயல் கல்லுரி கட்டி விட்டார்கள்.படிக்க ஆள் இல்லை.அதற்கு தடையாக நுழைவுத் தேர்வு உள்ளது.உடனே ''நுழைவு தேர்வை நிறுத்து,கிராமப்புற மாணவர்களின் நிலையை உயர்த்து ''என கோஷமிட்டு சாதித்து விட்டிர்கள்.
                             ஐயா,சமுக சேவர்கலே நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன.வட்டித்தொழில் செய்யலாம்,சீட்டாட்டம் நடத்தலாம்,குதிரை ரேசில் பங்கு கொள்ளலாம்,டாஸ்மாக் பாரை நடத்தலாம்,பங்கு மார்க்கட்டில் ஈடுபடலாம்,கிரிக்கெட் சூதாட்டத்தில் கலக்கலாம்,பல அமைட்ச்ர்களுக்கு பினாமியாக இருக்கலாம் இப்படி பலதுறை இருக்கும்பொழுது நீங்கள் ஏன் கல்வித்துறைக்கு வர வேண்டும் கல்வித்துறை என்பது சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு உரியது.அதுதான் உங்களிடம் இல்லையே.''உங்கள் வழிதனி வழியாக இருக்கும்பொழுது உங்களுக்கு ஏன்?இந்த கல்வி வழி''.இந்த வேஷத்தை கலைத்து விட்டு நீங்கள் உடுத்தும் வெள்ளை ஆடைப்போல் தூய்மையாக இருப்பிர்களா?
                           நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தை தரவும்.நன்றி.    
         

வியாழன், 24 மார்ச், 2011

அரசியல்வாதிகளின் ''சினிமா மோகம்'' அழியுமா?

                        ஒரு அரசியல்வாதி தான் செய்த சாதனைகள்,தான் செய்ய போகும் திட்டங்கள் முதலியவற்றை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பது தான் ஒரு பழுத்த,வயது முதிர்ந்த,அனுபவத்தில் கொட்டைபோட்ட அரசியல்வாதிகளின் நியாயமான தன்மை.மக்களின் மதியை மயக்காமல்,இலவசங்களை வாரி வழங்காமல் எங்களுக்கு நீங்கள் வாக்களித்தால்,உங்கள் வாழ்வு நல்வழி பெற எங்களால் முயன்றதை செய்வோம் என்று சொல்வதுதான் ஒரு தரமுள்ள அரசியல்வாதியின் செயல்.                                                                                                                                                                           ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் கூத்து  என்ன?  மேடையில் முதல்வர் உட்பட பல கட்சி அரசியல் தலைவர்கள் அமர்ந்திருக்க,அதற்க்கு சம்பந்தமே இல்லாத காமடி நடிகர் வடிவேலுவை பேச வைத்து வாக்கு கேட்கிறார்கள் என்றால் இவர்கள் எல்லாம் ஏன்?அரசியலுக்கு வர வேண்டும்.இவர்கள் தங்களை நம்பவில்லை,தாங்கள் செய்த சாதனைகளை நம்பவில்லை.மாறாக சினிமா மோகத்தையே நம்புகிறார்கள் அந்த மகராஜன் வடிவேலுவோ,எதிர் கட்சி தலைவரை வாடா,போடா,குடிகாரப்பயல்,24 -மணிநேரமும் ரவுண்டுகட்டி தண்ணி அடிப்பவன் என்ற சபை நாகரிகம் கூட தெரியாமல்  பேசுவதை முதல்வரும் சிரித்து வரவேற்கிறார் என்றால் நீங்கள் என்னவிதமான அரசியலை கொண்டு வர முயர்ச்சிக்கிரிர்கள்?நீங்கள் நடத்திக்கொண்டிருப்பது தானே ''டாஸ்மாக்''.அதைத்தானே நாங்கள் குடிக்கிறோம்.அது தப்பு என்றால் அதை ஏன்?நடத்தி கொண்டிருக்கிறிர்கள்?மக்கள் சினிமா மோகத்தில் மிதக்கிறார்கள் என்று நீங்களாக நினைத்துக் கொண்டு உங்கள் மகனில் இருந்து,பேரன் வரை சினிமாவில் நடிக்க ஊக்கப்படுத்திருகிர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் சினிமா மோகத்திலிருந்து மீண்டு வருகிறார்கள்?என்ற கதை உங்களுக்கு தெரியமா?                                                                                                                                   எதிர் கட்சித் தலைவர் அம்மா இருக்கிறார்.தன் கூட்டனிக்கு நடிகர் பட்டாளமே வந்து விட்டது.இனி நாம் தான் முதல்வர் என்ற குருட்டு நம்பிக்கையில்,அவருடன் பல வருடங்களாக கூட்டணி வைத்த நல்ல பேச்சாளர்கலை வைத்துள்ள வை.கோ.கூட்டணியை நிராகரிக்கிறார்.வை.கோவை நீங்கள் ஏன்?நிராகரிக்கிரிர்கள்?[எந்த கம்பெனி முதளாலிடம் பணம் வாங்கினீர்கள் .இது தனிக் கதை ]நீங்கள் சினிமாவில் இருந்து வந்து சாதித்ததை போல்,இப்போது விஜயகாந்த்,சரத்குமார்,விஜய் முதலியவர்களை வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று கணக்கு போடுகிறிர்கள்?போடுங்கள்,போடுங்கள்.                                                                                                                    ஐயா,அரசியல்வாதிகளே நீங்கள் செய்த சாதனைகள்,உங்கள் சுயநலமில்லா போக்கு,உங்கள் குடும்பங்கள் வாழ்வதற்காக தமிழ்நாட்டை சுரண்டாமல் இருக்கும் தன்மை,பத்திரிக்கைக்கு நீங்கள் கொடுக்கம் சுதந்திரம்,நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்க அதை விட்டு விட்டு சினிமா நடிகர்களின் பாராட்டு விழாவில் போய் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பது,தனது குடும்ப உறுப்பினரை வைத்து ஊழல் செய்தால் மாட்டி விடுவோம் எனத் தெரிந்து அப்பாவி மனிதர்களை வைத்து ஊழல் செய்வது,இலவசங்களை கொடுத்து தமிழர்களை பிச்சைக்காரனாக ஆக்கும் தன்மை,இதை வைத்துதான் உங்களுக்கு வாக்களிப்பார்களே ஒழிய உங்களின் சினிமா மோகத்தை வைத்தல்ல.இதை நீங்கள் உணர்வீர்களா?                                                                   நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை சொல்லவும்.நன்றி .      

செவ்வாய், 22 மார்ச், 2011

மலையாளிகளின் ஆதிக்கம் குறையுமா?

                                                   வளமான நாடு முன்றாம் நாட்டை ஆதிக்கம் செய்கிறது.ஒரு இனம் மற்ற இனத்தை ஆதிக்கம் செய்கிறது.மேல் சாதி கீழ்  சாதியை ஆதிக்கம் செய்கிறது.ஒரு மொழிக்காரன் பிறிதொரு மொழிக்காரனை ஆதிக்கம் செய்கிறான்.மனிதர்கள் ஆதிக்கம் செய்யாமல் வாழவே மாட்டார்களா?                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  ஒரு அலுவலகத்திலோ,வியாபார நிறுவனத்திலோ மேல் நிலை வேலைக்கு எல்லாம் மலையாளிகளே கொடி கட்டி பறக்கிறார்கள்.தமிழன் எல்லாம் கீழ் நிலை வேலையே செய்து கொண்டிருக்கிறான்.இது நடப்பது சிங்கார சென்னையில் தான்.தமிழ்நாட்டில் இருந்து கொண்டு மலையாளிகள் தமிழர்களை ஆதிக்கம் செய்கிறார்கள்.சென்னையில் மட்டுமல்ல வளைகுடா நாடுகளிலும் மலையாளிகளின் ஆதிக்கமே கொடிக்கட்டி பறக்கிறது.திறமை இருக்கோ/இல்லையோ அவர்களுக்குள் கூட்டணி வைத்துக்கொண்டு மலையாளிகள் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.ஆனால் இளிச்சவாயன் தமிழர்கள் தனக்குள் சண்டை இட்டுக் கொண்டு பிரிந்து கீழ் மட்ட அடிமை வேலையே செய்கிறார்கள்.                                                                                                                                                                                                    தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் அரிசி,காய்கறிகள்,கோழி,முட்டை போன்ற உணவுப் பொருள்கள்,தமிழ்நாட்டில் தயாராகும் மின்சாரம் போன்றவை அவர்களுக்கு வேண்டும்.ஆனால் அவ்வுணவுப்பொருள்களை உற்பத்திப்பண்ணும் தண்ணீரை அவர்கள் தமிழ் நாட்டிற்கு தர மாட்டார்களாம்.இது என்னங்க நியாயம்?இதை சொன்னது நானில்லை.அவர்கள் நாட்டு கேரள எழுத்தாளர் பால் சக்கரியா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.அதைப் புரியாத நம்மூர் தமிழ் எழுத்தாளர் சாருநிவேதிதா ''என்னை மலையாளிகள் கொண்டாடுகிறார்கள்''என்கிறார்.உங்களை ஏன்? கொண்டாடுகிறார்கள்,நீங்கள் தமிழரின் பலம்,பலஹினம் முதலியவற்றை எழுதிக் கிழிக்கிருரிர்கள்.அதை அவர்கள் நன்கு வாசித்து.தமிழர்களை எப்படி ஆதிக்கம் செலுத்த வேண்டுமோ அப்படி ஆதிக்கம் செலுத்திகிரார்கள்.                                                                                                                                இன்னொரு கேரளத்து சிங்கம் இருக்கிறார்.அவர்தான் நடிகர் ஜெயராம்.அவர் சென்னையிலே இருந்து கொண்டு சினிமாவில் நன்கு சம்பாதித்துக் கொண்டு,அவர் வீட்டில் சமையல் செய்யும் தமிழ் பெண்ணை ''கறுத்த தடித்த தமிழச்சி ''என்று கொச்சை மொழி பேசி கேலி செய்யும் அவலத்தை என்னவென்று சொல்வது?                                                                                                                                                      ஐயா மலையாளிகளே உங்கள் மொழி பாசம்,ஊர் பாசம் உங்களிடமே இருக்கட்டும்.பிழைக்க வந்த இடத்தில் உங்கள் நிலை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.இல்லையென்றால் காலம் உங்களை அப்புறப்படுத்தும்.                                                          நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தை சொல்லவும்.நன்றி.             

திங்கள், 21 மார்ச், 2011

மனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா?

                இந்த உலகில் மனிதர்கள் ஏன் பிறக்கிறார்கள்?ஏன் வாழ்கிறார்கள்? மனித வாழ்கைக்கு தான் அர்த்தம் என்ன?மனிதன் தான் வாழ்வதால் என்ன?சேதியை இந்த உலகிற்கு தெரிவிக்கிறான்?                                                                                                                 ஒரு அதிகாரி தனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டால்,அந்த அதிகாரம் என்பது சமூகத்தை நல்வழியில் நடத்தத்தான் என்பதை உணர்ந்து அதன்படி செயல் படுகிறார்களா?அதிகாரம் தனக்கு கிடைத்து விட்டால் ''தான் ''என்ற அகங்காரம் கொண்டுஅந்த அதி   காரத்தை எந்த அளவுக்கு கீழான செயல்களுக்கு பயன்படுத்த முடியுமோ? அந்த அளவுக்கு பயன் படுத்தி சமூகத்தை தவறான பாதைக்கு வலி நடத்திச் செல்லும் கொடுமையை என்னவென்று சொல்வது?''காவல் துறையின் ஈரல் கேட்டு விட்டது ''என்று தமிழக முதல்வர் சொல்லும் அளவுக்கு அவர்களின் செயல் உள்ளது.அவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதால் சமூகத்தில் எத்தனை விதமான மனிதர்கள் பாதிக்கப்பட்டு அவர்களும் சமூகத்தை தண்டிக்கும் அளவுக்கு மாறி விடுகிறார்கள்.                                                                                                                       காவல் துறை மட்டுமல்ல உலக அரசியல் வாதியிலிருந்து உள்ளூர் ரௌடிகள் வரை தான் இருக்கும் நிலை மறந்து,தன்னை காப்பாற்றிக் கொள்ள வழி தெரியாமல் போலி வேசமிட்டு,போலி அதிகாரத்தை வைத்துக் கொண்டு சமூகத்தை பால் படுத்தி வருகிறார்கள்.அதிகாரிகள்,அரசியல்வாதிகள் ரௌடிகள் மட்டுமல்ல நமது உலக நாட்டு அதிபர்களும்,பிரதமர்களும்,முதல்வருகளும் தலைவர்களும் தமக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு தங்கள் கடைமையை சரி வர செய்யாமல் போனதால்தான் இன்று மக்கள் புரட்சி செய்து அவர்களை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குடும்ப அமைப்பிலும் ''தான்'' தான் எல்லாம் என்ற அகங்காரம் தான் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றன.                                                                                                                                                                       இப்படி ஒவ்வரு சூழ்நிலைக்கேற்ப மனிதன் தான் மேற்கொள்ளும் கடைமையை சரிவர செய்ய தடையாக இருக்கும் மனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா?                                                                                                                                       நண்பர்களை பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தைச் சொல்லவும்.நன்றி .

திங்கள், 14 மார்ச், 2011

அமெரிக்க அரசு சிந்திக்குமா?

                                அன்பு என்பது என்ன ?சக மனிதர்களின் மீது,சக உயிர்களின் மீது செலுத்தப்படுவது.இவ்வாறு செலுத்தப்படும் அன்பை சக நாட்டின் மீது செலுத்த முடியாதா? சக நாட்டின் மீது அன்பை செலுத்தி அவர்களும் மனிதர்கள் தான் அவர்களும் இந்த பூமியில் வாழ உரிமை உள்ளது என்று நினைப்பதுதான் அறிவுடைய எத்தகைய மனிதர்களின் நிலையும். ஆனால் இந்த உலகை ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா அத்தகைய நிலைப்பாட்டை கை கொண்டுள்ளதா?                                                                                                                                                               ஐயா,அமெரிக்க அரசாங்கமே நீங்கள் ஆதிக்கம் செலுத்தாத நாடு இப்பூமியில் எங்காவது உள்ளதா?நீங்கள் சுகமாக வாழவும்,உங்கள் தேவைக்கு எங்காவது,எந்த வழியிலாவது முட்டுக் கட்டை வந்தால்,அந்த இடத்தை உண்டு,இல்லை என நிர்முலமாக்கி அழித்தால் தான் உங்களுக்கு தூக்கமே வருகிறது. ஏன்இந்த கொலை வெறி?நீங்கள் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறிர்கள்.உங்கள் நாட்டு குடி மகன் எப்படி மனிதர்களோ!அதைப்போலத்தான் சக நாட்டு மனிதர்களும்.ஒரு சாரர் மட்டும் நன்கு செழித்து வளர வேண்டும்,மற்றவர் எப்படி போனால் என்ன?என்ற உங்கள் மனப்போக்கை என்னவென்று சொல்வது?நீங்கள் ஆதிக்கம் செலுத்தி வளமாக வாழ்வதால்,உங்கள் மனப்போக்கையே இந்த உலகில் உள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் தனது மனப்போக்காக எடுத்துக் கொண்டுள்ளது.                                                                                                                                                                              நீங்கள் எப்படி சக நாட்டை அழிப்பதற்கு என்னவிதமான தந்திரங்களை கை கொள்கிரிர்களோ,அதே முறையை வைத்தே ஒவ்வரு நாட்டு மனிதர்களும் தனது குடும்பங்களை,தனது சொந்த பந்தங்களை,தனது நாட்டிளிலுள்ள பிற குடிமகன்களின் சொத்தையோ,அவனது வாரிசையோ அழிப்பதற்கு உங்களது அளவுகோலையேஉதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த உலகில் நீதி,நேர்மை,உண்மை போன்ற நல்நெறி கொள்கைகள் உண்டா?இதை கடைபிடிப்பவர் நன்றாக வாழ முடியும் என்றுதான் உங்கள் நாட்டு பெரியவர்கள் முதல் உலக நாட்டு பெரியவர்கள் வரை கற்ப்பித்து கொடுத்து சென்றுள்ளார்கள்.ஆனால் இந்த நன்னெறி கொள்கையை நீங்கள் கடைப் பிடிக்கிரிர்களா?என்பது உங்கள் மனசாட்சிக்குத்தான் வெளிச்சம்.நீங்கள் எடுக்கும் ஒவ்வரு தவறான முடிவும்,வருங்காலசந்ததினருக்கு தவறான வழிகாட்டுதலாக ஆகி விட வாய்ப்பு உள்ளது.உலகை தவறான போக்கில் வழி நடத்தி செல்கிரிர்கள்.                                                                  இதை அனைத்தும் தெரிந்தும்,நாங்கள் இந்த நன்நெறி கொள்கைக்கு எதிராகத்தான் செல்வோம் என்று நீங்கள் முடிவேடுத்தால்,காலம் உங்களை சீராட்டி மகிழும் என்று நினைக்காதிர்கள்.இந்த பூமிப் பந்தில் உங்கள் தேசமே இல்லாமல் போய் விடும்.இதற்க்கு யாருடைய ஒத்துழைப்பும் தேவை இல்லை,இயற்கை ஒன்றே போதும்.                                                                                                                                                                                                 நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தை தெரிவிக்கவும்.நன்றி.                                                        

சனி, 12 மார்ச், 2011

இயற்கை நமக்கு கற்ப்பிக்கும் பாடம் என்ன?

                   காலையில் எழுகிறோம்,அலுவலகங்களுக்கோ,வியாபார நிறுவனங்களுக்கோ,வேறு எங்காவது பணி புரியவோ செல்கிறோம்.மாலை வருகிறது வீடு திரும்பிகிறோம்,உணவருந்திகிறோம்,தூங்குகிறோம்.இதுதான் நமது அன்றாட வாழ்கைமுறை.இதை மீறி,இந்த உலகம் என்பது என்ன?இந்த உலகம் ஏன்?நம்மை தண்டிக்கிறது  என்றுஎன்றாவது யோசித்து இருக்கிறோமா?                                                                                                                                                                பூமிக்கு அருகில் சந்திரன் நெருங்கி வரும் பொழுது எல்லாம் ஏதாவது இயற்கை அழிவை பூமிக்கு அன்பளிப்பாக சந்திரன் வழங்குகிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.வரும் மார்ச் மாதம் 19 -தேதி பூமிக்கு  அருகில் சந்திரன் வருகிறது.இதன் முன்னேர்ப்பாடே இந்த ஜப்பானிய சுனாமி.இதற்கு முன்பும் பூமியை சந்திரன் நெருங்கி வந்த சமயங்களில் பல இயற்கை அழிவுகள் உண்டானது நிறுபிக்கப்பட்டுள்ளது.                                             இயற்கை நிகழ்வு இப்படி செல்ல,நாம் நமது வாழ்கை முறையில் யாரும் எப்படியும் போய்  செத்து தொலையட்டும் ,நாம் மட்டும் நன்கு வாழ [!]என்ன தந்திரம் செய்தாவது இந்த இயற்கையை சேதப்படுத்தியாவது வாழ்ந்து விட வேண்டும்,என்று திட்டமிடுகிறோம்.அன்றாடம் நாம் உபயோகிக்கும் ஏர்கண்டிசன்,குளிர்சாதனப்பெட்டி விடும் வாயுக்களால் காற்று வெளியில் ஓசான் மண்டலம் ஓட்டையாகி பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.ஒவ்வரு நாட்டு அணுக்கதிர் வீச்சு கழிவுகள்,மின்னணுக் கழிவுகள்,மருத்துவக் கழிவுகள்,கன உலோகமான கேட்நிய,பாதரசம் போன்ற தொழிற்சாலை கழிவுகள் முதலியவற்றை எப்படி அழிப்பது என்பது தெரியாமலே,ஒவ்வரு நாட்டு கடலிலும் யாருக்கும் தெரியாமல் கொட்டி வருகிறோம்.இதன் சமிபத்திய பாதிப்புதான் சோமாலியா நாட்டு மக்களின் நிலைமை.வளர்ந்த நாடுகள் எனச் சொல்லிக் கொள்ளும் ஐரோப்பிய,அமெரிக்க நாட்டு அரசுகளின் சுயநலமான போக்கினால்,சோமாலிய நாட்டு மக்கள் சொல்ல முடியாத நோய்களிலும்,வாழவே முடியாத நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.இதற்கு காரணம் அவர்கள் நாட்டு கடற்பகுதியில் அனைத்து மேலே சொன்ன கழிவுகளையும் கொட்டி அவர்கள் வாழ்வையே இன்று கேள்வி குறி ஆக்கி விட்டார்கள்.சோமாலிய நாட்டு கடற்பகுதியில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள மூன்றாம் நாட்டு கடற்பகுதியில் உள்ளும் இத்தகைய கழிவுகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கொட்டி,அங்குள்ள மீன்வளம்,பிற  உயிர்கள் முதலியவற்றை அழிப்பதோடு கடல் மாதாவையும் நிலை குலைய வைக்கிறார்கள்.                                                  அட மனிதர்களே!இயற்கையை இப்படி நாசப்படுத்தியதால் தான்,நீங்களும் வாழ வேண்டாம் என்று இயற்கை நம்மை தண்டிக்கிறது.இதை நாம் உணருவோமா?இதை தீர்ப்பதற்கு என்ன வழி?என்று சிந்திப்போமா?                                                                                                                                       நண்பர்களே பதிவை படித்து கருத்தை தரவும்.நன்றி.                                  பின்குறிப்பு ;விரிவான விளக்கத்திற்கு ஜூலை 2009 உயிர்மை இதழின் சோமாலியா கட்டுரையை வாசிக்கவும்.                                   

செவ்வாய், 8 மார்ச், 2011

நரேந்திர மோடி நீங்கள் கொன்றது எத்தனை பாடி?

                             ஒரு நாட்டின் நிர்வாகி என்பவர்,தலைவர் என்பவர்,தன நாட்டின் எந்த குடிமகனின் மதத்தையோ,ஜாதியையோ,ஏழை  பணக்காரன் என்ற வித்தியாசத்தையோ,உயர்வு,தாழ்வு என்ற பேதத்தையோ பார்க்காமல் அனைவரும் நமது மக்கள் என்று எண்ணுவதே அழகு.அதுவே தலைவனுக்குரிய பண்பு.                                                                                                                                                          ஐயா,  நரேந்திர மோடி உங்களுக்கு மனசாட்சி உண்டா?உங்கள் மனசாட்சி உங்களிடம் பேசுமா?உங்கள் மனசாட்சி போடும் ஓலத்தில் உங்களுக்கு தூக்கம் வருமா?                                                      கோத்ரா ரயில் சம்பவத்தை யாரும் நியாயப்படுத்தி விட முடியாது.யாரு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் அதில் மாற்று கருத்து இருக்கவே முடியாது.சம்பவம் நிகழ்ந்து விட்டது.அடுத்து என்ன நடக்கும் என்ற தகவல் உங்களுக்கு கிடைத்திருக்கும்.அப்பொழுது உங்கள் மனம் என்ன நினைத்தது,நியூட்டனின் விதியையா?''ஒவ்வரு வினைக்கும் எதிர் வினை உண்டு ''இப்படியா?உங்கள் மூளை சிந்தித்தது.ஆகா!என்னவிதமான அறிவியல் பார்வை.நீங்கள் குஜராத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக மாற்ற இந்த பார்வை உதவும்.குஜராத் மக்களிடம்  இந்த அறிவியல் பார்வையை போதித்திர்கள் என்றால் நீங்கள் போன இடம் புல் முளைத்திருக்கும்.ஆனால் மக்களிடம் மதவாதம் என்ற இல்லாத ஒன்றை சொல்லி அவர்கள் அறிவை கெடுத்து,ஜெயித்து இன்று முதல்வராக அமர்ந்து இருக்கிறிர்கள்.                                                                                                                                           தார்மீகரீதியில்  நீங்கள் முதல்வராக தொடர எந்த நியதியும் இல்லை என்று தெரிந்த போதிலும் ,நீங்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறிர்கள்.காலம் உங்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்குமா?நிச்சயம் கொடுக்கும்.உங்கள் மூளை இயங்கும் வரை,உங்கள் இதயம் துடிக்கும் வரை உங்கள் மனசாட்சி உங்களை அரித்துக்கொண்டே தான்  இருக்கும் இதுதான் உங்களுக்கு தண்டனை.நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?உங்கள் மனசாட்சிதான் உங்களை தூங்க விடுவதே இல்லையே?உயிர் இருந்தும் நீங்கள் செத்த மனிதர்.                                                                                                                                             நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.         

திங்கள், 7 மார்ச், 2011

பெண்கள் போகப் பொருள்களா?

[  மகளிர் தினம்-சிறப்பு கட்டுரை ]  
                                         பெண் என்பவள் யார்?அவள் சக மனுசி.எப்படி ஆணுக்கு இதயம்,மூளை மற்றும் அனைத்து உறுப்புகளும் உள்ளதோ,அதைப்போல அனைத்து உறுப்புகளும் உள்ள மனுசிதான் அவள்.ஆனால் இந்த பெண்களை சில ஆண்களும்,ஆணாதிக்க நிறைந்த ஊடகத்துறையும் எப்படி கையாளுகின்றன?                                ஒரு மனிதனின் மனதை மயக்கக்கூடிய   மதுபானங்கள்,கஞ்சா போன்ற போதை வஸ்துவைப் போல பெண்களையும் ஒரு போகப் பொருளாக இந்த ஊடகங்கள் கையாளுகின்றன.                                                                                   பெண்களுக்கு சுய அறிவே கிடையாதா?சுய சிந்தனையே கிடையாதா?அவர்கள் ஆணைச் சார்ந்துதான் இயங்க வேண்டுமா?ஆண் சொல்வதை எல்லாம் கேட்டு தலையை ஆட்ட வேண்டுமா?இதை காலங் காலமாக மத நூல்களில் இருந்து நாம் போற்றி பாதுகாக்கும் திருக்குறள் வரை பெண்களை தாழ்வாகவே பேசி வருகின்றன.இதில் எது உண்மை.                                                                             ஒரு பெண்ணை பார்த்தால் வயது வந்த ஆண்களுக்கு மோகமோ,காமமோ வருவது இயல்பான இயற்கையான ஒரு நிகழ்வு.அடுத்த தலைமுறையை உருவாகக்கூடிய ஒரு உத்வேகம்.எதிர் எதிர் பாலினருக்கு ஏற்படக்கூடிய இயல்பான ஒரு ஈர்ப்பு.இதை ஆணும் சரி,பெண்ணும் சரி இயல்பாகவே உணர்வார்கள்.ஆனால் இந்த உணர்வை வைத்து ஊடகங்களும்,குறிப்பாக தமிழ் சினிமாக்காரர்கள் செய்யும் அக்கிரமங்கள் சொல்லி மாளாது.பெண்களை அணுகவே பட முடியாத ஒரு உயிரிய பொருளாகவும்,அவளை பார்த்து ஆண் எச்சில் வடிப்பதைப்போலவும் தவறாக சித்திகிரிக்கிரார்கள்.இதை எல்லாம் பார்த்து விட்டு இந்த இளைய சமுதாயம் பெண்களை எப்படி எதிர் கொள்ளும்?தமிழ் பட கதாநாயகன் பெண்களை எவ்வளவு மோசமாக கையால்கிறானோ அதற்கேற்றவாறு அவன் ஹீரோ?                                                 அட ஞான  சூனிய தமிழ் இயக்குனர்களே நீங்கள் சினிமாவில் காட்டும் பெண்களைப் போல்தான் உங்கள் வீட்டுப் பெண்களும் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறிர்களா?தமிழ் பட கதாநாயகியை என்றாவது சுய சிந்தனையுள்ள பெண்ணாக காட்டியிருர்கிரிர்களா?  ஆனால் இதை எல்லாம் பார்த்துதான் தமிழ் பெண்கள் ,தமிழ் சினிமாவையே பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள்.உங்களுக்கு பெண்களின் உண்மைத்தன்மையை படம் எடுக்க தெரிந்தால் எடுங்கள்,இல்லை என்றால் நீங்கள் வயிறு வளப்பதற்கு எத்தனையோ வேலை உள்ளது.அதைச் செய்யுங்கள்.பெண் என்பவள் என்றைக்குமே ஆண்களின் சகவழி நண்பன் என்ற போக்கில் நீங்கள் எப்போது படம் எடுக்கிரிர்களோ!அன்று தான் தமிழ் சினிமா உருப்படும்.இதை தமிழ் பெண்கள் நன்கு உணர்வார்கள் .ஆனால் நீங்கள்?                         

                                                 பெண் நண்பிகளே பதிவை படித்து ஓட்டைப் போட்டு முக்கியமாக கருத்தை உங்கள் பார்வையில் விரிவாக தரவும்.நன்றி .   

ஞாயிறு, 6 மார்ச், 2011

சாரு நிவேதிதா மூடநம்பிக்கைவாதியா?

                                              உயிர்மை,ஆனந்த விகடன் போன்ற தமிழில் பிரபல பத்திரிக்கையில் எழுதி வருபவர் இவர்.இவர் தன்னை தமிழில் யாரும் மதிக்கவே இல்லை,ஆனால்மலையாளத்தில் என்னை கொண்டாடுகிறார்கள் என்று அடிக்கடி புலம்புவர்.இணையதளங்களிலும் சரி,பிரபல பத்திரிக்கையிலும் சரி என் பெயரே உச்சத்தில் உள்ளது.ஆனால் இந்த பாழாய்ப்போன தமிழ்ச் சமூகம் என்னை கண்டு கொள்வதே இல்லை என்று தாம் எழுதிய பத்திரிக்கையிலும்,இணையதளங்களிலும் தன் ஆதங்கத்தை தெரிவிப்பார்.                                                                                                                                                                                          ஒரு எழுத்தாளர் என்பவர் சமூகத்தில் உள்ள எந்த மக்களுக்கும் தவறான பாதையை காட்டக் கூடவே கூடாது.தனக்கு தெரியாத எந்த நபரையும் ஆகோ,ஓகோ வென புகழ கூடாது.ஆனால் இவர் சமிபத்தில் நித்தியானந்தா என்பவரின் உண்மை சீடனாகவே தன்னைக் காட்டிக்கொண்டு பத்திரிக்கையில் எழுதி வந்தார்.அவர் புகழ் பத்திரிக்கையில் நாறியவுடன் ''கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ''என்பதைப் போல தான் நிரபராதி என்றும்,அவர் உலக மகா'' செக்ஸ் பாம் ''என்பதைப் போலவும் எழுதி காசுப் பார்த்து விட்டார்.                                                            அது மட்டுமா செய்தார்?அவர்  தொகுத்த  சில கட்டுரையிலும் அசரத் [இஸ்லாமிய பிராடு ]   என்பவர் ஒருவர் இருக்கிறார்.அவர் மகாமேதை என்று சொல்வதுடன்,தனது வாசகி ஒருவரை குழந்தையோடு அமெரிக்காவில் இருந்து அழைத்து வந்து,வேனில் கூட்டிக்கொண்டு அந்த அசரத்தை சென்று பார்த்தாராம்.அதை பக்கம் பக்கம்மாக எழுதி காசு பார்த்து விட்டார்.                                                ஐயா,சாரு,நீங்கள் லத்தீன்அமெரிக்க இலக்கியங்களை படித்திருக்கலாம்,ஐரோபிய இலக்கியங்கலய்ப் படித்திருக்கலாம்,பா.சிங்காரத்தை பாராட்டலாம்,ஆதவனை ஆதரிக்கலாம்,இளையராஜாவை இம்சக்கிலாம் தப்பில்லை.ஆனால் மூட நம்பிக்கையை வளர்க்க கூடிய நிகழ்வுகளை தயவு செய்து தவிருங்கள்.                                                       இந்த உலகில் எந்த மனிதனுக்கும் [நபி,ஏசு,புத்தர் உள்பட ]மனித சக்தியை தவிர வேறு எந்த அபூர்வ சக்தியும் கிடையாது.இதை நீங்கள் உணர்ந்திர்களா?உணர வில்லையா?என்பது எங்களுக்கு தெரியாது?ஆனால் நீங்கள் தன்னையும் குழப்பி,உங்கள் வாசகரையும் குழப்புகிரிர்கள்.இப்படி நீங்கள் இருந்து கொண்டு தமிழில் என்னை எவரும் கொண்டாட மாட்டேன் என்கிறார்கள் ,என்கிறிர்கள்.இப்படி புலம்புவதை விட்டு விட்டு நல்ல இலக்கியம்  படைப்பதற்கு உங்கள் மூளையை செலுத்திவீர்களா?                                                                                      நண்பர்களே பதிவை படித்து சாருவுக்கு ஒரு ''ஓ''[ட்டு ] போடுங்கள்.நன்றி.                   

புதன், 2 மார்ச், 2011

விஜய்,உங்களுக்கு சுய சிந்தனை உண்டா?

                                         ''நான் முடிவு செஞ்ச பிறகு என் பேச்சை நானே கேட்க மாட்டேன்'' என்று ஏதோ ஒரு சினிமாவில் நீங்கள் வசனம் பேசியதாக நினைவு.இதை நீங்கள் உங்கள் யதார்த்த வாழ்வில் கடைப்பிடிப்பிர்களா?அப்படி கடைப்பிடித்தால் நீங்கள் போகும் பாதையை யாரும் மாற்ற முடியாது.அது சரி,அதற்குரிய தகுதி உங்களுக்கு உள்ளதா?                                         நீங்கள் என்ன விக்கி லீஸ் அசாஞ்ச்ஜெவா,இல்லை உலக அரசியல் முழுவதையும் கரைத்து குடித்தவரா?இல்லை தமிழக அரசியல் பற்றியாவது ஏதாவது தெரியுமா?அதுப்பற்றி ஏதாவது வாசிப்பு பழக்கமோ, தமிழகஅரசியல் பற்றி ஏதாவது புத்தகமோ எழுதி இருக்கிறிர்களா?நீங்கள் செய்தது எல்லாம் நாலு குத்து பாட்டு,இரண்டு தரம் கெட்ட சண்டைகாட்சி,நாலு வரி பஞ்ச் வசனம்.இதை வைத்து உங்களை நாங்கள் எப்படி எடை போடுவது?நீங்கள் மேடையில் பேசினால் சினிமாவில் காமடி நடிகர் பேசுவது போல் உள்ளது.எந்த தன்நம்பிக்கையில் தமிழகத்தை புரட்டிப் போடப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறிர்கள்?தமிழக மக்கள் என்ன லூசா?                                                                                        உங்களுக்கு காலம் நிறைய உள்ளது.உலக அரசியலை படியுங்கள்.இந்திய அரசியலை படியுங்கள் ,நிறைய வாசியுங்கள்.நிறைய எழுதுங்கள்.அதன் பிறகு நான் அரசியலில் ஈடு படப்போகிறேன் என்று ஆர்வம் இருந்தால் தாராளமாக வாருங்கள் வரவேற்க்கிறோம்.அதைவிட்டு அப்பா சொன்னார்.அம்மா சொன்னார் என்று ''சின்னபுள்ள'' தனமா சொல்லிக்கொண்டு,தன்னையும் குழப்பி,உங்கள் ரசிகனையும் பைத்தியகாரனாக ஆக்காதிர்கள்.                                                              தல பதிவை படித்து ஓட்டை விஜய்  அண்ணாவுக்கு போடுங்கள்.நன்றி                            

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

மனசாட்சிப்படி வாழ்வது தப்பா?

                                       இந்த நாட்டில் மனிதர்கள் எப்படித்தான் வாழ்வது?ஒவ்வரு மனிதனும் தான் நம்பிய,தான் விரும்பிய வாழ்கையை வாழ முடியாதா?அதிகார அமைப்புகள் மனிதாபிமானத்தோடு கூடிய மனிதர்களை வாழ விடாதா?அனைத்து மனிதர்களுமே போலியான வேஷங்களைப்போட்டு,ஜால்ரா அடித்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கையில் தன் மனம் காட்டிய அகிம்சை வழியில் வாழ ஒரு மனிதனுக்கு உரிமை இல்லையா?                                                                                                                                             இந்தியாவிலேயே அறிய மருத்துவமனையான வேலூர் C .M .C -மருத்துவமனையில் குழந்தை மருத்துவராக படித்து,குழந்தை உள்ளத்தோடு மலைவாழ் மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்வை அர்ப்பணித்த மருத்துவர் பினாயக் சென்னை இந்த அதிகார அமைப்புகளும்,அரசும் நடத்திய விதங்களும் நடத்திக்கொண்டிருக்கும் நாடகங்களுக்கும் முடிவே இல்லையா?                                                                                                                    ஐயா,அதிகார வர்க்கங்களே,நீதிமான்களை உங்களுக்கு மனம் என்று ஒன்று உண்டா?நீங்கள் இயற்கைக்கு விரோதமாக சிந்தித்தால்,இந்த இயற்கையேஉங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடும்.அப்போது உங்களை இந்த மனிதர்கள் உருவாக்கிய  சட்டமோ,நீங்கள் மதிக்கும் சட்டமோ உங்களை காப்பாத்தாது.உங்களால் மனிதர்களாக வாழ முடியவில்லை என்றால்,மனிதர்களாக வாழ விரும்பும் மனிதர்களை வாழ விடுங்கள்.                                                                                  நண்பர்களே பதிவை படித்து புரியவில்லை என்றால் பினாயக் சென்னைப் பற்றி அறிந்து கருத்து தரவும்.நன்றி.              

சனி, 26 பிப்ரவரி, 2011

எந்திரன் எழும்பி விட்டாரா?

                                                       தமிழக மக்களை எவ்வளவு பைத்தியமாக்க முடியுமோ? அவ்வளவு பைத்தியமாக்கி விட்டு கல்லா கட்டி விட்டார்கள்.அவருக்கு என்றே சில கூட்டனிகள்,அவருக்கு என்றே சில கூட்டங்கள் அனைவரும் சேர்ந்து தமிழக குடிமகனின் பாக்கெட்டை  கிழித்து எறிந்து விட்டார்கள்.                                                                                                                                                            அப்பாவி தமிழ் ரசிகனை மொட்டை போட்டு முடித்தாகிவிட்டது. அடுத்த படத்திற்கு அட்சாரம் போட்டாகிவிட்டது.இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் ஜுரம் காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.நமது தலைவர்க்குத்தான் உடம்பிலுள்ள அத்தனை உறுப்புகளும் வேர்த்து விடுமே.அவர் பேசுவது நல்லதோ,கெட்டதோஅவருக்கே தெரியாது?வழக்கப்படி எந்த கட்சிக்கோ வாய்ஸ் கொடுக்க அவர் மனம் துடித்துக் கொண்டிருக்கிறது.                                                                                இந்நிலையில் மானமுள்ள தமிழன் என்ன செய்ய வேண்டும்?அரசியல்வாதி கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு,தங்களுக்கு பிடித்த எதிர் கட்சி தலைவருக்கு வாக்கை பதித்து விடவேண்டியதுதான்.மேலும் பல எந்திரன்ககள் கொடுக்கும் வாய்ஸ்சை இடது காதில் வாங்கி,வலது காதில் விட்டு நாம் ஒரிஜினல் தமிழன்தான் என்பதை நிருபிப்போமா?                                                                                              நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.                       

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

விஜய் அப்பா திருந்துவாரா?

                                          தலைவர்களை யாரும் உருவாக்க முடியாது ,தானாகவே உருவாக வேண்டும்.அது தான் இயற்கை.நீங்கள் இயற்கைக்கு விரோதமாக ஒரு மண்பாண்ட தலைவரை உருவாக்கிக் கொண்டிருக்கிறிர்கள்.நீங்கள் உங்கள் மகனின் மனதை என்றாவது நினைத்து பார்த்து இருக்கிறிர்களா?அவருக்கு மனம் என்று ஒன்று உண்டு.ஆசை என்று ஒன்று உண்டு.அவருக்கே ஊரிய சிந்தனை என்று ஒன்று உண்டு.நீங்கள் எதையுமே பார்க்கவில்லை.                                                                                                                                                                                   மகன் சினிமா கதாநாயகனாகிவிட்டார்.பிரபலமாகிவிட்டார்.அடுத்து அரசியலில் இறங்கி தமிழகத்து தலைவிதியே மாற்றி காட்டி விடலாம் என்று கணக்கு போடுகிறிர்கள்.உங்கள் கணக்கு தப்பில்லை.ஆனால் தமிழகத்து மக்களை கொஞ்சமாவது நினைத்து பார்த்திர்களா? அவர்கள் ஏற்கனவே சினிமா தலைவர்களிடம் தலையை கொடுத்து தான் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.எப்போதாவது ஏதாவது தீர்வு கிடைக்காதா?என்று ஏங்கி கொண்டிருக்கிறார்கள் .இந்த இலட்சணத்தில் நீங்களும் கிளம்பி உங்கள் மகனின் எதிர்காலத்தையும் கெடுத்து கொண்டிருக்கிறீர்கள்.                                                                                            அவரை அவர் போக்கில் சிந்திக்க விடுங்கள்.அவர் சினிமாவில் சாதிக்க இன்னும் எவ்வளவோ இருக்கிறது.அதை விட்டு தமிழகத்தை மாற்ற போகிறேன்,புரட்சி செய்ய போகிறேன் என்று செல்லாமல்,ஒரு மகனுக்கு உண்மையான அப்பாவாக இருப்பிர்களா?தமிழக மக்களை நல்வழியில் சிந்திப்பதற்கு உதவுவீர்களா?நீங்கள் சினிமாவில் செய்த புரட்சியை தமிழக மக்களுக்கு உணர்த்துவிர்களா?நீங்கள் சிந்திக்கும் நேரமிது.                                      நண்பர்களே பதிவை படித்து கருத்தை பகிரவும்.நன்றி.                   
 

வியாழன், 17 பிப்ரவரி, 2011

அரசாங்கம் என்று ஒன்று தேவையா?

              உலக மக்களில் பல மனிதர்கள் தனது அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிரர்கள்.அரசாங்கம் நமக்கு எதற்கு?அரசாங்கம் நமக்கு தேவையா?என்று சிந்தித்ததன் விளைவு தான் இது.இவர்கள் இப்படி சிந்திப்பதற்கு காரணம் என்ன?                                                                                             ஒவ்வரு நாட்டு அதிபர்களும்,தலைமை பொறுப்பில் உள்ள தலைவர்களும் மக்கள் நன்றாக வாழ வேண்டும்,மக்கள் வாழ்க்கையானது சிக்கலில்லாமல் அமைதியாக கழிய வேண்டும் என்று நினைக்கிறார்களா?மக்களின் பிரச்சனையை தீர்க்கதான் ,தாம் தலைவராகவோ,அதிபராகவோ இருக்கிறோம் என்று நினைக்கிறார்களா?ஆனால் மக்கள் தங்கள் பிரச்சனையைத் தீர்க்கத்தான் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்.                                                                                     ஆனால் மக்களின் எதிர்பார்ப்பிற்கு எதிராக இவர்கள் மக்களின் பிரச்சனையை கவனிப்பதே இல்லை.தான் நன்றாக இருப்பதற்கும்,தனது சொந்த பந்தங்கள்.தலைமுறைகள் சொத்து சேர்த்து சுகமாக வாழ்வதற்கும் தனது பதவியை பயன்படுத்திக் கொள்கிறார்கள்,கடைசி காலங்களில் இவர்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டால் உலகம் முழுவதும் அசையும் சொத்தாகவோ,அசையா சொத்தாகவோ எழுத்தில் எழுத முடியாத அளவிற்கு சேர்த்து வைத்து விடுகிறார்கள்.                                                                                                                                               தன்னலம்.சுயநலம் இதையே குணமாக கொண்ட தலைவர்களே நீங்கள் தனக்காக வாழாமல் தனது மக்களுக்காக வாழ்கையை அர்ப்பணிப்பிர்களா? அப்படி அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் நீங்கள் அரசியலில் ஈடுபடுங்கள்.இல்லை என்றால் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.பொறுப்பில்லாத உங்களால் மக்கள் படும் வேதனையின் விளைவு தான் இது.உலக அதிபர்களே உலக தலைவர்களே சிந்திப்பிர்களா?                                                                                                                                                     நண்பர்களே பதிவை படித்து கருத்து தரவும்.நன்றி .                       

புதன், 16 பிப்ரவரி, 2011

இஸ்லாம் முறைப்படி முஸ்லிம்கள் வாழ்கிறார்களா?

                               இன்றைய வாழ்கையில் போலித்தனங்கள் தான் நிசங்களா?மனிதர்கள் மதங்களை தீவிரமாக கடைபிடிக்கிறார்களா?கடைபிடிக்குமாறு நடிக்கிறார்களா?மதம் சொன்ன கருத்துக்களை அவர்கள் கடைபிடித்து வாழுமாறு இன்றைய வாழ்கை முறை இருக்கிறதா?இப்பொழுது உள்ள நிலையில் மனிதன் மதக்கருத்துகளை கடைப்பிடித்து வாழ முடியுமா?                                                                                                                          இஸ்லாம் முஸ்லிம்களை வட்டி வாங்குவதையோ,கொடுப்பதையோ ஹராம் [விலக்கப்பட்டது]ஆக்கியுள்ளது.இந்நிலையில் பல மனிதர்கள் வாங்குவதற்கும்,சில மனிதர்கள் வட்டிக்கு விட்டு தொழிலாகவே செய்து வரும் நிலையுள்ளது.ஆனால் இவர்கள் அனைத்தையும் செய்து விட்டு நோன்பு இருக்கிறார்கள்.5 நேரம் தொழுகிறார்கள்.இன்னும் மதம் என்ன சொன்னதோ,அதை செய்கிறார்கள்.                                                                                                                                 இவர்களுக்கு மனசாட்சி உண்டா?இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?மதத்தையா?மனிதனையா? மனிதர்கள் நல வாழ்கை வாழத்தான் மதங்கள்.மதக்கொள்கையை கடைபிடித்து வாழ முடிந்தால் வாழுங்கள் !இல்லையன்றால் என்னால் முடியவில்லை என்று தைரியமாக ஒதுங்கி கொள்ளுங்கள்.இதில் போலி வேஷம் வேண்டாம்.தனது சுய நலத்திற்க்காக மதத்தை வளைத்து உலகில் தான் வயிறு வளர்ப்பதற்காக வேஷம் போடும் கபடதாரிகலே நீங்கள் உங்கள் நிலையை மாற்றி கொள்ளுங்கள்.நீங்கள் உங்கள் வாசதிக்காக இஸ்லாமை வளைத்திர்கள் என்றால் காலம் இவ்வுலகில் உங்களை "போலித்தனங்களின் உச்சம்'' என்றுதான் சொல்லும்.                                                                               போலித்தனமாக வாழ்வதையே நிலையாக கொண்டிர்கள் என்றால்,இரட்டை வேஷம் போடுவதையே தொழிலாக கொண்டிர்கள் என்றால்,உங்களால் முறையாக இஸ்லாத்தை கடைப் பிடிப்பவர்களுக்கும் கெட்ட பெயர்.இஸ்லாத்தை வளர்க்க போகிறிர்களா?கெடுக்க போகிறிர்களா?.சிந்தியுங்கள்,முடிவு உங்கள் கையில் தான் உள்ளது.                                                                                                                                                     நண்பர்களே பதிவை படித்து அனைவரும் கருத்து சொல்லலாம்.நன்றி.                         

சனி, 12 பிப்ரவரி, 2011

மக்கள் அதிகாரத்திற்கு பணியலாமா?

                                 மனிதன் தான் வாழும் வாழ்கையில்.தன் வாழ்கையை பாதுக்காக ஏகப்பட்ட எதிர்நீச்சல் போட வேண்டியுள்ளது.நாம் வாழும் வாழ்கையில் நாம் குண்டர்கள் அதிகாரம்,காவல் துறை அதிகாரம்,அரசு அதிகாரம்,மேல் சாதி மக்களின் சாதிவெறி அதிகாரம், இன்னும் பெயரிடப்படாத பல அதிகாரங்களை கடந்து வர வேண்டியுள்ளது.இப்பொழுது நம்முள் எழும் கேள்வி நாம் அதிகாரத்திற்கு பணியலாமா?                                                 அதிகாரம் என்பது என்ன?அதிகாரம் எபபடி தோன்றுகிறது?  தான் நினைப்பது நல்லதோ,கெட்டதோ நாம் நினைத்தபடி நடக்க வேண்டும்.இப்பூமியானது பல உயிர்கள்,தாவரங்கள்,விலங்குகள் வாழ்வதற்கு உரியது என்று நினைக்காமல்,அப்படி வாழ்வதுதான் அழகு என்று நினைக்காமல் ,தான் மட்டுமே வாழ வேண்டும்,தான் அதிகாரம் செலுத்துவது போல் தனது சந்ததியினரும் அதிகாரம் செலுத்த வேண்டும் என்று நினைப்பது,இங்குள்ள இயற்கை செல்வங்களை தான் கொள்ளை அடித்து அனுபவிப்பது போல்,பன்னாட்டு கம்பனிகளும் சுரண்டுவதற்கு  அனுமதிப்பது,பொதுவாக தான் வாழ்வதற்காக இங்குள்ள இயற்கை செல்வங்களை எல்லாம் அழிப்பவரை கண்டும் காணாமல் இருப்பது என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைப்பதால் தான் பல பிரச்சனைகள் எழ காரணமாகிறது.                                                                                                                                         காடுகளில் இயற்கையாக வாழும் மலை வாழ் மக்களை விரட்டி விட்டு.அவர்கள் வாழ்வாதாரத்தை சிதைத்து விட்டு அவ்விடங்களில் உள்ள தாதுப்பொருள்களை கொள்ளை அடிப்பதற்கு பன்னாட்டு கம்பனிகள் போடும் சதி திட்டத்திற்கு ஆதரவளிப்பது,என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்தால் மக்கள் அதைக்கண்டு எதிர்க்காமல் என்ன செய்வார்கள்?இவர்கள் தங்கள் லாப வெறிக்காக கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்த பூமி பாது காத்து வந்த இயற்க்கை செல்வங்களை அழித்து இயற்கையை சேதப்படுத்தினால் யாருக்கு நஷ்டம்?இயற்கையை மாற்றினால் என்ன விபரிதம் ஏற்படும் என்பது நமது வாழ் நாளில் நாம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்இதை இந்த மூடர்கல் உணர்வார்களா?இவர்கள் தங்கள் காரியத்தை சாதிப்பதற்கு எத்தனை விதமான அதிகாரத்தை பயன்படுத்தினாலும் மக்கள் பணியாமல் எதிர்த்து தான் நிற்ப்பார்கள் உங்கள் அறிவீலிதனத்திற்கு அவர்கள் ஆதரவு தரவே மாட்டார்கள்.                                                                                                                                                                  நண்பர்களே பதிவை படித்து கருத்தை தருக .                        

வியாழன், 10 பிப்ரவரி, 2011

விஞ்ஞானிகளே நீங்களுமா?

                               எங்கள் நாட்டின் பிரமதர்,முதல்வர் ,அமைச்சர்.அரசியல்வாதி அரசு ஊழியர்.இன்னும் அரசு துறையில் உள்ள யாவருமே ஊழல் செய்ய அஞ்சாதவர்கள்.அனைத்து ஊழல்களும் செய்து விட்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எபபடி?என்று தான் பேசி வருவார்கள்.நாங்களும் அவர்கள் சொல்வதை கேட்டு பெரியவர்கள் சொல்கிறார்கள் அவர்கள் பேச்சில் உண்மை இருக்கும் என்று மண்டை ஆட்டிக் கொள்வோம்.                                                                                                       ஐயா,எங்கள் அரசியல்வாதி செய்யும் அக்கிரமங்களை எல்லாம் சகித்து,உங்களைப் போன்ற படித்த அறிவுஜீவியான நீங்கள் உங்கள் சேவையின் மூலம் எங்களுக்கு நற்பலன்களை தருவீர்கள்!என்று நம்பினோம்.ஆனால் நீங்கள் பிரதமர் அலுவலகத்திற்கே தெரியாமல் ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் மல்டிமீடியா ஒப்பந்தம் போட்டுள்ளிர்கள்.அந்த ஒப்பந்தத்தின் மூலம் நீங்கள் அனுபவித்த,அனுபவிக்க போகிற சொகுசுக்காக உங்கள் கல்வியறிவை பயன் படுத்திக் கொண்டிர்கள்.                                                                                                                                                            இந்த நாட்டில் யார்?யோக்கியன்?நான் மட்டும் ஏன்?யோக்கியனாக இருக்க வேண்டும் என உங்கள் மனசாட்சி கேட்டதா?மனசாட்சியாவது மண்ணாங்கட்டியாவது யாருக்கு வேண்டும் உங்கள் மனசாட்சி என்று நீங்கள் நினைத்து விட்டிர்களா?போதுமய்யா போதும் உங்கள் படித்த கிரிமினல் அறிவு.                                                                                                                                                     சாதாரனமக்களாகிய நாங்கள் விலைவாசி உயர்வு,அரசியல்வாதிகளின் அட்டுழியம் ஓட்டுக்காக இவர்கள் போடும் ஆட்டம்,இதை எல்லாம் பார்த்து நொந்து போயிருக்கிறோம்.இதில் நீங்கள் வேறு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிரிர்கள்.படித்தவன் சூது செய்தால் போவான் போவான் அய்யோ என்று போவான் ,என்று ஒருவர் புலம்பி விட்டு போய் சேர்ந்தான்,இதை எல்லாம் படித்து விட்டுமா நீங்கள் இவ்வழியை தேர்ந்து எடுத்திர்கள் !யாரையும் சொல்லி குற்றமில்லை ,மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழி.                                                                                                                                                                                             நண்பர்களே பதிவை படித்து கருத்தை சொல்லவும் .நன்றி                                                                                                               பின்குறிப்பு :ஆன்ட்ரிக்ஸ் என்பது இஸ்ரோ  விண்வெளி துரையின் வணிகப்பிரிவு.இவர்களின் S -பாண்ட் அலைவரிசையின் ஊழலை சொல்கிறது இக்கட்டுரை.                 

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

அன்பு கிலோ என்ன விலை?

                          இன்றைய உலக வாழ்வில் பெற்றோர் குழந்தைகளுக்கு இடையில்,உற்றார் உறவினருக்கு இடையில்,நண்பர்களுக்கு இடையில்,கணவன் மனைவிக்கு இடையில் உள்ளதெல்லாம் அன்பு தான?அன்பு என்று ஒன்று உண்டா?அன்பு என்பதன் வார்த்தைக்கு அர்த்தம் என்ன ?                                                                                                                                                               அன்பு என்பதே ஒரு சுய நலம் சார்ந்த வார்த்தை தானா? எல்லா மனிதர்களும் தனது சுயநலத்திர்காகத்தான் அன்பு செலுத்திகின்றார்களா?தான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அன்பு செலுத்திகின்றார்களா?இல்லை அன்பு செலுத்தப்படுபவர்நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறாரா?                                                           இன்றைய குழந்தைகள் தனது பெற்றோடமிருந்து என்னவெல்லாம் கறக்கலாம்,தனது ஆசையை பூர்த்தி செய்வதற்கு பெற்றோரை எவ்வாறு பயன் படுத்திக்கொள்ளலாம்? என்று எண்ணுகிறார்கள்.தனது ஆசையை பூர்த்தி செய்த பிறகு அவர்களிடம் இருப்பதெல்லாம் கறந்த பிறகு ,அவர்களது இறுதிக் காலத்தில் கண்டும் காணாமலும் செல்லும் துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது.இதன் விளைவு அவர்களது இறுதிக் காலம் முதியோர் இல்லங்களில் கழிய நேரிடுகிறது.இப்பொழுது தான் நம்முள் எழும் கேள்வி?பெற்றோர்,குழந்தைகளுக்கு இடையே ஏற்படுவது அன்பா?அப்படி அன்பு தான் என்றால் அதன் இறுதி வழி இதுதானா?இதை தீர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்.யாருக்கும் யாரும் வழி சொல்லமுடியாது.நாம் மட்டுமே சிந்திக்க வேண்டும்.சிந்திப்போமா?                                                                                                                                            நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி           

இந்த உலகம் எபபடி இயங்குகிறது ?

                    இன்று உலகில் உள்ள அனைத்து அரசியலுக்கும் காரணம் முதலாளி,தொழிலாளி பிரச்சனைதான்.முதலாளி தான் வாழ்வதற்காக ஏகப்பட்ட தந்திரங்களை அரங்கேற்றி அதில் தொழிலார்களை நடிக்க வைத்து தானும்,தன் குடும்பமும் ,தன் முதலாளி வர்க்கமும் மட்டும் நன்றாக வாழவேண்டும் என நினைத்ததன் விளைவு தான் இந்த உலக அரசியல்.                                                                                                            முதலாளி தொழிலாளியை வசப்படுத்தி ஏமாற்றுவதற்காக ஏற்கனவே உள்ள கடவுள் நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொண்டான்.கடவுள் என்று ஒன்று உண்டு,அவனுக்கு நீ சேவை செய்ய வேண்டும்.அவருக்கு [அதாவது தனக்கு ]பிடித்தமானவற்றை நீ செய்வதோடு.அவர் சொல்வதை எல்லாம் நீ கேட்க வேண்டும்.இதற்காக ஏகப்பட்ட தந்திரமான கதைகள்,கதைகள் மூலம் கடவுளை எதிர்த்தால் நீ அழிந்து போவாய் என்ற போலித்தனமான மிரட்டல்கள்.                                                                                                                                                  இந்த முதலாளிக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கோ,இல்லையோ இல்லை என்று வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்கள்.எத்தனை மதங்கள் உண்டோ,எத்தனை கடவுள் உண்டோ அத்தனையும் ஆதரிப்பார்கள்.அது வளர்வதற்காக அவர்கள் உருவாக்கிய பத்திரிக்கை,சினிமா,தொலைகாட்சி,நாடகம் இன்னும் எத்தனை ஊடக வடிவங்கள் உண்டோ அத்தனையும் பயன்படுத்தி கடவுள் நம்பிக்கையை வளர்ப்பார்.எத்தனை திருவிழாக்கள் உண்டோ அத்தனையும் ஆதரிப்பார்.அதற்க்கு தாராளமாக நிதி வழங்குவார்.அதைப் போல நீ இந்திய குடிமகன் ,இந்தியாவுக்காக நீ உயிரையும் கொடுக்க வேண்டும் என்ற போலித்தனமான நாட்டுப்பற்றையும் மனதில் விதைப்பர்.                                                                                                                                                                                      முதலாளி தான் வாழ்வதற்காக உருவாக்கியதுதான் இந்த அரசாங்கம்.அரசாங்கத்தில் உள்ள நீதித்துறை,காவல்துறை,சிறைத்துறை,அரசு ஊழியர்கள் முதலியவர்களை கொண்டு அப்பாவி தொழிலாளர்களை மிரட்டி ,அவன் உழைப்பை உள் வாங்கிக்கொண்டு,அவன் உழைப்பை சுரண்டி தான் மட்டும் நன்றாக கொளுத்து வளர்வதற்கு உருவாக்கியதுதான் இந்த அரசாங்கம்.இதை மட்டுமா செய்தார்கள்?                                                                                                                                                                                தான் நன்றாக ஆதிக்கம் செலுத்துவதைப்போல் தனது தலைமுறைகளும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக தொழிலாளிக்கு குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொடுக்க அதிக ஆர்வம் காட்டுவார்கள்.அப்பொழுது தானே அவன் அடுத்த தலைமுறை தொழிலாளியை உருவாக்க முடியும்.இப்படி உருவாக்கிய தொழிலாளிக்கு, தான் உருவாக்கிய அரசாங்கத்தின் மூலம் அரைகுறையான,அரை வேக்காட்டுத்தனமான கல்வியை கற்றுக் கொடுத்து,அவனுக்கு தேர்வு என்று ஒன்று வைத்து சில பேரை உயர் கல்விக்கும்,பல பேரை குறைந்த கல்வியில் படிக்க வைத்து பெயிலாக்கி தனது தொழிற்ச்சாலையில்,தனது நிறுவனத்தில் அடிமை வேலை செய்ய உருவாக்கிகிரார்கள்.இப்படித்தான் இந்த முதலாளி உலகம் இந்த உலகை ஆள்கிறது.                                                                                                                                                                    இந்த முதலாளி வர்க்கத்திற்கு தலைமையிடம் அமெரிக்கா.உள் நாட்டு முதாலளிகலே இவ்வளவு தந்திரங்கள் செய்யும் பொழுது,உலகை ஆள்வதற்கு அமெரிக்கா என்ன தந்திரம் செய்யும் ?அதைத்தானே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.                                                                                                                                                        நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.                                          

திங்கள், 7 பிப்ரவரி, 2011

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா?

                        இன்றைய வாழ்கை முறையில் காலையில் எழுந்து செய்தியைப் பார்த்தால் ஏதாவது சாலை விபத்து,அரசின் கவனக்குறைவினால் ஏற்படும் விபத்துகள்,தனது ஆட்சியைப் பாதுகாக்க அது பொய் என்று உலகத்திற்கே தெரிந்தும் தானும் ,தனது சக அமைச்சர்களும் நிரபராதி என்று போலித்தனமாக வாதிடுவது,சக நாட்டில் தனது இனம் சாகடிக்கப்படும்பொழுது  இங்குள்ள தலைவர்கள் அரசியல் காமடி நடத்திக்கொண்டிருப்பது,பரபரப்பான காலை வேளையில் சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்வதற்கு பறப்பது,தொழிலில் சக போட்டியாளரை சமாளிப்பதற்கு தந்திரம் வகுப்பது,உறவினர்களிடையே ஏற்படும் மனகசப்புகளை சமாளிப்பது,குழந்தைகள் பள்ளி சென்று நலமுடன் திரும்புவார்களா?என்று நினைப்பது,விலைவாசி உயர்வின் கோரமுகத்தை ஒவ்வரு பொருள் வாங்கும் பொழுதும் அனுபவிப்பது என்று இன்றைய மனிதர்கள் காலை முதல் இரவு வரை வாழும் வாழ்கையில்,மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா?                                                                                                            இதற்க்கு தீர்வாக நாம் என்ன செய்வது? காலையில் எழுந்ததில் இருந்து இரவு அடையும் வரை எந்த தினசரியோ,தொலைக்காட்சி நிகழ்ச்சியோ,இணையதள சேவையோ,பார்க்காமல் சுற்று சூழலை கவனிக்காமல் தான் உண்டு தன் வேலை என்று இருந்து விடலாமா?,இருந்து விடலாம்தான்,ஆனால் இந்த பாழாய்ப்போன மனது கேட்க மாட்டேன் என்கிறதே ,சமத்துவம் இல்லாத சமுக அமைப்பில் சக மனிதர்கள் பாதிப்படையும் போது,உண்மைக்கு புறம்பான நிகழ்வு நடக்கும் பொழுது,தனது சுய நலத்திற்காக மனிதர்கள் தரம் தாழ்ந்து போகும் பொழுது,அதை எதிர்த்து,அதை எபபடி சரி செய்யலாம்? என்று தானே மனித மனது சிந்திக்கிறது ?இது தான் மனித மனது என்பதோ ?                                                                                                                   நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.                

சனி, 5 பிப்ரவரி, 2011

மனிதனின் ஆசைக்கு அளவே இல்லையா?


                          அரசாங்கம் என்பது எதற்கு? அரசாங்கம் என்று ஒன்று தேவையா? என்று மக்கள் நினைத்து அவர்களுக்கு எதிராக வீதியில் வந்து போராடுகிறார்கள் என்றால்,இந்த மக்களை எல்லாம் அந்த அரசாங்கம் என்ன நினைத்து கொண்டிருக்கிறது?                                                       ஒரு மனிதன் கடந்த 30 வருடங்களாக ஒரு நாட்டை ஆண்டு வருகிறார்.மக்களின் நம்பிக்கையை பெற முடியாமல்,மக்களின் தேவையை நிறைவேற்ற முடியாமல் போனதால்,அதை எதிர்த்து கேட்ட அம்மக்களுக்கு எதிராக வன்முறையை ஏவி விடுகிறார்.இவர் நிலைமையை உணர்ந்து பதவி விலகாமல் இருப்பதற்கு தடையாக இருப்பது எது? ஆதிக்க உணர்வு,தான் என்ற அகங்காரம்,வாழ்வின் பெரும் பகுதியில் அதிகாரத்தை ருசித்த வெறி,இதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசை,இது தானே காரணமாய் இருக்க முடியும்.                                                                                                      உலகில் உள்ள அனைத்து அரசாங்கங்களையும் ஆளும் மனிதர்கள் தங்களது நிர்வாக கோளாறிநாளோ வயது காரணமாகவோ,செயலாற்ற முடியவில்லை என்றால் தான் ஓதுங்கி கொண்டு,அடுத்தவர்க்கு வாய்ப்பு கொடுப்பதுதான் அழகு.அதைச் செய்யாமல் ''அதிகாரத்தை நானே ருசிப்பேன் ''என்ற மனிதனின் ஆசைக்கு அளவே இல்லையா?மனிதர்களாகிய நீங்கள் சிந்திப்பீர்களா?                                                                                                        பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.                  சிந்தனை

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

அமெரிக்கா மோகம் குறையுமா?

            மாணவர்களின் காலில் கண் காணிப்பு காமிராவை பொருத்தி ஒரு அரசாங்கம் வேவு பார்க்கிறது என்றால், அந்த அரசாங்கம் அந்த மாணவர்களுக்கு என்ன விதமான கல்வி முறையை கற்றுக் கொடுக்கும்?அங்கிருந்து கற்று வரும்  மாணவர்களும் எவ்விதமான சிந்தனையில் கற்று வருவார்கள்                                                                                                                               உலகம் முழுவதும் உள்ள மக்களைச் சுரண்டி,தன் மக்கள் மட்டும் அதிக நுகர்வு கலாச்சாரத்தில் விழுந்ததின் விளைவு தான் இந்த பொருளாதார நெருக்கடி.இதனால் உலகில் உள்ள எல்லா மனிதர்களும்,ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டார்கள்.தனது சுயநலத்திற்காக அனைத்து நாட்டு அரசாங்கங்களின் உள் விவகாரங்களில் தலையிட்டு,அரசாங்கங்களையும் கவிழ்த்ததோடு,அதிபர்களையும் பலியிட்டு தன்னை நியாயப்படுத்திக்கொண்டது.இதுதான் இவர்களின் பிறவிக் குணம்.                               இந்நிலையில் யாரையுமே நம்பாத ஒரு தேசத்திர்க்கு  சென்று,அங்கிருந்து, மாணவர்கள் என்ற போதிலும் தன் தரம் தாழ்ந்து கல்வி கற்று வரும் இந்திய மாணவர்களின் மனநிலை எபபடி இருக்கும்? தான் 24 -மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறோம்,என்ற மனநிலையே அவர்களை கல்வி கற்க விடுமா? தான் மாடுகளுக்கு மணி     கட்டியதைபோன்றநிலையில்  இருக்கிறோம் என்ற சிந்தனையே அவர்களை அவர்கள் கடமையை சரி வர செய்ய அவர்களது மனது அனுமதிக்குமா?                                                                                                                                                    அமெரிக்கா          அரசாங்கத்தின் அனுமதியை முறையாக கடைபிடிக்காத கல்வி நிலையங்களின் டுபாக்கூர் வேலைதான் இது.நாம் அமெரிக்கா சென்று கல்வி பயில வேண்டும் என்ற அதீத ஆர்வத்தினால் சரியாக விசாரிக்காமல் சென்றதின் விளைவு இது.ஏதொ விசாரிக்காமல் சென்றதற்காக நீங்கள் கொடுக்கும் விலை இது.இதற்காக அவர்கள் கொடுக்கும் எதிர்வினையும் கொடுமையின் உச்சம்.இவ்வளவையும் பார்த்த  வருங்கால,இந்திய மாணவர்களின் அமெரிக்கா மோகம் குறையுமா?                                                                                                                                                                    நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.