இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

.நாமெல்லாம் மனிதர்களா?விலங்குகளா?

ஒரு மனிதன்,இந்த உலகில் எப்படி நிம்மதியாக வாழ்வது?எதையும் சிந்திக்காமல் எதையும் வாசிக்காமல் எந்த நிகழ்வையும் பார்க்காமல் தாம் உண்டு தம் வேலை உண்டு என்று இருந்து விடலாமா?என்று எனக்கு அடிக்கடி மனக்கசப்பு ஏற்ப்படுவதுண்டு.நாமல்லாம் மனிதர்களா?இல்லை விலங்குகளா?என்று அடிக்கடி எனக்கு சந்தேகம் வந்து கொண்டே இருக்கிறது.

இணையதளங்களிலும்,ஊடகங்களிலும் இலங்கையில் ஏற்ப்பட்ட மனித உரிமை மீறல்களை கண்டால் உடம்பு முழுவதும் பதறுகிறது.கொடூரமாக கொள்ளப்படும் ஆண்கள்,நிர்வாணமாக்கப்பட்டு சிதைக்கப்பட்டு கொல்லப்படும் பெண்கள்,வெடி குண்டுகளினால் கைகளையும்,கால்களையும் உடல் உறுப்புகளையும் இழந்து கதறும் குழந்தைகள் என்று காட்சிகளை பார்க்க,பார்க்க இதயமே வெடித்து விடும் போல் இருக்கிறது.அனைவரையும் அழித்தப்பிறகு அங்குள்ள நல்[!]வாழ்வு முகாமில் மீதிருக்கும் மனிதர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வாழும் வாழ்க்கை நிலையைக் கண்டால் கண்களில் ரத்தம் தான் வருகிறது.

உலகத்தின் போர்க் குற்றவாளி என ஐ.நா.சபையினால் அழைக்கப்பட்ட ராஜப்பக்சேயின் கொடூரங்கள் ஒருபுறம் இருக்கட்டும்,ஐயா,உலகம் முழுவதும் பரவி இருக்கும் இலங்கை தமிழர்களே உங்கள் நல்வாழ்வுக்கு,இலங்கையில் மீதி வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இங்குள்ள அரசியல்வாதி யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை.பழ.நெடுமாறன்,வை.கோ,சீமான்,தமிழருவி மணியன் இன்னும் சில சாதாரண மனிதர்கள் இவர்கள்தான் உங்களுக்காக இங்கு பேசியும்எழுதியும் வருகிறார்கள்.

அரசியல்வாதி என்று சொல்லிக்கொள்பவர்கள்,முதல்வர் என்று சொல்லிக்கொள்பவர்கள் யாவரும் உங்களை வைத்து தமிழர்களிடையே எப்படி ஓட்டு சேகரிப்பது என்றுதான் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.உங்களை வைத்து மட்டும்மல்ல இங்குள்ள காமடி நடிகர்களை வைத்து இவர்கள் ஓட்டு வேட்டையாடும் நிகழ்வைக் கண்டால் நாம் எல்லாம் ஏன்?தமிழராய் பிறந்தோம் என வெட்கித் தலை குனிய வேண்டியருக்கிறது.நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள பச்சை தமிழனை நம்பாதிர்கள்.இவர்கள் எல்லாம் கபடதாரிகள்.இவர்கள் தங்கள் குடும்பங்களை மட்டுமே உயர்த்த வந்த சுயநலக்காரர்கள்.நீங்கள் யூதனாய் பிறந்தால் கூட உங்களை காப்பாற்ற அமெரிக்கா இருக்கிறது.ஆனால் நீங்கள் செய்த ஒரே பாவம் தமிழனாய்ப் பிறந்தது.


நண்பர்களை பதிவைப் படித்து கருத்தை தரவும். நன்றி.
                         

கருத்துகள் இல்லை: