இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

திங்கள், 31 ஜனவரி, 2011

நாம் வாழும் வாழ்கை முறை சரிதானா?

              இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் ,சிந்தனைகள் ,வாழ்கைபோக்குகள் .மனிதனின் பெரும் பகுதிக் காலத்தை பொருள் சேர்பதிலேயே கழிக்க வேண்டியவுள்ளது .இச் சூழ்நிலையில் நம்முள் எழும் கேள்வி நாம் வாழும் வாழ்கை  முறை சரிதானா   ?                                                                                                      காலையில் எழுந்து இரவு அடையும் வரை மனிதன் ஏதாவது பொருளை வாங்கவோ ,விற்கவோ செய்ய நமது ஊடகங்கள் செய்யும் தந்திரம் சொல்லிமாளது .நாளிதழ் ,வானொலி ,தொலைக்காட்சி ,அலைபேசி ,தொலைபேசி ,சுவரொட்டி டிஜிட்டல் பேனர்கள் ,இணையத்தளம் ,ஏதாவது பரிசு பொருளை கொடுத்து அதன் வடிவில் என்று சொல்லிகொண்டே போகலாம் .மக்கள் ஏதாவது ஒரு பொருளை அது தேவையோ தேவை இல்லையோ .வாங்கி குவித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற நுகர்வுவெறி ஒவ்வொரு மனிதனினும் மூளையில் ஏற்றபடுகிறது.பொருள்களை வாங்கி குவிப்பது தான் உயர்வான வாழ்நிலை என்ற மாயத்தோற்றம் போதிக்கபடுகிறது .அதுவும் குறிப்பாக இந்த நகை கடை விளம்பரங்களில் பெண்களை எந்த சுய சிந்தனையும் இல்லாத மாக்களைப் போல் காண்பிப்பது அதன் உச்சம் .ஆணாதிக்கம் நிறைந்த ஊடக இயக்குனர்கலே உங்கள் வீட்டுப் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறிர்களா?உங்கள் சுய நலத்திற்க்காக தவறான பிம்பங்களை ஏற்ப்படுத்தாதிர்கள் .                                                                                                                      ஓடிக்கொண்டே இருக்கும் நகர வாழ்வில் மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தம் ,ரத்த அழுத்தம் ,இன்னும் பெயர் தெரியாத பல நோய்கள் மறைவதற்கு நாம் என்ன மாதிரியான வாழ்கை முறை வாழ வேண்டும் என்று திர்மானித்தே தீரவேண்டும் .நுகர்வு கலாச்சாரம் என்ற மாயவலையில் விழுந்து விடாமல் ,பொருள்களை வாங்கி குவிப்பதுதான் உயர்வான வாழ்கை முறை என்ற நிலைக்கு வந்து விடாமல் .நமது தலைமுறைக்கு தவறான பழக்கத்தை கற்றுக் கொடுக்காமல் வாழ்வதுதான் சிறந்த வாழ்கை என்று தோன்றுகிறது .நாம் சிந்திக்கும்  நேரமிது .                     .      தலைவா பதிவை படித்து கருத்தை பதியவும்.                                             

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கணவரைக் கொன்றவர்களை மன்னிக்கமுடியவில்லையா ?

அம்மா உங்கள் கோபம் புரிகிறது .உங்கள் குழந்தைகளுக்கு தந்தை இல்லையே என்ற வருத்தம் புரிகிறது .உங்கள் குழந்தைகள் தந்தைக்கு ஏனம்மா ?இந்தநிலை என்று கேட்கும்பொழுது நீங்கள் அடையும் மனவேதனை எங்களுக்கு புரிகிறது .யாரோ செய்த சில முன் யோசனை இல்லாத நிகழ்வுக்காக ஒட்டு மொத்த தமிழர்கலேயே உங்களுக்கு பிடிக்கவில்லை என்ற எண்ணம் புரிகிறது .இதற்கு பிரயாசித்தமாக நீங்கள் எவ்வளவோ விசியங்கள் செய்து விட்டிர்கள் .உங்கள் குழந்தைகளைப் போன்று இன்று பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் தந்தை ,தாயை இழந்து நமக்கு ஏன்? இந்த நிலைமை ?நாம் ஏன் வாழ்கிறோம் ?என்று யாரிடம் கேட்பது என்று தெரியாமலே உலகம் முழுவதும் ,உங்கள் குழந்தைகளை போன்று ,கண்ணை கட்டி காட்டில் விட்டவரைபோல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் .இதே மன நிலையில் வளரும் ஆ யிரக்கணக்கான குழந்தைகள் வரும் காலங்களில் என்னவிதமான சிந்தனையில் வளர்வார்கள் ?என்று நினைக்கும் பொழுது அச்சமாகத்தான் இருக்கிறது .போனது போகட்டும் ,நீங்கள் நினைத்தபடியே பல விசியங்கள் நடந்து முடிந்து விட்டன .நீங்கள் நினைத்தால் எல்லாவற்றையும் முடித்து வைத்து விடலாம் .அதற்கான மனநிலை உங்களுக்கு வருவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் .நீங்கள் நினைத்தால் அனைவரையும் மன்னித்து விடலாம் .அதற்குரிய அனைத்து அம்சங்களுமான அன்பு, அறிவு,தாய்மை உணர்வு,நல்லது கெட்டது சீர் தூக்கி பார்க்கும் அனுபவ அறிவு அனைத்தும் உங்களிடம் உள்ளன .இருப்பவரிடம் தான் கேட்க முடியும் .உங்களிடம் அனைத்து அம்சங்களும் இருப்பதால்தான் உங்களிடம் வேண்டுகிறோம் .இதற்குரிய மனநிலை உங்களுக்கு வருமா ?வரும் ஏனன்றால் நீங்கள் தாய் உள்ளம் படைத்தவர் தானே .                                                                                                                                            அன்புள்ளவர்களே பதிவை படித்து கருத்தை கவனமாக பதியவும் .நன்றி .      

சனி, 29 ஜனவரி, 2011

இந்திய குடிமகனாய் பிறந்தது தப்பா ?

                       கருப்பு பணத்தை பதுக்கி வைத்திர்பவர்களின் பெயர்களை வெளிட முடியாது ,சேதாரம் ஆகும் உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு வழங்கமுடியாது ,தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ,வெறும் கண்துடைப்பாக அறிக்கையை மட்டும் வெளியிடுவது ,விலைவாசி விஷம் போல ஏறிக்கொள்ள காரணமான பெட்ரோல் ,டீசல் விலையின் விலையை தீர்மானிக்கும் பொறுப்பை தனியார் கம்பெனிகளிடம் கொடுத்தது ,விலைவாசி உயர்வுக்கு மிக முக்கியமான காரணமான ஆன்லைன் டிரய்டிங் முறைக்கு தடை சொல்லமால் இருப்பது ,சில்லறை வணிகத்தில் பெரும் நிறுவனங்களை அனுமதித்ததோடு ,பன்னாட்டு நிறுவனமான வால்மார்ட் போன்ற நிறுவனங்களை இங்கு தொழில் தொடங்க அனுமதித்தது,                                                                                                                                                ,                                          ஐயா மத்திய அரசே இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் யாரை ஆதரிர்க்கிறிர்கள்? அமேரிக்காவின் கைப்பாவையாக மாறி அவர்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறிர்கள் .நமது நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் உள்நாட்டு விவசாய்களின் பிரச்சனையில் தலைஇடாமல் ,அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளி விட்டிர்கள் .எங்களை போன்ற படிக்காத பாமரத்தனமான சிறு வியாபாரிகள் சிறு வியாபாரம் செய்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம் .அதற்கும் உங்கள் கொள்கை முடிவால் ஆப்பு வைத்து விட்டிர்கள் .பெரும் நிறுவனங்களுக்கும் ,பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அனுமதி கொடுத்ததால் எங்களை போன்ற சிறு வியாபாரிகள் அழிவதோடு ,வரும் காலங்களில் பெரு நிறுவனங்கலோடு போட்டியிட முடியாமல் ,கடன் சுமை தாங்காது நாங்கள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது .இதுதான் நடக்க போகிறது .ஒருவரின் அழிவால் தான் மற்றவரின் வளர்ச்சி உள்ளது என்ற நிலைக்கேற்ப ,எங்களை அழித்து பன்னாட்டு முதலாளிகள் வாழ நீங்கள் வழி செய்கிறிர்கள் .இதற்காகவா ,நீங்கள் பன்னாட்டு பல்கலைகழகங்களில் எல்லாம் படித்து பட்டம் வாங்குநீர்கள் ?ஆனால் ஒன்று உள்நாட்டு அப்பாவி மக்களை எல்லாம் அழித்து ,உள்நாட்டு பெரும் முதலாளிகள் ,அந்நிய நாட்டு முதலாளிகள் மட்டும் வளர நீங்கள் அதரவு கொடுக்கிறிர்கள் ?நாங்கள் என்ன பாவம் செய்தோம் ?இந்திய குடிமகனாய் பிறந்ததை தவீர !                                                                                                                                                                                         இந்திய தமிழர்களே பதிவை படித்து கருத்தை பதியவும் . 

வியாழன், 27 ஜனவரி, 2011

தமிழர்களுக்கு சிந்திக்கும் வாய்ப்பு உள்ளதா ?

       என்னவிதமான தமிழர்கள் உருவாகி கொண்டிருக்கிறார்கள் .அவர்கள் எந்த பிரட்சனைகாவது தீர்வு வேண்டும் என்று  ஆர்வம் காட்டியிருக்கிறர்களா? எந்த மனிதன் எப்படி போனால் என்ன ? நமக்கு சாப்பாடு கிடைக்கிறதா உடை ,உறைவிடம் கிடைக்கிறதா? அது போதும் .தனது தெருவில் சக மனிதன் சண்டை இட்டு கொண்டால் கண்டும் காணாமலும் செல்லும் ,நம் தமிழ் சமூகம் எப்படி? சக மாநிலங்களிலோ ,சக நாட்டிலோ மற்றோர் தமிழனுக்கு பிரச்சினை என்றால் பொங்கி எழுவான் ?இவன் இப்படி ஆனதற்கு யார் காரணம்?இவனுக்கு சுரனையோ ,மொழி உணர்வோ ,மனிதனாக வாழ வேண்டும் என்ற எண்ணமோ கொஞ்சம் கூட இல்லாமல் போனதற்கு என்ன காரணம் ?சக தமிழர்கள் அநியாயமாக பாதிப்படைவதை பார்த்து அதனால் மனம் பாதிக்கப்பட்டு தனது உள்ளக்குமுறலை வெளிபடுத்திய தமிழர்களை இந்த அரசு ஜெயில்ளில் வைத்து அழகு பார்க்கிறது .என்ன விதமான தமிழர்கள் உருவாகவேண்டும் ?என இந்த அரசு எதிர்பார்கிறது?                                                                                                                                       தமிழர்கள் சிந்திக்க கூடாது ,எந்த பிரச்சனைக்கும் செல்லக்கூடாது .நாங்கள் கொடுக்கும்  டாஸ்மாக் சரக்கை அருந்தி விட்டு ,நாங்கள் கொடுக்கும் ஒரு ரூபாய் அரிசியை சாப்பிட்டு விட்டு ,நாங்கள் கொடுக்கும் இலவச தொலைக்கட்சியில் ,நாங்கள் தயாரிக்கும் மானாட மயில்லாட நிகழ்ச்சியை பார்த்து வாழ்வை ஓட்டி விட வேண்டும் .இதை தானே ஐயா ,நீங்கள் எதிர்பார்க்கிரிர்கள் ? உங்கலை நம்பி எங்கள் குழந்தைகளை உங்கள் அரசுப் பள்ளியில் கல்வி கற்க அனுப்பிகிறோம். என்ன விதமான கல்வியை நீங்கள் எங்கள் குழைந்தைகளுக்கு கற்றுக் கொடிப்பிர்கள் .வளர்ந்த மனிதனாகிய எங்களையை உணர்வில்லாமல் ஆக்குவதற்கு என்ன உண்டோ?அதை செய்கிறிர்கள் .பாவம் எங்கள் குழந்தைகள் சிந்தனை என்றால் என்ன? என்று கேட்கும்படியான ஒரு வாழ்வை அவர்களுக்கு கொடுத்து விடாதிர்கள்.உங்கள் வாரிசுக்காவது சிந்திக்கும் கல்வி முறையை கொடுத்து அவர்கள் நன்றாக வாழ நன்றாக ஆள முயற்சி எடுப்பிர்களா ?அதைத்  தானே செய்கிறிர்கள் .                                    தமிழ் சிங்கங்கலே கருத்தை படித்து பகிரவும் .நன்றி .                                                                     

யாரை ஏமாற்றுகிறது இந்த அரசு?

              மாநகரங்களில் நடக்கும் கொள்ளைக்கு அளவே இல்லையா                                                                   சமீபத்தில் மிகுந்த கால் வலியோடு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன் பையில் உள்ள சில்லறையை தடவியபடியே பேருந்துக்காக காத்துகொண்டிருன்தேன் .வரும் வண்டி அனைத்தும் சொகுசு பேருந்துகள் .அதற்கு மினிமம் பயணச்சீட்டு ரூபாய் 5 .நானும் அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டிய ஆள் தானே என்று ஒய்ட் போர்டு வண்டியை எதிர் பார்த்து கொண்டிருந்தேன் .அதற்கு மினிமம் பயணச்சீட்டு ரூபாய் 2 .அரை மணி நேரமாக பேருந்துக்காக காத்திருந்தேன் .அனைத்து வண்டிகளுமே சொகுசு பேருந்துகள் .அரசு முறையாக பேருந்து கட்டணத்தை உயர்த்தினலே 2 ரூபாய் கட்டணம் 3 ரூபாயாக உயரும் .ஆனால் சொகுசு பேருந்து என்று கிட்டத்தட்ட இரண்டு மடங்கு தொகையை நம்மிடமிருந்து கல்லா கட்டுகிறார்கள் .யாரை ஏமாற்றுகிறது இந்த அரசு?உங்களை நம்பும் எங்களை போன்ற குடிமககளையா !வேண்டாம் இந்த விபரீதம் !காலம் உங்களுக்கு பாடம் கற்று கொடுத்து விடும் .                                       நண்பர்களே பதிவை படித்து வேறு யாருக்கும் ஒட்டு போடாமல் எனக்கு ஓட்டு போடும் படி vendugirayn         

கண் திறப்பாரா கமல்?

                                                                           ஒரு காலத்தில் என் போன்ற பாமர ரசிகர்களை எல்லாம் தன் நடிப்பாலும் ,புரியாத அறிவுஜீவி பேச்சாலும் கவர்ந்தவர் நீங்கள் .நடிப்பு என்றால் நீங்கள்தான் பகுத்தறிவு என்றால் நீங்கள்தான் ,முற்போக்கு பேச்சு என்றால் நீங்கள் தான் .ஆஹா ஒரு கலைங்கனுக்குத்தான்  எத்தனை விதமான பார்வைகள் .உங்களை கண்டு நாங்கள் பிரமித்து போனோம் .ஆனால் நீங்கள் பக்கா காப்பி மன்னன் என்று சமீபத்திய இணையதளங்களின்  சேவைகள் சொல்லுகின்றன.உங்களுக்கு கொஞ்சமாவது சுய சிந்தனை உண்டா ?யாரை ஏமாற்ற  பார் கிரிர்கள்? .நீங்கள் உங்கள் கம்பெனி படம் எடுத்தால் குறைந்த முதலிட்டில் செலவே இல்லாத உன்னை போல் ஒருவன் போன்ற படங்கள் s .தாணு போன்ற தயாரிப்பாளர் கிடைத்தால் புரியாத கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவூட்  பாணியில் சண்டை காட்சிகள்   [அது படத்தில் இல்லை அது எடுக்க செலவு  பல கோடி ]அவரை அழித்தே விட்டிர்களே ஐயா ,உங்களால் எத்தனை தயாரிப்பாளர் தலையில் துணியை போட்டிருர்பார்காலோ ?யார் கண்டார்.புதிதாக வசனம் எழுத புறப்பட்டு விட்டிர்கள் .இந்த லட்சணத்தில் அசலான தமிழ் படங்களை எடுக்கும் நல்ல சில  இயக்குனர்களிடம் உங்கள் பாழாய் போன பர்மா பஜார் dvdkkalai கொடுத்து அதை பார்த்து காப்பி சினிமா அடியிங்கள் என்று ஆலோசனை வேறு அளிக்கிறிர்கள் போதுமையா உங்கள் காப்பி கலாச்சாரம் .உங்கள் பிட்டை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள் .உங்கள் அசட்டு அறிவுரையை அவர்களிடம் கூறி அவர்கள் பாதையை மாற்றாதிர்கள்  .உங்களுக்குத்தான் சுய சிந்தனை இல்லை .புதிதாகவும் ஆரோக்கியமாகவும் வருபவரை கெடுக்காதிர்கள்.  நண்பர்களே படித்து கருத்தை பதியவும் .நன்றி                                                                           

புதன், 26 ஜனவரி, 2011

ஓய்வு பெறுமா மூளை?

                                                                                                                                ஒரு மனிதனின் மூளை எவ்வளவு காலத்துக்குத்தான் ஆரோக்கியமாக இயங்கும் .அதற்கு வயது என்று ஒன்று உண்டா? அதற்கு நல்லது கெட்டது தெரியுமா ? சரியான சமயத்தில் சாமர்த்தியமான முடிவை எடுக்கும் ஆற்றல் அந்த மூளைக்கு உண்டா? வயது ஏற ஏற அனைத்து உறுப்புகளும் செயல் இழக்கும்போது மூளை மட்டும் தனித்து இயங்கி தர்மத்தை நிலை நாட்டுமா?                                                                                                    அரசுப் பணிக்கு குறிப்பிட்ட வயதில் ஓய்வு கொடுக்கும் இந்த அரசு ,அடுத்த தலைமுறைக்கு ஏன்? வாய்ப்பை மறுக்கிறது .அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமையை ஏன்? இளமையான மூளைக்கு வழங்க கூடாது? குடிமக்களாகிய நாங்கள் விரும்புவதும் அதைத்தான் .உங்கள் உறுப்புகளுக்கு நீங்கள் ஓய்வு கொடுத்து ,முதுமைக்கு மரியாதை கொடுத்திர்கள் என்றால் என் போன்ற குடிமக்களின் அன்பை பெறுவதோடு ,சரியான சமயத்தில் ,சரியான முடிவை எடுக்கும் சிறந்த நிர்வாகி என்ற மன நிறைவோடு நாங்கள் வாழ்வோம் !சிந்திக்குமா மூளை?                                                                                                      நண்பர்களே பதிவை படித்து தங்கள் கருத்துகளை பகிரவும் .நன்றி .                      

செவ்வாய், 25 ஜனவரி, 2011

தந்திரம் செய்யாமல் வாழ முடியுமா?

                                                                                 பல மனிதர்களின் வாழ்க்கை தந்திரமாகத்தான் இருக்கிறது .தந்திரம் செய்யாமல் மனிதன் வாழ முடியுமா?தொழிலில் தந்திரம் ,பணம் சேர்ப்பதில் தந்திரம் ,உறவு முறையில் தந்திரம் ,அதிகாரத்தை செலுத்துவதில் தந்திரம் ,தனது குழந்தை வழி சொந்தங்களுக்கு சொத்து சேர்ப்பதில் தந்திரம் ,தனக்கு பிடிக்க வில்லை என்றால் அவனை அழிப்பதில் தந்திரம் ,உண்மையை சொன்னால் அவனை அழிப்பதில் தந்திரம் ,உலகை நமது ரத்தங்கலே ஆள வேண்டும் என்று நினைக்கும் சுயநலமான தந்திரம்,மனிதர்களில் தான் தான் உயர்வு என நினைக்கும் மடத்தனமான தந்திரம் ,பெண்களை அடக்கி ஆள வேண்டும் என நினைக்கும் ஆணாதிக்க தந்திரம் ,குழந்தைகளை அவர்கள் போக்கில் வாழ அனுமதிக்காமல் தனது ஆசைகளை அவர்கள் மேல் திணிக்கும் மோசமான தந்திரம் ,யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் நமக்கு நாமே உயர்ந்து விட்டோம் என நினைக்கும் பேதை தந்திரம் ,சொந்த பந்தங்களை விட நாம் மட்டும் உயர்வாக வாழ வேண்டும் என நினைக்கும் உதவாக்கரை தந்திரம்,வெள்ளைதான் உயர்வு ,கருப்பு தாழ்வு என நினைக்கும் அறிவியல் புரியாத தந்திரம் ,இந்த உலகம் நமக்கு மட்டு மே சொந்தம் ஏனைய உயிரினங்களுக்கும் ,தாவரங்களுக்கும் இல்லை என நினைக்கும் சுற்று சூழல் புரியாத தந்திரம் ,சக மனிதரிடம் பழகினால் அவனால் நமக்கு என்ன லாபம் ? என கணக்கு போடும் கேடு கெட்ட தந்திரம் ,தொழிலாளியின் உழைப்பை சுரண்டி தான் மட்டும் கொழுக்கும் முதலாளியின் தந்திரம் ,மக்களிடம் போலி வாக்குறுதி கொடுத்து ஜெயித்து விட்டு அவர்களுக்கு பட்டை நாமம் போடும் அரசியில்வாதியின் தந்திரம் ,அடுத்தவன் சொத்தை அபகரிக்க அவனது  பலகினத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் நாலாந்தரமான தந்திரம் .ஏய் தந்திர மே ! உனக்கு சாவே  கிடையாதா ?     

மனதை கரைத்த உலக திரைப்படவிழா

                                  கலைகளின் நகரமாக சென்னை மாறி வருகிறது என்று நினைக்கும்பொழுது ஆனந்தமாகத்தான் இருக்கிறது .ஒருபுறம் உட்லண்ட்சில் உலக சினிமா ,மறுபுறம் மியுசியதி யட்டரில் நாடக கலை ,காமராஜர் அரங்கத்தில் இசைகலை என கலைங்கர்களுக்கு உற்சாகந்தான் .இசை, நாடகத்தில் அதிக ஆர்வம் இல்லையாதலால் உலக சினிமா பார்க்க கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு உட்லன்சில் சுற்றி வந்தேன்                                                                                                                                                        .அனைத்து படங்களையும் பார்க்க முடியவில்லை என்றாலும் ,பெண்களின் சுயசிந்தனையை வெளிபடுத்திய ON THE PATH ,குழைந்தைகளின் அசைக்கமுடியாத அன்பை வெளிபடித்திய ஆஸ்திரேலிய படமான THE TREE ,இறந்த மனைவியின் சவ அடக்கத்தின் முலம் ருசிய பண்பாட்டை வெளிபடுத்திய SILENT SOUl ,ரசிகர்களை அதிர்ச்சியும் ஆச்சர்ய பட வைத்தஜப்பானிய படமான GOLD FISH ,அழகான திரைக்கதையால் கட்டி போட்ட german படமான SOUL KITCHEN மனித மனங்களின் வக்கிரத்தையும் மனிதாபிமனத்தயும் வெளிபடுத்திய படமானBEAUTIFUL ,நினைத்து நினைத்து சிரிக்க வைத்த MY WIDOWS HUSBAND ,அடக்கப்பட்ட teenage பெண்ணின் மனதை சொன்ன துனிசியா படமான BURIED secrats ,கடந்த உலக பட விழாவில் திரை இடைப்பட்ட சுயயனலமானஆண்களின் மனதை சொன்ன SAMSARA ,பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த சுய சிந்தனையுபெண்ணின் மனதை சொன்ன ஆஸ்திரேலியா படமான ALEXANDRA SPROJECT போன்ற படங்கள் சிறந்த படமாக இருந்தன .                                                          அலை புரளும் வாழ்கையின் மத்தியில் மனித மனங்களின் ஆசைகள் ,வக்கிரங்கள் ,மனிதாபிமானங்கள் ,அன்பை வெளி படுத்திய விதம் போன்ற நிலையினால் நமது மனதை வசபடுத்திய இது போன்ற உலக பட விழாக்களை பார்பதின்முலம் பல்வேற்பட்ட வாழ்கை முறை வாழ்ந்தது போன்ற புதிய அனுபவத்தை பெறுவது மறக்க  முடியாத அனுபவம் .

வியாழன், 13 ஜனவரி, 2011

மனிதம் எங்கே போனது?

இன்றைய நாளிதழ் வாசித்துக்கொண்டிருக்கும்போது ஒரு செய்தி. மனம் அதையே அசை போட்டது.அதை உங்களுடன் பகிர்கிறேன்.           நுகர்வு கலாசாரத்தின் விளைவை உலகம் கண்டுகொள்ளுமா? மனிதர்கள் உணர்ந்து கொள்வார்களா? ஆடம்பரத்தின் விளைவு சமூகத்தை எப்படி பாதிக்கிறது? தனது மகளையே வருங்காலத்தில் திருமணம் செய்துவைக்க முடியாது,என்று நினைத்து அவர்களை கொலை செய்யும் அளவிற்கு ஒரு தகப்பனின் மனது சென்றதற்கு என்ன காரணம்?
          அட..மனிதா! நமது மனதுதான்  எப்படி சிறுத்துபோகிறது ? ஆடம்பரதிருமணங்களும், போலியான நம்பிக்கைகளும் மனிதனை எப்படி மாற்றுகிறது. மதங்கள் ஏன்? மனிதர்களுக்கு நம்பிக்கையை ஊட்டவில்லை? மனிதன் படைத்த கடவுள் கூட ஏன்? மனிதர்களுக்கு நல்ல சிந்தனையை வழங்கவில்லை? எப்படியான வாழ்க்கை வாழ்வது? மனிதர்களே சிந்தியுங்கள்.நண்பர்களே! நான் பதிவுலகிற்கு புதியவன். என் முதல் பதிவு வாசித்து தங்கள் கருத்துக்களை பகிரவும்.நன்றி!