இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

கடவுள் என்ற "காமெடி'' பீஸ் தேவையா?

                  நாம் வாழும் வாழ்கை முறைக்கு மதம்,கடவுள் போன்ற அமைப்புகள் தேவையா? நமது வாழ்வை சிறிது பின் நோக்கிப் பார்ப்போம். நாம் பிறந்தோம்,கல்வி பயின்றோம்,வேலைக்கோ,தொழிலுக்கோ சென்றோம்.கல்யாணமாகியது குழந்தை பெற்றுக்கொண்டோம். சுகமாக வாழ்ந்து வருகிறோம்.நமது முன்னேற்றத்துக்கு நமது உழைப்பு,தந்திரம் கை கொடுத்தன.இதில் கடவுள் எங்கு வந்தார்? சிறு வயதில் இருந்தே கடவுள் என்ற ஒருவரை நம்பி வளர்ந்த நாம் அவர் ஒரு காமெடி பீஸ் என்று எப்படி?உணராமல் போனோம்.                                                                                                                                               மனிதர்களை ஏமாற்றி,பிரிவினை செய்து அவனுக்குள் உயர்வு,தாழ்வு கற்பித்து தனது சுயநலத்திற்காக ஆசைப்பட்ட சில அயோக்கியர்கள் மத அமைப்புகளையும்,அரசியல் கட்சிகளையும் ஆரம்பித்து மக்களை சிந்திக்க விடாமல் போலி நம்பிக்கைகளை புகுத்தி, பயப்படும்படியான கதைகளைச்  சொல்லி,ஏமாற்றியதன் விளைவு  தான் இந்த கடவுள், மதம் .இந்த லட்சணத்தில் இதை வைத்து பெரிய அரசியலே செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்த 21 -ஆம் நூற்றாண்டு மனிதர்கள் இதை நம்பி தமது சுய சிந்தனையை இழக்கலாமா ?                                                                                                                                 நண்பர்களே பதிவை படித்து உங்கள் கருத்துகளை நல்லதோ ,கெட்டதோ பகிரவும் .நன்றி . 

7 கருத்துகள்:

tamilan சொன்னது…

click to read

இந்து மதத்தின் பேரால் ஏனைய சாதியினரை அடக்கவும், ஒடுக்கவும், அறியாமையில் ஆழ்த்தவும், அவமதிக்கவும் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து தாத்தாச்சாரியார் தனது 100ஆவது வயதில் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடு "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூல் எழுதினார்.

..

சேக்காளி சொன்னது…

சிந்திக்க வைக்கக் கூடிய,பயனுள்ள பதிவு.kadhar என்பவரிடமிருந்து வந்திருப்பதால் இன்னும் மதிப்பு பெறுகிறது.

kadhar24 சொன்னது…

சேக்காளி ,தமிழன் சார் உண்மையின் பக்கம் நீங்கள் இருப்பதை நினைத்து சந்தோசம் .

ரூபகாந்தன் சொன்னது…

கடவுள் கண்டிப்பாக காமெடி பீஸ் தாங்க

மைதீன் சொன்னது…

இப்பிடியெல்லாம் எழுதினா சாமி கண்ணைக் குத்திரும்

kadhar24 சொன்னது…

ஒரு கண்ணையா? இரண்டு கண்ணையா ?பதிவிற்கு நன்றி மைதீன் சார் .

G u l a m சொன்னது…

உங்கள் மீது ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக
சகோ., உங்கள் கண் முன் நிகழும் சராசரி வாழ்வை பார்த்து இக்கட்டுரையை வடித்துள்ளீர்கள். நன்று., நீங்கள் சொல்வதுப்போல பிறந்தோம் - வாழ்ந்தோம்- மரணித்தோம்.. இதில் எந்த ஒரு செயலையும் நாமும் நம்மை சார்ந்தவர்களுமே செய்கிறோம் ., கடவுள் என்பவர் இங்கு எங்கு வந்தார்..? மிக சரியான வாதம்.,இதை அடிப்படையாக தர்க்கரீதியான எனது சில கேள்விகளுக்கு பதில் தாருங்கள்
(1) கடவுள் வேண்டாம் அவர் கூறும் கோட்பாடுகள் வேண்டாமென்றால் எல்லோருக்கும் பொதுவான ஒரு கொள்கை கோட்பாட்டை அதுவும் மனித சமுதாயம் முழுவதும் பின்பற்றதகுந்த முறையில் உருவாக்க வேண்டும் முடியுமா..?
(2) ஒவ்வொரு இடத்திற்கு இடம் நாட்டுக்கு நாடு என தனிப்பட்ட கலாச்சார குறீயிடுகள் இருக்கிறது. ஆக ஒரு இடத்தில் அல்லது நாட்டில் தவறாக தெரியும் ஒரு செயல் பிறிதொரு இடத்தில் அல்லது நாட்டில் சரியாக தெரிகிறது -அதற்கு எடுத்துக்காட்டாக, ஆடை உடுத்தும் முறையை எடுத்துக்கொள்ளுங்கள், மேற்கத்திய நாடுகளில் பெண்கள் உடுத்தும் ஆடை நமது இந்திய நாட்டில் ஆபாசமாக தெரிகிறது., கடவுளின் தலையீடு வேண்டாமென்றால் இங்கு எந்த கலாச்சாரத்தை பின்பற்றுவது வாழ்வியலுக்கு சரியானது ?
(3) ஒரு செயலை செய்வதால் ஏற்படும் விளைவை வைத்து இது தவறு அல்லது சரி என்பதை எதை அடிப்படையாக வைத்து வரையறை செய்கீறீர்கள்..?
மனசாட்சி...? சொல்லும் வித்தில் செயல்பட்டால் அதுவே போதுமானது என்றால்.. நிச்சயமாக மனித மனசாட்சி எல்லா நிலைகளிலும் நூறு சதவீகித நன்மையே மட்டுமே எப்போதும் நாடாது.,

//மனிதர்களை ஏமாற்றி,பிரிவினை செய்து அவனுக்குள் உயர்வு,தாழ்வு கற்பித்து தனது சுயநலத்திற்காக ஆசைப்பட்ட சில அயோக்கியர்கள் //
.இங்கு //சுயநலத்திற்காக// என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கு எப்படி கடவுள் காரணம் விளக்குவீர்களா..சகோ?

போதுமென நினைக்கிறேன்., மேலும் நாத்திக / கடவுள் கருத்து பரிமாற்றத்திற்கு நான் முஸ்லிம் தளத்தை ஒரு முறை பார்வையிடுங்கள்.
இறை நாடினால் இனியும் சந்திப்போம்