இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

.நாமெல்லாம் மனிதர்களா?விலங்குகளா?

ஒரு மனிதன்,இந்த உலகில் எப்படி நிம்மதியாக வாழ்வது?எதையும் சிந்திக்காமல் எதையும் வாசிக்காமல் எந்த நிகழ்வையும் பார்க்காமல் தாம் உண்டு தம் வேலை உண்டு என்று இருந்து விடலாமா?என்று எனக்கு அடிக்கடி மனக்கசப்பு ஏற்ப்படுவதுண்டு.நாமல்லாம் மனிதர்களா?இல்லை விலங்குகளா?என்று அடிக்கடி எனக்கு சந்தேகம் வந்து கொண்டே இருக்கிறது.

இணையதளங்களிலும்,ஊடகங்களிலும் இலங்கையில் ஏற்ப்பட்ட மனித உரிமை மீறல்களை கண்டால் உடம்பு முழுவதும் பதறுகிறது.கொடூரமாக கொள்ளப்படும் ஆண்கள்,நிர்வாணமாக்கப்பட்டு சிதைக்கப்பட்டு கொல்லப்படும் பெண்கள்,வெடி குண்டுகளினால் கைகளையும்,கால்களையும் உடல் உறுப்புகளையும் இழந்து கதறும் குழந்தைகள் என்று காட்சிகளை பார்க்க,பார்க்க இதயமே வெடித்து விடும் போல் இருக்கிறது.அனைவரையும் அழித்தப்பிறகு அங்குள்ள நல்[!]வாழ்வு முகாமில் மீதிருக்கும் மனிதர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வாழும் வாழ்க்கை நிலையைக் கண்டால் கண்களில் ரத்தம் தான் வருகிறது.

உலகத்தின் போர்க் குற்றவாளி என ஐ.நா.சபையினால் அழைக்கப்பட்ட ராஜப்பக்சேயின் கொடூரங்கள் ஒருபுறம் இருக்கட்டும்,ஐயா,உலகம் முழுவதும் பரவி இருக்கும் இலங்கை தமிழர்களே உங்கள் நல்வாழ்வுக்கு,இலங்கையில் மீதி வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இங்குள்ள அரசியல்வாதி யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை.பழ.நெடுமாறன்,வை.கோ,சீமான்,தமிழருவி மணியன் இன்னும் சில சாதாரண மனிதர்கள் இவர்கள்தான் உங்களுக்காக இங்கு பேசியும்எழுதியும் வருகிறார்கள்.

அரசியல்வாதி என்று சொல்லிக்கொள்பவர்கள்,முதல்வர் என்று சொல்லிக்கொள்பவர்கள் யாவரும் உங்களை வைத்து தமிழர்களிடையே எப்படி ஓட்டு சேகரிப்பது என்றுதான் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.உங்களை வைத்து மட்டும்மல்ல இங்குள்ள காமடி நடிகர்களை வைத்து இவர்கள் ஓட்டு வேட்டையாடும் நிகழ்வைக் கண்டால் நாம் எல்லாம் ஏன்?தமிழராய் பிறந்தோம் என வெட்கித் தலை குனிய வேண்டியருக்கிறது.நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள பச்சை தமிழனை நம்பாதிர்கள்.இவர்கள் எல்லாம் கபடதாரிகள்.இவர்கள் தங்கள் குடும்பங்களை மட்டுமே உயர்த்த வந்த சுயநலக்காரர்கள்.நீங்கள் யூதனாய் பிறந்தால் கூட உங்களை காப்பாற்ற அமெரிக்கா இருக்கிறது.ஆனால் நீங்கள் செய்த ஒரே பாவம் தமிழனாய்ப் பிறந்தது.


நண்பர்களை பதிவைப் படித்து கருத்தை தரவும். நன்றி.
                         

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

ஆதம் ஒரு கொடூரனா?

மனிதனின் தீராத ஆசையினாலே இன்று பல பாவங்கள் பவனி வருகின்றன.''அந்த கனியை புசியாதே'' என்று கடவுள் கட்டளையிட்ட பின்பும்,ஏவாளின் தூண்டுதலின் பேரில் ஆதம் அக்கனியை பறித்து உண்ண முதல் பாவம் நிறைவேற்றப்பட்டது.இக்கதை பைபிளில் உள்ளது.

ஆதம் வரலாற்றில் செய்த முதல் பாவம் இன்று காலங்காலமாக தொடர்ந்து வருகிறது.ஆதத்தின் ஆவி இன்று பல தலைமுறைகள் தாண்டியும் மனித மனங்களில் சம்மணமிட்டு ஆதிக்கம் செலுத்திகிறது என்றால் அது ஆதம் என்ற பெயரின் மகிமை தானோ?

ஆதத்திற்கு சுய சிந்தனை உண்டா?இந்த உலகில் நல்லது எது?கெட்டது எது?என்று பகுத்து பார்த்து அறியும் அறிவு உண்டா? இந்த உலகம் அனைத்து மனிதர்களுக்கும் உரியது என்று எண்ணாமல் தனக்கு மட்டுமே உரியது என்று எண்ணும் மனநிலைக்கு உரியவரா?உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தாம் சிறந்த முன்னுதுரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணாமல் தனது சிறு மூளையின் மூலமும்,குறுகிய  புத்தியின் மூலமும் இந்த உலகத்தை தவறான பாதைக்கு அழைத்து சென்ற மனநிலையை என்னவென்று சொல்வது?

ஆதத்திற்கு என்றுமே சுய சிந்தனை கிடையாது.அவர் எப்போதுமே அவரின் மனைவி தலையாட்டுதலின் பேரில் தான் வாழ்ந்தார்.வரலாறு செய்த பாவத்தின் விளைவு இன்று உலகில் ஆதம் என்ற பெயர் உள்ள அனைத்து மனிதர்களுமே அப்படித்தான் இருப்பார்களோ?என்னவோ?

ஐயா,மனிதர்களே நீங்கள் ஆதம் போல் வாழாமல்,ஆலம் [ஆலமரம் ]போல் வாழ்ந்தால் உலகம் சுபீட்சமடைவது போல் உங்கள் தலைமுறையும் குறைவில்லாமல் நீடித்து வாழும்.இதை மனிதனாகிய நாம் உணர்வோமா?        
  

புதன், 6 ஏப்ரல், 2011

இந்த உலகத்தின் முடிவு நம் கையீளா?

இந்த உலகம் தான் எவ்வளவு இயற்கையானது.எவ்வளவு அழகானது.பூமிப்பந்தில் முக்கால்வாசி நீரும்,கால்வாசி நிலமும் சேர்ந்து,விண்வெளியில் இருந்து பார்த்தால் [உபயம் ;டிஸ்கவரி சேனல்]நீல நிறத்தில் அதன் அழகே தனி.

நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்கு சென்ற பொழுது பூமிப்பந்தை பார்த்து அதன் அழகை,அதன் கோள வடிவத்தை கண்டு அவர் விவரித்த பாங்கு அலாதியானது.அக்காலக்கட்டங்களில் விண்வெளியில் இருந்து பூமியை பார்த்தால் பசுமை நிறத்தில் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.ஆனால் இன்று?விஞ்ஞானிகள் என்ன சொல்லுகிறார்கள்.''எரிந்த கரும் பந்து''போல் பூமி உள்ளது.இயற்கையை எந்த அளவுக்கு சிதைத்திருக்கிறோம்.

மனிதனின் நாடு பிடிக்கும் ஆசையில்,தன் உற்பத்தி பொருள்களை உலகம் முழுவதும் விற்ப்பதற்கு அவன் செய்யும் தந்திரத்தில்,தன் நாட்டின் பெட்ரோல் தேவைக்காக உலகத்தில் எங்கெல்லாம் பெட்ரோல் வளம் உள்ளதோ அந்த நாட்டில் எல்லாம் உள் நாட்டு கலவரங்களை ஏற்ப்படுத்தி,தான் உற்பத்தி செய்த ஆயுதங்களை சோதிக்கும் இடமாகவும்,மென்மேலும் ஆயுதங்களை உற்பத்தி செய்து லாபம் ஈட்டுவதற்கும் அவன் செய்யும் தந்திரம் சொல்லி மாளாது.

போர்களினாலும்,அதிக வாகன உற்பத்தியாலும்,அதிக நுகர்வு பொருள்களினாலும் இயற்கை செல்வங்களை அழிப்பதின் மூலமாகவும்,இந்த பூமி அதன் இயற்க்கை தன்மையிலிருந்து எவ்வளவு மாற்ற முடியுமோ அவ்வளவு மாற்றி விட்டோம்.இதன் விளைவு என்ன?


முக்கால்வாசி நீர் உள்ள இந்த பூமியில்,கால்வாசி நிலத்தில் உள்ள இந்த மனிதர்கள் செய்யும் அட்டூழியத்தால் இயற்க்கை அதன் சமன் நிலையை இழக்கும்.துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகும்.கடலின் நீர் மட்டம் உயரும்.முக்கால்வாசி நீர்,பூமி முழுவதுமாக நீராக மாற்றப்படும்.உலகம் அழியும்.

இதற்க்கு என்ன ஆதாரம்?என்று கேட்கிறிர்களா?இதற்க்கு ஆதாரம் வேண்டுமா?முடிவு மனிதர்களாகிய நம் கையில்தான் உள்ளது.சிந்திப்போமா?

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி

திங்கள், 4 ஏப்ரல், 2011

கடவுளை கண்டுபிடித்த ''சூப்பர் ஸ்டார்''யார்?

இந்த உலகில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு,அவற்றில் பல காலாவதியாகி மறைந்தே விட்டது.சில இன்றும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.அவற்றில் ஒன்றுதான் ''கடவுள்'' என்ற கருத்தாக்கம்.இந்த கடவுளை கண்டு பிடித்து,இந்த உலகத்தில் உலவ விட்ட மகாராசனை உண்மையிலே பாராட்ட வேண்டும்.அவருக்கு எவ்வளவு தொலைநோக்கு பார்வை இருந்தால்,இந்த ஒரு வார்த்தைக்குத்தான் மனிதன் பயப்படுவான் என்று சிந்தித்து,இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருப்பார்.


யாரோ கண்டு பிடித்த இந்த கடவுளை இன்று மனிதர்கள் அவர் அவர்களின் சுயநலத்திற்காக எப்படி எல்லாம் பயன் படுத்திக்கொள்கிறார்கள்.ஒரு நாட்டை ஆக்கிரமித்து கொள்வதற்கு,ஒரு இனத்தை அழிப்பதற்கு தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கு,அப்பாவி தொழிலாளர்களை பயம் காட்டி வழி நடத்தி செல்வதற்கு,குடும்பங்களில் தனது தலைமை பணியை தக்க வைத்துக் கொள்வதற்கு,ஊர்த் தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு இன்னும் விவரிக்க முடியாத அனைத்து செயல்களுக்கும் கடவுளையே ஆதாரமாக கொண்டு மனிதர்களை பணிய வைக்கிறார்கள்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்தகடவுளை பிடித்து தொங்கி கொண்டிருப்பார்கள்.ஐயா,நவீன மனிதர்களே,நீங்கள் ஏதாவது புதிதாக ஒன்றை  கண்டுபிடித்து அறிமுக படுத்துங்களேன்.  அதுவரைக்கும் இந்த கடவுளுக்கு  ''எக்ஸ்பரி டேட்டே''கிடையாதா?

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

உங்கள் ஓட்டு யாருக்கு?

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி விட்டது.இருமுனை போட்டி நிகழ்கிறது.தி .மு .க,அ.தி .மு க   இரு அணிகளில் ஜெய்க்க போவது யாரு?ஓட்டு போடுவதற்கு முன் இரு அணிகளின் பலம்,பலவீனம் தெரிந்து கொண்டால் நல்லது தானே. முதலில் தி.மு.க.

தி.மு.க.வின் பலம் 

1 .தமிழகம் முழுவதும் பாலங்கள் கட்டி நகரை அழகு படுத்துவது.
2 .சமச்சீர் கல்விமுறையை நடை முறை படுத்துவது.
3 .மினி பேருந்து வசதியை ஏற்படுத்தியது.
4 .1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி கொடுத்து ஏழைகளை ஆதரித்தது.
5 .உழவர் சந்தையை ஆரம்பித்தது.

தி.மு.க.வின் பலவீனம் 

1 .2 G ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்தியாவிலேயே வரலாறு காணாத ஊழல் செய்தது.
2 .மதுரையை சுற்றி கிரானைட்டு கொள்ளை.
3 .மணல் கொள்ளை.
4 .தமிழ் நாடு முழுவதும் தெருவுக்கு தெரு ''டாஸ்மாக்''கை தொடங்கி தாய்மார்களின் வயிற்றில் அடித்தது.
5 .கட்டபஞ்சாயத்து,ரௌடி இசத்தை ஒடுக்காதது.
6 .சாதாரண மக்களால் சமாளிக்க முடியாதபடி விலைவாசி உயர்வு.
7 .மின் தட்டு பாடு.
8 .தமிழகம் முழுவதும் வாரிசுகளின் அடாவடி.
9 .திரைத்துறையில் அனைத்து வாரிசுகளின் ஆதிக்கம்.
10 .இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை பிச்சை காரனாக்கியது.
11 .தமிழக மீனவர்கள் பிரச்சனையை கண்டும் காணாமலும் இருப்பது.
12 .ஈழ தமிழர் பிரச்சனையில் தன்னால் சாதிக்க முடியும் என்ற வாய்ப்பிருந்தும் ,மௌனமாக இருந்தது.
13 .வாரிசுகளுக்கு பதவி வாங்கி தர மட்டும் டெல்லி செல்வது .
14 .தொலை நோக்கு பார்வை இல்லாதது.
15 .வாரிசுகள் T .V .,ரேடியோ,விமானகம்பெனி என பணத்தை குவிப்பது.

அ .தி .மு க .வின் பலம் 


1 .குடும்ப உறுப்பினர்,வாரிசுகள் அதிகம் இல்லாததால் சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாதது.
2 .லாட்டரி சீட்டை ஒழித்தது.
3 .ரௌடி இசம்,கட்டபஞ்சயத்தை தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுத்தது.
4 .மழைநீர் சேகரிப்பை ஊக்குவித்தது.
5 .தொட்டில் பெண் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தது.
6 .துணிந்து முடிவு எடுக்கும் திறன்.
7 .கந்துவட்டி தடை சட்டத்தை கொண்டு வந்தது.

அ,தி.மு.க வின் பலவீனம்

1 .கூட்டணி கட்சிகளை மதிக்காமல் ''தான் தோன்றி தனமாக ''நடந்து கொள்வது.
2 .சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம்.
3 .சிறந்த எதிர் கட்சியாக செயல் படாமல் இருப்பது.
4 .சிறுபான்மை இனத்தவரை கண்டு கொள்ளாமல் இருப்பது.
5 .இவ்வளவு அனுபவம் பெற்றும் அரசியல் நெளிவு சுழிவுகளை படிக்காமல் இருப்பது.
6 .சிறந்த பேச்சாளர்கள் இல்லாதது.

இது எனது பார்வை தான்.இதில் விடுபட்டது நிறைய இருக்கலாம்.உங்கள் பார்வையையும் சேர்த்து ,சிந்தித்து வாக்களிக்கவும்.என்ன சரிதானே.

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி. 

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

தமிழனின் சாபம் ''சும்மா''விடுமா?

ஒரு மனிதன் தான் யார்? தான் வாழ்வது எதற்கு? தன்  பலம் என்ன?  தன்னால் சமூகத்திற்கு பலன் உண்டா? தனது சக்தியைக்கொண்டு சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியுமா? அப்படி சமூகத்திற்கு சேவை செய்ய தனது மனதிற்கு தைரியம் உண்டா? யாருடைய கைப்பாவையாக இல்லாமல் தன்னால் சுயமாக சிந்திக்க முடியுமா? என்றல்லாம் யோசிக்க வேண்டும்.இது தான் ஒரு தரம் உள்ள மனிதனின் செயல்.


''தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது ''.இது ரஜினி கடந்து  போன தேர்தலில் உதிர்த்த வார்த்தை.அதனால் ஆட்சி மாறியது . இப்பொழுது உள்ள நிலையில் ''தமிழ்நாட்டை ஆண்டவனால் காப்பாற்றமுடியும் ''என்று இவர் நினைக்கிறாரா? சொல்லுங்கள் ரஜினி.

நீங்கள் சினிமாத்துறையில் இருக்கிறிர்கள்.சினிமாத்துறை என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறது  என்பது உங்களுக்கு தெரியும்.ஒரு மேடையில் நீங்கள் சொல்ல முடியாததை நடிகர் அஜித் தைரியமாக சொன்னார்.இவ்வளவு ஆதிக்கம் சினிமாத்துறையில் நடந்து கொண்டிருக்கிறது .இதை உங்கள் படம் எந்திரநிலே உணர்ந்து இருப்பிர்கள். 

இப்பொழுது தேர்தல் நெருங்கி விட்டது.உங்களுக்கு சுய சிந்தனை உண்டு என்று நாங்கள் நினைக்கிறோம்.பலவிதங்களில் உங்களுக்கு நெருக்கடி தந்து ஏதாவது ''வாய்ஸ்''கொடுங்கள் என்று யாராவது உங்களை கட்டாயப்படுத்தலாம்.நீங்களும் உணர்ச்சி வசப்பட்டு இவர் இவருக்கு வாக்களித்தால் ''இந்த  பூமியே சுற்றாது''என்றல்லாம் பஞ்ச் வசனம் பேசி விடாதிர்கள்.இதை ஏன்? நாங்கள் சொல்லுகிறோம்  என்றால் நீங்கள் எந்த நேரத்தில் என்ன பேசுவீர்கள் என்று நீங்கள் நம்பும் அந்த ஆண்டவனுக்கே தெரியாது.நீங்கள் பாட்டுக்கு ஏதாவது பேசிவிட்டு ''அந்த ஆண்டவன் சொன்னான் இந்த அருணாச்சலம் செய்தான் ''என்ற ரீதியில் பேசினீர்கள் என்றால் ,தமிழனின் சாபம் உங்களை சும்மா விடாது இதை நீங்கள் உணர்வீர்களா?

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.