இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

மனசாட்சிப்படி வாழ்வது தப்பா?

                                       இந்த நாட்டில் மனிதர்கள் எப்படித்தான் வாழ்வது?ஒவ்வரு மனிதனும் தான் நம்பிய,தான் விரும்பிய வாழ்கையை வாழ முடியாதா?அதிகார அமைப்புகள் மனிதாபிமானத்தோடு கூடிய மனிதர்களை வாழ விடாதா?அனைத்து மனிதர்களுமே போலியான வேஷங்களைப்போட்டு,ஜால்ரா அடித்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கையில் தன் மனம் காட்டிய அகிம்சை வழியில் வாழ ஒரு மனிதனுக்கு உரிமை இல்லையா?                                                                                                                                             இந்தியாவிலேயே அறிய மருத்துவமனையான வேலூர் C .M .C -மருத்துவமனையில் குழந்தை மருத்துவராக படித்து,குழந்தை உள்ளத்தோடு மலைவாழ் மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்வை அர்ப்பணித்த மருத்துவர் பினாயக் சென்னை இந்த அதிகார அமைப்புகளும்,அரசும் நடத்திய விதங்களும் நடத்திக்கொண்டிருக்கும் நாடகங்களுக்கும் முடிவே இல்லையா?                                                                                                                    ஐயா,அதிகார வர்க்கங்களே,நீதிமான்களை உங்களுக்கு மனம் என்று ஒன்று உண்டா?நீங்கள் இயற்கைக்கு விரோதமாக சிந்தித்தால்,இந்த இயற்கையேஉங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடும்.அப்போது உங்களை இந்த மனிதர்கள் உருவாக்கிய  சட்டமோ,நீங்கள் மதிக்கும் சட்டமோ உங்களை காப்பாத்தாது.உங்களால் மனிதர்களாக வாழ முடியவில்லை என்றால்,மனிதர்களாக வாழ விரும்பும் மனிதர்களை வாழ விடுங்கள்.                                                                                  நண்பர்களே பதிவை படித்து புரியவில்லை என்றால் பினாயக் சென்னைப் பற்றி அறிந்து கருத்து தரவும்.நன்றி.              

சனி, 26 பிப்ரவரி, 2011

எந்திரன் எழும்பி விட்டாரா?

                                                       தமிழக மக்களை எவ்வளவு பைத்தியமாக்க முடியுமோ? அவ்வளவு பைத்தியமாக்கி விட்டு கல்லா கட்டி விட்டார்கள்.அவருக்கு என்றே சில கூட்டனிகள்,அவருக்கு என்றே சில கூட்டங்கள் அனைவரும் சேர்ந்து தமிழக குடிமகனின் பாக்கெட்டை  கிழித்து எறிந்து விட்டார்கள்.                                                                                                                                                            அப்பாவி தமிழ் ரசிகனை மொட்டை போட்டு முடித்தாகிவிட்டது. அடுத்த படத்திற்கு அட்சாரம் போட்டாகிவிட்டது.இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் ஜுரம் காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.நமது தலைவர்க்குத்தான் உடம்பிலுள்ள அத்தனை உறுப்புகளும் வேர்த்து விடுமே.அவர் பேசுவது நல்லதோ,கெட்டதோஅவருக்கே தெரியாது?வழக்கப்படி எந்த கட்சிக்கோ வாய்ஸ் கொடுக்க அவர் மனம் துடித்துக் கொண்டிருக்கிறது.                                                                                இந்நிலையில் மானமுள்ள தமிழன் என்ன செய்ய வேண்டும்?அரசியல்வாதி கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு,தங்களுக்கு பிடித்த எதிர் கட்சி தலைவருக்கு வாக்கை பதித்து விடவேண்டியதுதான்.மேலும் பல எந்திரன்ககள் கொடுக்கும் வாய்ஸ்சை இடது காதில் வாங்கி,வலது காதில் விட்டு நாம் ஒரிஜினல் தமிழன்தான் என்பதை நிருபிப்போமா?                                                                                              நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.                       

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

விஜய் அப்பா திருந்துவாரா?

                                          தலைவர்களை யாரும் உருவாக்க முடியாது ,தானாகவே உருவாக வேண்டும்.அது தான் இயற்கை.நீங்கள் இயற்கைக்கு விரோதமாக ஒரு மண்பாண்ட தலைவரை உருவாக்கிக் கொண்டிருக்கிறிர்கள்.நீங்கள் உங்கள் மகனின் மனதை என்றாவது நினைத்து பார்த்து இருக்கிறிர்களா?அவருக்கு மனம் என்று ஒன்று உண்டு.ஆசை என்று ஒன்று உண்டு.அவருக்கே ஊரிய சிந்தனை என்று ஒன்று உண்டு.நீங்கள் எதையுமே பார்க்கவில்லை.                                                                                                                                                                                   மகன் சினிமா கதாநாயகனாகிவிட்டார்.பிரபலமாகிவிட்டார்.அடுத்து அரசியலில் இறங்கி தமிழகத்து தலைவிதியே மாற்றி காட்டி விடலாம் என்று கணக்கு போடுகிறிர்கள்.உங்கள் கணக்கு தப்பில்லை.ஆனால் தமிழகத்து மக்களை கொஞ்சமாவது நினைத்து பார்த்திர்களா? அவர்கள் ஏற்கனவே சினிமா தலைவர்களிடம் தலையை கொடுத்து தான் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.எப்போதாவது ஏதாவது தீர்வு கிடைக்காதா?என்று ஏங்கி கொண்டிருக்கிறார்கள் .இந்த இலட்சணத்தில் நீங்களும் கிளம்பி உங்கள் மகனின் எதிர்காலத்தையும் கெடுத்து கொண்டிருக்கிறீர்கள்.                                                                                            அவரை அவர் போக்கில் சிந்திக்க விடுங்கள்.அவர் சினிமாவில் சாதிக்க இன்னும் எவ்வளவோ இருக்கிறது.அதை விட்டு தமிழகத்தை மாற்ற போகிறேன்,புரட்சி செய்ய போகிறேன் என்று செல்லாமல்,ஒரு மகனுக்கு உண்மையான அப்பாவாக இருப்பிர்களா?தமிழக மக்களை நல்வழியில் சிந்திப்பதற்கு உதவுவீர்களா?நீங்கள் சினிமாவில் செய்த புரட்சியை தமிழக மக்களுக்கு உணர்த்துவிர்களா?நீங்கள் சிந்திக்கும் நேரமிது.                                      நண்பர்களே பதிவை படித்து கருத்தை பகிரவும்.நன்றி.                   
 

வியாழன், 17 பிப்ரவரி, 2011

அரசாங்கம் என்று ஒன்று தேவையா?

              உலக மக்களில் பல மனிதர்கள் தனது அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிரர்கள்.அரசாங்கம் நமக்கு எதற்கு?அரசாங்கம் நமக்கு தேவையா?என்று சிந்தித்ததன் விளைவு தான் இது.இவர்கள் இப்படி சிந்திப்பதற்கு காரணம் என்ன?                                                                                             ஒவ்வரு நாட்டு அதிபர்களும்,தலைமை பொறுப்பில் உள்ள தலைவர்களும் மக்கள் நன்றாக வாழ வேண்டும்,மக்கள் வாழ்க்கையானது சிக்கலில்லாமல் அமைதியாக கழிய வேண்டும் என்று நினைக்கிறார்களா?மக்களின் பிரச்சனையை தீர்க்கதான் ,தாம் தலைவராகவோ,அதிபராகவோ இருக்கிறோம் என்று நினைக்கிறார்களா?ஆனால் மக்கள் தங்கள் பிரச்சனையைத் தீர்க்கத்தான் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்.                                                                                     ஆனால் மக்களின் எதிர்பார்ப்பிற்கு எதிராக இவர்கள் மக்களின் பிரச்சனையை கவனிப்பதே இல்லை.தான் நன்றாக இருப்பதற்கும்,தனது சொந்த பந்தங்கள்.தலைமுறைகள் சொத்து சேர்த்து சுகமாக வாழ்வதற்கும் தனது பதவியை பயன்படுத்திக் கொள்கிறார்கள்,கடைசி காலங்களில் இவர்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டால் உலகம் முழுவதும் அசையும் சொத்தாகவோ,அசையா சொத்தாகவோ எழுத்தில் எழுத முடியாத அளவிற்கு சேர்த்து வைத்து விடுகிறார்கள்.                                                                                                                                               தன்னலம்.சுயநலம் இதையே குணமாக கொண்ட தலைவர்களே நீங்கள் தனக்காக வாழாமல் தனது மக்களுக்காக வாழ்கையை அர்ப்பணிப்பிர்களா? அப்படி அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் நீங்கள் அரசியலில் ஈடுபடுங்கள்.இல்லை என்றால் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.பொறுப்பில்லாத உங்களால் மக்கள் படும் வேதனையின் விளைவு தான் இது.உலக அதிபர்களே உலக தலைவர்களே சிந்திப்பிர்களா?                                                                                                                                                     நண்பர்களே பதிவை படித்து கருத்து தரவும்.நன்றி .                       

புதன், 16 பிப்ரவரி, 2011

இஸ்லாம் முறைப்படி முஸ்லிம்கள் வாழ்கிறார்களா?

                               இன்றைய வாழ்கையில் போலித்தனங்கள் தான் நிசங்களா?மனிதர்கள் மதங்களை தீவிரமாக கடைபிடிக்கிறார்களா?கடைபிடிக்குமாறு நடிக்கிறார்களா?மதம் சொன்ன கருத்துக்களை அவர்கள் கடைபிடித்து வாழுமாறு இன்றைய வாழ்கை முறை இருக்கிறதா?இப்பொழுது உள்ள நிலையில் மனிதன் மதக்கருத்துகளை கடைப்பிடித்து வாழ முடியுமா?                                                                                                                          இஸ்லாம் முஸ்லிம்களை வட்டி வாங்குவதையோ,கொடுப்பதையோ ஹராம் [விலக்கப்பட்டது]ஆக்கியுள்ளது.இந்நிலையில் பல மனிதர்கள் வாங்குவதற்கும்,சில மனிதர்கள் வட்டிக்கு விட்டு தொழிலாகவே செய்து வரும் நிலையுள்ளது.ஆனால் இவர்கள் அனைத்தையும் செய்து விட்டு நோன்பு இருக்கிறார்கள்.5 நேரம் தொழுகிறார்கள்.இன்னும் மதம் என்ன சொன்னதோ,அதை செய்கிறார்கள்.                                                                                                                                 இவர்களுக்கு மனசாட்சி உண்டா?இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?மதத்தையா?மனிதனையா? மனிதர்கள் நல வாழ்கை வாழத்தான் மதங்கள்.மதக்கொள்கையை கடைபிடித்து வாழ முடிந்தால் வாழுங்கள் !இல்லையன்றால் என்னால் முடியவில்லை என்று தைரியமாக ஒதுங்கி கொள்ளுங்கள்.இதில் போலி வேஷம் வேண்டாம்.தனது சுய நலத்திற்க்காக மதத்தை வளைத்து உலகில் தான் வயிறு வளர்ப்பதற்காக வேஷம் போடும் கபடதாரிகலே நீங்கள் உங்கள் நிலையை மாற்றி கொள்ளுங்கள்.நீங்கள் உங்கள் வாசதிக்காக இஸ்லாமை வளைத்திர்கள் என்றால் காலம் இவ்வுலகில் உங்களை "போலித்தனங்களின் உச்சம்'' என்றுதான் சொல்லும்.                                                                               போலித்தனமாக வாழ்வதையே நிலையாக கொண்டிர்கள் என்றால்,இரட்டை வேஷம் போடுவதையே தொழிலாக கொண்டிர்கள் என்றால்,உங்களால் முறையாக இஸ்லாத்தை கடைப் பிடிப்பவர்களுக்கும் கெட்ட பெயர்.இஸ்லாத்தை வளர்க்க போகிறிர்களா?கெடுக்க போகிறிர்களா?.சிந்தியுங்கள்,முடிவு உங்கள் கையில் தான் உள்ளது.                                                                                                                                                     நண்பர்களே பதிவை படித்து அனைவரும் கருத்து சொல்லலாம்.நன்றி.                         

சனி, 12 பிப்ரவரி, 2011

மக்கள் அதிகாரத்திற்கு பணியலாமா?

                                 மனிதன் தான் வாழும் வாழ்கையில்.தன் வாழ்கையை பாதுக்காக ஏகப்பட்ட எதிர்நீச்சல் போட வேண்டியுள்ளது.நாம் வாழும் வாழ்கையில் நாம் குண்டர்கள் அதிகாரம்,காவல் துறை அதிகாரம்,அரசு அதிகாரம்,மேல் சாதி மக்களின் சாதிவெறி அதிகாரம், இன்னும் பெயரிடப்படாத பல அதிகாரங்களை கடந்து வர வேண்டியுள்ளது.இப்பொழுது நம்முள் எழும் கேள்வி நாம் அதிகாரத்திற்கு பணியலாமா?                                                 அதிகாரம் என்பது என்ன?அதிகாரம் எபபடி தோன்றுகிறது?  தான் நினைப்பது நல்லதோ,கெட்டதோ நாம் நினைத்தபடி நடக்க வேண்டும்.இப்பூமியானது பல உயிர்கள்,தாவரங்கள்,விலங்குகள் வாழ்வதற்கு உரியது என்று நினைக்காமல்,அப்படி வாழ்வதுதான் அழகு என்று நினைக்காமல் ,தான் மட்டுமே வாழ வேண்டும்,தான் அதிகாரம் செலுத்துவது போல் தனது சந்ததியினரும் அதிகாரம் செலுத்த வேண்டும் என்று நினைப்பது,இங்குள்ள இயற்கை செல்வங்களை தான் கொள்ளை அடித்து அனுபவிப்பது போல்,பன்னாட்டு கம்பனிகளும் சுரண்டுவதற்கு  அனுமதிப்பது,பொதுவாக தான் வாழ்வதற்காக இங்குள்ள இயற்கை செல்வங்களை எல்லாம் அழிப்பவரை கண்டும் காணாமல் இருப்பது என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைப்பதால் தான் பல பிரச்சனைகள் எழ காரணமாகிறது.                                                                                                                                         காடுகளில் இயற்கையாக வாழும் மலை வாழ் மக்களை விரட்டி விட்டு.அவர்கள் வாழ்வாதாரத்தை சிதைத்து விட்டு அவ்விடங்களில் உள்ள தாதுப்பொருள்களை கொள்ளை அடிப்பதற்கு பன்னாட்டு கம்பனிகள் போடும் சதி திட்டத்திற்கு ஆதரவளிப்பது,என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்தால் மக்கள் அதைக்கண்டு எதிர்க்காமல் என்ன செய்வார்கள்?இவர்கள் தங்கள் லாப வெறிக்காக கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்த பூமி பாது காத்து வந்த இயற்க்கை செல்வங்களை அழித்து இயற்கையை சேதப்படுத்தினால் யாருக்கு நஷ்டம்?இயற்கையை மாற்றினால் என்ன விபரிதம் ஏற்படும் என்பது நமது வாழ் நாளில் நாம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்இதை இந்த மூடர்கல் உணர்வார்களா?இவர்கள் தங்கள் காரியத்தை சாதிப்பதற்கு எத்தனை விதமான அதிகாரத்தை பயன்படுத்தினாலும் மக்கள் பணியாமல் எதிர்த்து தான் நிற்ப்பார்கள் உங்கள் அறிவீலிதனத்திற்கு அவர்கள் ஆதரவு தரவே மாட்டார்கள்.                                                                                                                                                                  நண்பர்களே பதிவை படித்து கருத்தை தருக .                        

வியாழன், 10 பிப்ரவரி, 2011

விஞ்ஞானிகளே நீங்களுமா?

                               எங்கள் நாட்டின் பிரமதர்,முதல்வர் ,அமைச்சர்.அரசியல்வாதி அரசு ஊழியர்.இன்னும் அரசு துறையில் உள்ள யாவருமே ஊழல் செய்ய அஞ்சாதவர்கள்.அனைத்து ஊழல்களும் செய்து விட்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எபபடி?என்று தான் பேசி வருவார்கள்.நாங்களும் அவர்கள் சொல்வதை கேட்டு பெரியவர்கள் சொல்கிறார்கள் அவர்கள் பேச்சில் உண்மை இருக்கும் என்று மண்டை ஆட்டிக் கொள்வோம்.                                                                                                       ஐயா,எங்கள் அரசியல்வாதி செய்யும் அக்கிரமங்களை எல்லாம் சகித்து,உங்களைப் போன்ற படித்த அறிவுஜீவியான நீங்கள் உங்கள் சேவையின் மூலம் எங்களுக்கு நற்பலன்களை தருவீர்கள்!என்று நம்பினோம்.ஆனால் நீங்கள் பிரதமர் அலுவலகத்திற்கே தெரியாமல் ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் மல்டிமீடியா ஒப்பந்தம் போட்டுள்ளிர்கள்.அந்த ஒப்பந்தத்தின் மூலம் நீங்கள் அனுபவித்த,அனுபவிக்க போகிற சொகுசுக்காக உங்கள் கல்வியறிவை பயன் படுத்திக் கொண்டிர்கள்.                                                                                                                                                            இந்த நாட்டில் யார்?யோக்கியன்?நான் மட்டும் ஏன்?யோக்கியனாக இருக்க வேண்டும் என உங்கள் மனசாட்சி கேட்டதா?மனசாட்சியாவது மண்ணாங்கட்டியாவது யாருக்கு வேண்டும் உங்கள் மனசாட்சி என்று நீங்கள் நினைத்து விட்டிர்களா?போதுமய்யா போதும் உங்கள் படித்த கிரிமினல் அறிவு.                                                                                                                                                     சாதாரனமக்களாகிய நாங்கள் விலைவாசி உயர்வு,அரசியல்வாதிகளின் அட்டுழியம் ஓட்டுக்காக இவர்கள் போடும் ஆட்டம்,இதை எல்லாம் பார்த்து நொந்து போயிருக்கிறோம்.இதில் நீங்கள் வேறு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிரிர்கள்.படித்தவன் சூது செய்தால் போவான் போவான் அய்யோ என்று போவான் ,என்று ஒருவர் புலம்பி விட்டு போய் சேர்ந்தான்,இதை எல்லாம் படித்து விட்டுமா நீங்கள் இவ்வழியை தேர்ந்து எடுத்திர்கள் !யாரையும் சொல்லி குற்றமில்லை ,மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழி.                                                                                                                                                                                             நண்பர்களே பதிவை படித்து கருத்தை சொல்லவும் .நன்றி                                                                                                               பின்குறிப்பு :ஆன்ட்ரிக்ஸ் என்பது இஸ்ரோ  விண்வெளி துரையின் வணிகப்பிரிவு.இவர்களின் S -பாண்ட் அலைவரிசையின் ஊழலை சொல்கிறது இக்கட்டுரை.                 

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

அன்பு கிலோ என்ன விலை?

                          இன்றைய உலக வாழ்வில் பெற்றோர் குழந்தைகளுக்கு இடையில்,உற்றார் உறவினருக்கு இடையில்,நண்பர்களுக்கு இடையில்,கணவன் மனைவிக்கு இடையில் உள்ளதெல்லாம் அன்பு தான?அன்பு என்று ஒன்று உண்டா?அன்பு என்பதன் வார்த்தைக்கு அர்த்தம் என்ன ?                                                                                                                                                               அன்பு என்பதே ஒரு சுய நலம் சார்ந்த வார்த்தை தானா? எல்லா மனிதர்களும் தனது சுயநலத்திர்காகத்தான் அன்பு செலுத்திகின்றார்களா?தான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அன்பு செலுத்திகின்றார்களா?இல்லை அன்பு செலுத்தப்படுபவர்நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறாரா?                                                           இன்றைய குழந்தைகள் தனது பெற்றோடமிருந்து என்னவெல்லாம் கறக்கலாம்,தனது ஆசையை பூர்த்தி செய்வதற்கு பெற்றோரை எவ்வாறு பயன் படுத்திக்கொள்ளலாம்? என்று எண்ணுகிறார்கள்.தனது ஆசையை பூர்த்தி செய்த பிறகு அவர்களிடம் இருப்பதெல்லாம் கறந்த பிறகு ,அவர்களது இறுதிக் காலத்தில் கண்டும் காணாமலும் செல்லும் துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது.இதன் விளைவு அவர்களது இறுதிக் காலம் முதியோர் இல்லங்களில் கழிய நேரிடுகிறது.இப்பொழுது தான் நம்முள் எழும் கேள்வி?பெற்றோர்,குழந்தைகளுக்கு இடையே ஏற்படுவது அன்பா?அப்படி அன்பு தான் என்றால் அதன் இறுதி வழி இதுதானா?இதை தீர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்.யாருக்கும் யாரும் வழி சொல்லமுடியாது.நாம் மட்டுமே சிந்திக்க வேண்டும்.சிந்திப்போமா?                                                                                                                                            நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி           

இந்த உலகம் எபபடி இயங்குகிறது ?

                    இன்று உலகில் உள்ள அனைத்து அரசியலுக்கும் காரணம் முதலாளி,தொழிலாளி பிரச்சனைதான்.முதலாளி தான் வாழ்வதற்காக ஏகப்பட்ட தந்திரங்களை அரங்கேற்றி அதில் தொழிலார்களை நடிக்க வைத்து தானும்,தன் குடும்பமும் ,தன் முதலாளி வர்க்கமும் மட்டும் நன்றாக வாழவேண்டும் என நினைத்ததன் விளைவு தான் இந்த உலக அரசியல்.                                                                                                            முதலாளி தொழிலாளியை வசப்படுத்தி ஏமாற்றுவதற்காக ஏற்கனவே உள்ள கடவுள் நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொண்டான்.கடவுள் என்று ஒன்று உண்டு,அவனுக்கு நீ சேவை செய்ய வேண்டும்.அவருக்கு [அதாவது தனக்கு ]பிடித்தமானவற்றை நீ செய்வதோடு.அவர் சொல்வதை எல்லாம் நீ கேட்க வேண்டும்.இதற்காக ஏகப்பட்ட தந்திரமான கதைகள்,கதைகள் மூலம் கடவுளை எதிர்த்தால் நீ அழிந்து போவாய் என்ற போலித்தனமான மிரட்டல்கள்.                                                                                                                                                  இந்த முதலாளிக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கோ,இல்லையோ இல்லை என்று வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்கள்.எத்தனை மதங்கள் உண்டோ,எத்தனை கடவுள் உண்டோ அத்தனையும் ஆதரிப்பார்கள்.அது வளர்வதற்காக அவர்கள் உருவாக்கிய பத்திரிக்கை,சினிமா,தொலைகாட்சி,நாடகம் இன்னும் எத்தனை ஊடக வடிவங்கள் உண்டோ அத்தனையும் பயன்படுத்தி கடவுள் நம்பிக்கையை வளர்ப்பார்.எத்தனை திருவிழாக்கள் உண்டோ அத்தனையும் ஆதரிப்பார்.அதற்க்கு தாராளமாக நிதி வழங்குவார்.அதைப் போல நீ இந்திய குடிமகன் ,இந்தியாவுக்காக நீ உயிரையும் கொடுக்க வேண்டும் என்ற போலித்தனமான நாட்டுப்பற்றையும் மனதில் விதைப்பர்.                                                                                                                                                                                      முதலாளி தான் வாழ்வதற்காக உருவாக்கியதுதான் இந்த அரசாங்கம்.அரசாங்கத்தில் உள்ள நீதித்துறை,காவல்துறை,சிறைத்துறை,அரசு ஊழியர்கள் முதலியவர்களை கொண்டு அப்பாவி தொழிலாளர்களை மிரட்டி ,அவன் உழைப்பை உள் வாங்கிக்கொண்டு,அவன் உழைப்பை சுரண்டி தான் மட்டும் நன்றாக கொளுத்து வளர்வதற்கு உருவாக்கியதுதான் இந்த அரசாங்கம்.இதை மட்டுமா செய்தார்கள்?                                                                                                                                                                                தான் நன்றாக ஆதிக்கம் செலுத்துவதைப்போல் தனது தலைமுறைகளும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக தொழிலாளிக்கு குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொடுக்க அதிக ஆர்வம் காட்டுவார்கள்.அப்பொழுது தானே அவன் அடுத்த தலைமுறை தொழிலாளியை உருவாக்க முடியும்.இப்படி உருவாக்கிய தொழிலாளிக்கு, தான் உருவாக்கிய அரசாங்கத்தின் மூலம் அரைகுறையான,அரை வேக்காட்டுத்தனமான கல்வியை கற்றுக் கொடுத்து,அவனுக்கு தேர்வு என்று ஒன்று வைத்து சில பேரை உயர் கல்விக்கும்,பல பேரை குறைந்த கல்வியில் படிக்க வைத்து பெயிலாக்கி தனது தொழிற்ச்சாலையில்,தனது நிறுவனத்தில் அடிமை வேலை செய்ய உருவாக்கிகிரார்கள்.இப்படித்தான் இந்த முதலாளி உலகம் இந்த உலகை ஆள்கிறது.                                                                                                                                                                    இந்த முதலாளி வர்க்கத்திற்கு தலைமையிடம் அமெரிக்கா.உள் நாட்டு முதாலளிகலே இவ்வளவு தந்திரங்கள் செய்யும் பொழுது,உலகை ஆள்வதற்கு அமெரிக்கா என்ன தந்திரம் செய்யும் ?அதைத்தானே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.                                                                                                                                                        நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.                                          

திங்கள், 7 பிப்ரவரி, 2011

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா?

                        இன்றைய வாழ்கை முறையில் காலையில் எழுந்து செய்தியைப் பார்த்தால் ஏதாவது சாலை விபத்து,அரசின் கவனக்குறைவினால் ஏற்படும் விபத்துகள்,தனது ஆட்சியைப் பாதுகாக்க அது பொய் என்று உலகத்திற்கே தெரிந்தும் தானும் ,தனது சக அமைச்சர்களும் நிரபராதி என்று போலித்தனமாக வாதிடுவது,சக நாட்டில் தனது இனம் சாகடிக்கப்படும்பொழுது  இங்குள்ள தலைவர்கள் அரசியல் காமடி நடத்திக்கொண்டிருப்பது,பரபரப்பான காலை வேளையில் சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்வதற்கு பறப்பது,தொழிலில் சக போட்டியாளரை சமாளிப்பதற்கு தந்திரம் வகுப்பது,உறவினர்களிடையே ஏற்படும் மனகசப்புகளை சமாளிப்பது,குழந்தைகள் பள்ளி சென்று நலமுடன் திரும்புவார்களா?என்று நினைப்பது,விலைவாசி உயர்வின் கோரமுகத்தை ஒவ்வரு பொருள் வாங்கும் பொழுதும் அனுபவிப்பது என்று இன்றைய மனிதர்கள் காலை முதல் இரவு வரை வாழும் வாழ்கையில்,மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா?                                                                                                            இதற்க்கு தீர்வாக நாம் என்ன செய்வது? காலையில் எழுந்ததில் இருந்து இரவு அடையும் வரை எந்த தினசரியோ,தொலைக்காட்சி நிகழ்ச்சியோ,இணையதள சேவையோ,பார்க்காமல் சுற்று சூழலை கவனிக்காமல் தான் உண்டு தன் வேலை என்று இருந்து விடலாமா?,இருந்து விடலாம்தான்,ஆனால் இந்த பாழாய்ப்போன மனது கேட்க மாட்டேன் என்கிறதே ,சமத்துவம் இல்லாத சமுக அமைப்பில் சக மனிதர்கள் பாதிப்படையும் போது,உண்மைக்கு புறம்பான நிகழ்வு நடக்கும் பொழுது,தனது சுய நலத்திற்காக மனிதர்கள் தரம் தாழ்ந்து போகும் பொழுது,அதை எதிர்த்து,அதை எபபடி சரி செய்யலாம்? என்று தானே மனித மனது சிந்திக்கிறது ?இது தான் மனித மனது என்பதோ ?                                                                                                                   நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.                

சனி, 5 பிப்ரவரி, 2011

மனிதனின் ஆசைக்கு அளவே இல்லையா?


                          அரசாங்கம் என்பது எதற்கு? அரசாங்கம் என்று ஒன்று தேவையா? என்று மக்கள் நினைத்து அவர்களுக்கு எதிராக வீதியில் வந்து போராடுகிறார்கள் என்றால்,இந்த மக்களை எல்லாம் அந்த அரசாங்கம் என்ன நினைத்து கொண்டிருக்கிறது?                                                       ஒரு மனிதன் கடந்த 30 வருடங்களாக ஒரு நாட்டை ஆண்டு வருகிறார்.மக்களின் நம்பிக்கையை பெற முடியாமல்,மக்களின் தேவையை நிறைவேற்ற முடியாமல் போனதால்,அதை எதிர்த்து கேட்ட அம்மக்களுக்கு எதிராக வன்முறையை ஏவி விடுகிறார்.இவர் நிலைமையை உணர்ந்து பதவி விலகாமல் இருப்பதற்கு தடையாக இருப்பது எது? ஆதிக்க உணர்வு,தான் என்ற அகங்காரம்,வாழ்வின் பெரும் பகுதியில் அதிகாரத்தை ருசித்த வெறி,இதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசை,இது தானே காரணமாய் இருக்க முடியும்.                                                                                                      உலகில் உள்ள அனைத்து அரசாங்கங்களையும் ஆளும் மனிதர்கள் தங்களது நிர்வாக கோளாறிநாளோ வயது காரணமாகவோ,செயலாற்ற முடியவில்லை என்றால் தான் ஓதுங்கி கொண்டு,அடுத்தவர்க்கு வாய்ப்பு கொடுப்பதுதான் அழகு.அதைச் செய்யாமல் ''அதிகாரத்தை நானே ருசிப்பேன் ''என்ற மனிதனின் ஆசைக்கு அளவே இல்லையா?மனிதர்களாகிய நீங்கள் சிந்திப்பீர்களா?                                                                                                        பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.                  சிந்தனை

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

அமெரிக்கா மோகம் குறையுமா?

            மாணவர்களின் காலில் கண் காணிப்பு காமிராவை பொருத்தி ஒரு அரசாங்கம் வேவு பார்க்கிறது என்றால், அந்த அரசாங்கம் அந்த மாணவர்களுக்கு என்ன விதமான கல்வி முறையை கற்றுக் கொடுக்கும்?அங்கிருந்து கற்று வரும்  மாணவர்களும் எவ்விதமான சிந்தனையில் கற்று வருவார்கள்                                                                                                                               உலகம் முழுவதும் உள்ள மக்களைச் சுரண்டி,தன் மக்கள் மட்டும் அதிக நுகர்வு கலாச்சாரத்தில் விழுந்ததின் விளைவு தான் இந்த பொருளாதார நெருக்கடி.இதனால் உலகில் உள்ள எல்லா மனிதர்களும்,ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டார்கள்.தனது சுயநலத்திற்காக அனைத்து நாட்டு அரசாங்கங்களின் உள் விவகாரங்களில் தலையிட்டு,அரசாங்கங்களையும் கவிழ்த்ததோடு,அதிபர்களையும் பலியிட்டு தன்னை நியாயப்படுத்திக்கொண்டது.இதுதான் இவர்களின் பிறவிக் குணம்.                               இந்நிலையில் யாரையுமே நம்பாத ஒரு தேசத்திர்க்கு  சென்று,அங்கிருந்து, மாணவர்கள் என்ற போதிலும் தன் தரம் தாழ்ந்து கல்வி கற்று வரும் இந்திய மாணவர்களின் மனநிலை எபபடி இருக்கும்? தான் 24 -மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறோம்,என்ற மனநிலையே அவர்களை கல்வி கற்க விடுமா? தான் மாடுகளுக்கு மணி     கட்டியதைபோன்றநிலையில்  இருக்கிறோம் என்ற சிந்தனையே அவர்களை அவர்கள் கடமையை சரி வர செய்ய அவர்களது மனது அனுமதிக்குமா?                                                                                                                                                    அமெரிக்கா          அரசாங்கத்தின் அனுமதியை முறையாக கடைபிடிக்காத கல்வி நிலையங்களின் டுபாக்கூர் வேலைதான் இது.நாம் அமெரிக்கா சென்று கல்வி பயில வேண்டும் என்ற அதீத ஆர்வத்தினால் சரியாக விசாரிக்காமல் சென்றதின் விளைவு இது.ஏதொ விசாரிக்காமல் சென்றதற்காக நீங்கள் கொடுக்கும் விலை இது.இதற்காக அவர்கள் கொடுக்கும் எதிர்வினையும் கொடுமையின் உச்சம்.இவ்வளவையும் பார்த்த  வருங்கால,இந்திய மாணவர்களின் அமெரிக்கா மோகம் குறையுமா?                                                                                                                                                                    நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.            

வியாழன், 3 பிப்ரவரி, 2011

நாம் கற்றது சிந்திக்கும் கல்வி முறையா?

            ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டதிலிருந்து இதுவரை நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருப்பது,கற்றுக் கொண்டிருப்பது மெக்காலே பிரபு என்ற ஆங்கில அதிகாரி கற்றுக் கொடுத்த கல்வி முறைதான்.ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அவர்களுக்கு கீல் வேலை பார்க்க ,அவர்கள் சொல்வதைக்  கேட்க எப்படியான கல்வி முறையை இந்தியர்களுக்கு வழங்கலாம்? என்று நினைத்ததன் விளைவு தான் நாம் கற்றுக் கொண்டிருக்கும் இந்த கல்வி முறை.                                                                                                                 இந்தக் கல்வி முறையினால் நமக்கு சுய சிந்தனை வளர்க்கப்பட்டதா?அரிய பொருள்களை கண்டுபிடிக்கும் ஆற்றலை இக்கல்வி முறை நமக்கு வழங்கியதா? இல்லை நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? இதற்கு எல்லாம் காரணம் என்ன? என்று சிந்திக்கும் ஆற்றலையாவது இந்த கல்வி முறை நமக்கு வழங்கியதா?அன்று அவர்கள் சொல்வதை கேட்டு இங்கு மண்டையாட்டினோம்,இன்று அவர்களுக்கு கீல் வேலை செய்ய அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறோம்.இங்கிருந்தபடியே  BPO வேலை மூலம் அவர்களுக்கு சேவை செய்து வருகிறோம்.                                                                             இந்திய அரசுக்கும், அரசியல்வாதிக்கும் மக்கள் நன்றாக கல்வி பயில வேண்டும்.சுய சிந்தனையுள்ள மனிதனாக வளர்க்கப்பட வேண்டும் என்று விரும்பியதை இல்லை.தனது குடிமகன் சிந்தனை செய்யகூடாது,சிந்தனை செய்தால் நாம் செய்யும் அக்கிரமங்களை கண்டுபிடித்து,நமக்கு வாக்களிக்கமாட்டார்கள்,இவன் அரை குறை அறிவோடு அரைவேக்காட்டுத்தனமாக கல்வி பயில வேண்டும்.பின் தன் அரசாங்கத்துக்குப்          பொருள் உதவி செய்யும் பெரிய முதலாளிகளின் ஆலைகளில்,தொழிலில் அவர்கள் பணிபுரிய வேண்டும் .என்பதையே நோக்கமாக வைத்தே இந்திய குடிமகன்களுக்கு கல்வி வழங்க்பப்படுகிறது.                                                                         இந்நிலையில் நாம் எப்படியான வாழ்கை வாழ்வது நமது தலைமுறைக்கு என்னவிதமான கல்வியை வழங்குவது? என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.நாம் மட்டும் தான் சிந்திக்க முடியும்.சிந்திப்போமா?                                                                        நண்பர்களே பதிவை படித்து ஏதாவது சொல்லுங்கள்.கருத்து சொல்வதுதான் அழகு.அதை செய்யுங்கள்.நன்றி.                                                                   

உறவுகளே பேணிக் காக்க முடியுமா?Post                                                                                                                                                                           
                        இன்றைய அவசர உலகத்தில் மனிதன் தனது தேவைக்காக ஓடிக்கொண்டே இருக்கிறான்.எங்கு ஓடுகிறான் ?எதற்கு ஓடுகிறான் ?என்று தெரியாமலே அவன் வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விடுகிறது.அவன் குறிப்பிட்ட நிலையை அடைந்த பிறகு திரும்பி பார்த்தால் அவன் மனநிறைவோடு வாழ்ந்தானா ?அவனால் சமூகத்திற்கு எந்த விதமான பயனையும் கொடுக்க முடிந்ததா ?சமூகத்திற்கு கொடுக்க முடிந்ததோ ,இல்லையோ தனது உறவுக்காவது நம்மால் முடிந்த உதவியை செய்ய முடிந்ததா?என்ற கேள்வி அவனுள் எழுந்தால் அவனது மனசாட்சி என்ன சொல்லும் ?அது அவனுக்கே வெளிச்சம். இந்நிலையில் அவனுள் எழும் கேள்வி உறவுகளை பேணிக் காக்க முடியுமா ?                                                                                                                                                                       யாரோ முகம் தெரியாத மனிதர்களை சந்திப்பதற்கும் ,பொழுது போக்கு என்ற நிலையில் பல இடங்களில் சுற்றி திரிவதற்கும் அனுமதிக்கும் அவனது மனது ,தனது இளமை காலத்தில் தான் வாழ்ந்த இடங்கள் ,தான் கடந்து வந்த வாழ்கைப்பாதையில் சந்தித்த மறக்க முடியாத மனிதர்கள்,தன் வாழ்வைப் போலவே பிறரது வாழ்வும் எப்படி மாறிப்போகிறது ,என்று அறியும் ஆவல் ,என்று அவனது மனம் பழங் காலத்து நினைவுகளை அசை போடுமா?அல்லது அன்றைய நிலையில் மீண்டும் இன்னும் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று தான் கணக்கு போடுமா?எப்படி ?வாழ வேண்டும் எப்படி? சிந்திக்க வேண்டும்.நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.                                                                                  நண்பர்களே பதிவை படித்து தங்கள் கருத்தை சரியோ? தவறோ?என்னிடம் பகிர்ந்து கொள்ளலாமே .நன்றி .

புதன், 2 பிப்ரவரி, 2011

இந்தியர்கள் இளிச்சவாயன்களா?

அனைத்து ஊடகங்களும் அவரது லீலைகளை படம் பிடித்து காட்டின .அவர் சார்ந்த நம்பிக்கையை ஆண்மிகவாதிக்கே உரிய சில அடிப்படை நியதிகளை மீறுவதற்கு என்னவிதமான தந்திரங்கள் செய்ய முடியுமோ? அனைத்தையும் செய்ததோடு, தான் அனைத்து உணர்வுகளும் உள்ள சாதாரண மனிதன் தான் என்பதை நிருபித்து விட்டார்.                              இந்நிலையில் தான் குற்றமற்றவன் நான் நிரபராதி,என்னை சில அரசியல்வாதிகள் பயன்படுத்தப் பார்த்தனர் என்றும் ,நான் உண்மையானவன் என்பதை நிருபிப்பதற்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை யாத்திரை சென்று உண்மையை சொல்வேன் என்றும் ,பிரதமர்,முதல்வர் ,கவர்னர் என்று அனைவரிடம் நியாயம் கேட்பேன் என்றும் ஒருவர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கிறார் என்றால் நாம் எல்லாம் என்னவிதமான மனிதர் என்று அவர் நினைத்து கொண்டிருக்கிறார்?இவருக்கு என்ன தைரியம் இருந்தால் இப்படி பேட்டியளிப்பார்?                                                                                                              2G  முலம் நாட்டிற்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படவில்லை. அவர் குற்றமற்றவர் என்று ஒரு காங்கிரஸ் மத்திய மந்திரி பேட்டியளிக்கிறார்.ஆனால் ஊழல்வாதியை c .b .i .கைது செய்கிறது.அவர் குற்றமற்றவர் என்றால் C .B .I .ஏன் ?அவரை கைது செய்கிறது                                                                                                                                                                இன்னொரு தலைவர் இருக்கிறார். அவர் மீனவர் பிரச்சனையை தீர்க்க டெல்லி சென்றார் என்று பார்த்தால் கூட்டணி பற்றி பேச சென்றாராம்.போன வழியில் பிரதமரை பார்த்து, ஐயா எங்கள் மீனவர் பிரச்சனையை தீர்க்க எதாவது செய்யுங்கள் என்றாராம்.அவர் மீனவர் பிரச்சனையா?அப்படி என்றால் என்ன? என்று கேட்டாராம் ?அதை இங்கே வந்து அவர் பேட்டியளிக்கிறார்,என்றால் நீங்கள் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தால் நாங்கள் என்ன? பாடு படுவோம்.                                                                      அய்யா,ஆன்மிகவாதிகளே[!] அரசியல்வாதிகளே இந்தியர்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ?அவ்வளவு கேவலப்படுத்தி விட்டிர்கள்.நீங்கள் சொல்வதற்கு எல்லாம் தலையை ஆட்டுவதற்கு இந்தியர்கள் என்ன இளிச்சவாயன்களா?  உங்கள் அராஜகங்களுக்கு எகிப்து மக்களே உதாரணம்.அவர்களை பார்த்திர்களா?ஆட்சியாளர்களுக்கு எதிராக எபபடிபொங்கி எழுகிறார்கள் என்று?நீங்கள் சரியில்லை என்றால்,காலமும் உங்களுக்கு எதிராக எங்களை எழுப்பி விடும்.            

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

கடவுள் என்ற "காமெடி'' பீஸ் தேவையா?

                  நாம் வாழும் வாழ்கை முறைக்கு மதம்,கடவுள் போன்ற அமைப்புகள் தேவையா? நமது வாழ்வை சிறிது பின் நோக்கிப் பார்ப்போம். நாம் பிறந்தோம்,கல்வி பயின்றோம்,வேலைக்கோ,தொழிலுக்கோ சென்றோம்.கல்யாணமாகியது குழந்தை பெற்றுக்கொண்டோம். சுகமாக வாழ்ந்து வருகிறோம்.நமது முன்னேற்றத்துக்கு நமது உழைப்பு,தந்திரம் கை கொடுத்தன.இதில் கடவுள் எங்கு வந்தார்? சிறு வயதில் இருந்தே கடவுள் என்ற ஒருவரை நம்பி வளர்ந்த நாம் அவர் ஒரு காமெடி பீஸ் என்று எப்படி?உணராமல் போனோம்.                                                                                                                                               மனிதர்களை ஏமாற்றி,பிரிவினை செய்து அவனுக்குள் உயர்வு,தாழ்வு கற்பித்து தனது சுயநலத்திற்காக ஆசைப்பட்ட சில அயோக்கியர்கள் மத அமைப்புகளையும்,அரசியல் கட்சிகளையும் ஆரம்பித்து மக்களை சிந்திக்க விடாமல் போலி நம்பிக்கைகளை புகுத்தி, பயப்படும்படியான கதைகளைச்  சொல்லி,ஏமாற்றியதன் விளைவு  தான் இந்த கடவுள், மதம் .இந்த லட்சணத்தில் இதை வைத்து பெரிய அரசியலே செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்த 21 -ஆம் நூற்றாண்டு மனிதர்கள் இதை நம்பி தமது சுய சிந்தனையை இழக்கலாமா ?                                                                                                                                 நண்பர்களே பதிவை படித்து உங்கள் கருத்துகளை நல்லதோ ,கெட்டதோ பகிரவும் .நன்றி .