இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

திங்கள், 28 மார்ச், 2011

அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா?

சண்டே.அப்பா ஓய்வு நாள்.தொலைகாட்சியில்  டிஸ்கவரி சானலில் ஏதாவது அறிவியல் நிகழ்ச்சியை பார்ப்போம்,பரபரப்பான தேர்தல் செய்தியை பார்ப்போம் என்ற ஆவலில் ரிமோட்டை மாற்றினால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

முதலில் ராஜ் தொலைக்காட்சியில் எதோ சினிமா கலாட்டாவாம்.இரு நடிகர் நடிகைகளின் உருவத்தை ஓட்டி வைத்துக்கொண்டுகீழே அலைபேசி எண்ணை தொடர்ப்பு  கொள்ள வேண்டுமாம்.சரியாக சொன்னால் 50 ஆயிராமாம்.தொடர்ப்பு கொள்வதற்கு நிமிடத்திற்கு 10 ரூபாயாம்.அவ்வுருவத்தை பிறந்த குழந்தை பார்த்தால் கூட சொல்லிவிடும்.ஆனால் தொடர்ப்பு கொண்ட யாரும் சரியாக சொல்லவில்லை.இப்படியும் ஒரு ஏமாற்று.
அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ராசிக்கல்,அதிர்ஷ்ட பெயர்,மற்றொரு சேனலில் தாயத்து,அம்மன் எந்திரம்,அடுத்த சேனலில் ஜோசியம்,உங்கள் ராசிக்கு என்ன பலன்?மற்றொன்றில் ஆண்மைக்குறைவா எங்களிடம் வாருங்கள் லேகியம் தருகிறோம்.இதுபோக நிசம் நிகழ்ச்சி என்ற பெயரில் பில்லி,சூனியம்,ஆவி,பேய் மாந்திரிகம்.அப்பப்பா போதுமடா சாமி,இவர்களும் இவர்கள் தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளும்.அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா?
ஐயா,தொலைகாட்சி அதிபர்களே,நிர்வாகிகளே உங்களுக்கு விளம்பரம் கிடைக்கவில்லை என்றால் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துங்கள்.தமிழர்களை எவ்வளவு கிறுக்கனாக ஆக்க முடியுமோ,எவ்வளவு மூடநம்பிக்கைவாதியாக மாற்ற முடியுமோ,அப்பாவி மக்களை எவ்வளவு பயம் காட்டிஉங்கள் ரேட்டிங்கை உயர்த்த முடியுமோ அனைத்தையும் செய்து விட்டு நீங்கள் தொலைகாட்சி நடத்துவதை விட கௌரவமான தொழில் நிறையவே உள்ளது.அதைச் செய்யலாம்.செய்வீர்களா?
நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும் .நன்றி .                        

6 கருத்துகள்:

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

சாட்டையடி பதிவு...

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_29.html

மைதீன் சொன்னது…

நல்ல பதிவு .இவர்கள் கொடுமையை இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்

மைதீன் சொன்னது…

உங்களுக்கும் சன்டே தான் ஓய்வு நாளா? வெரிகுட்

Chitra சொன்னது…

.தமிழர்களை எவ்வளவு கிறுக்கனாக ஆக்க முடியுமோ,எவ்வளவு மூடநம்பிக்கைவாதியாக மாற்ற முடியுமோ,அப்பாவி மக்களை எவ்வளவு பயம் காட்டிஉங்கள் ரேட்டிங்கை உயர்த்த முடியுமோ அனைத்தையும் செய்து விட்டு

...... இந்த ஆதங்கம் எனக்கும் உண்டு. ஆனால் என்ன செய்ய? மக்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரியவில்லையே.

okyes சொன்னது…

நன்பா! அறிவற்ற ஆதிக்கங்கள் அதிவிரவிக் கிடக்கின்றன சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும். இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.

விக்கி உலகம் சொன்னது…

சாட்டையடி பதிவு...