இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

தமிழனின் சாபம் ''சும்மா''விடுமா?

ஒரு மனிதன் தான் யார்? தான் வாழ்வது எதற்கு? தன்  பலம் என்ன?  தன்னால் சமூகத்திற்கு பலன் உண்டா? தனது சக்தியைக்கொண்டு சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியுமா? அப்படி சமூகத்திற்கு சேவை செய்ய தனது மனதிற்கு தைரியம் உண்டா? யாருடைய கைப்பாவையாக இல்லாமல் தன்னால் சுயமாக சிந்திக்க முடியுமா? என்றல்லாம் யோசிக்க வேண்டும்.இது தான் ஒரு தரம் உள்ள மனிதனின் செயல்.


''தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது ''.இது ரஜினி கடந்து  போன தேர்தலில் உதிர்த்த வார்த்தை.அதனால் ஆட்சி மாறியது . இப்பொழுது உள்ள நிலையில் ''தமிழ்நாட்டை ஆண்டவனால் காப்பாற்றமுடியும் ''என்று இவர் நினைக்கிறாரா? சொல்லுங்கள் ரஜினி.

நீங்கள் சினிமாத்துறையில் இருக்கிறிர்கள்.சினிமாத்துறை என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறது  என்பது உங்களுக்கு தெரியும்.ஒரு மேடையில் நீங்கள் சொல்ல முடியாததை நடிகர் அஜித் தைரியமாக சொன்னார்.இவ்வளவு ஆதிக்கம் சினிமாத்துறையில் நடந்து கொண்டிருக்கிறது .இதை உங்கள் படம் எந்திரநிலே உணர்ந்து இருப்பிர்கள். 

இப்பொழுது தேர்தல் நெருங்கி விட்டது.உங்களுக்கு சுய சிந்தனை உண்டு என்று நாங்கள் நினைக்கிறோம்.பலவிதங்களில் உங்களுக்கு நெருக்கடி தந்து ஏதாவது ''வாய்ஸ்''கொடுங்கள் என்று யாராவது உங்களை கட்டாயப்படுத்தலாம்.நீங்களும் உணர்ச்சி வசப்பட்டு இவர் இவருக்கு வாக்களித்தால் ''இந்த  பூமியே சுற்றாது''என்றல்லாம் பஞ்ச் வசனம் பேசி விடாதிர்கள்.இதை ஏன்? நாங்கள் சொல்லுகிறோம்  என்றால் நீங்கள் எந்த நேரத்தில் என்ன பேசுவீர்கள் என்று நீங்கள் நம்பும் அந்த ஆண்டவனுக்கே தெரியாது.நீங்கள் பாட்டுக்கு ஏதாவது பேசிவிட்டு ''அந்த ஆண்டவன் சொன்னான் இந்த அருணாச்சலம் செய்தான் ''என்ற ரீதியில் பேசினீர்கள் என்றால் ,தமிழனின் சாபம் உங்களை சும்மா விடாது இதை நீங்கள் உணர்வீர்களா?

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.

கருத்துகள் இல்லை: