இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

விஜய் அப்பா திருந்துவாரா?

                                          தலைவர்களை யாரும் உருவாக்க முடியாது ,தானாகவே உருவாக வேண்டும்.அது தான் இயற்கை.நீங்கள் இயற்கைக்கு விரோதமாக ஒரு மண்பாண்ட தலைவரை உருவாக்கிக் கொண்டிருக்கிறிர்கள்.நீங்கள் உங்கள் மகனின் மனதை என்றாவது நினைத்து பார்த்து இருக்கிறிர்களா?அவருக்கு மனம் என்று ஒன்று உண்டு.ஆசை என்று ஒன்று உண்டு.அவருக்கே ஊரிய சிந்தனை என்று ஒன்று உண்டு.நீங்கள் எதையுமே பார்க்கவில்லை.                                                                                                                                                                                   மகன் சினிமா கதாநாயகனாகிவிட்டார்.பிரபலமாகிவிட்டார்.அடுத்து அரசியலில் இறங்கி தமிழகத்து தலைவிதியே மாற்றி காட்டி விடலாம் என்று கணக்கு போடுகிறிர்கள்.உங்கள் கணக்கு தப்பில்லை.ஆனால் தமிழகத்து மக்களை கொஞ்சமாவது நினைத்து பார்த்திர்களா? அவர்கள் ஏற்கனவே சினிமா தலைவர்களிடம் தலையை கொடுத்து தான் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.எப்போதாவது ஏதாவது தீர்வு கிடைக்காதா?என்று ஏங்கி கொண்டிருக்கிறார்கள் .இந்த இலட்சணத்தில் நீங்களும் கிளம்பி உங்கள் மகனின் எதிர்காலத்தையும் கெடுத்து கொண்டிருக்கிறீர்கள்.                                                                                            அவரை அவர் போக்கில் சிந்திக்க விடுங்கள்.அவர் சினிமாவில் சாதிக்க இன்னும் எவ்வளவோ இருக்கிறது.அதை விட்டு தமிழகத்தை மாற்ற போகிறேன்,புரட்சி செய்ய போகிறேன் என்று செல்லாமல்,ஒரு மகனுக்கு உண்மையான அப்பாவாக இருப்பிர்களா?தமிழக மக்களை நல்வழியில் சிந்திப்பதற்கு உதவுவீர்களா?நீங்கள் சினிமாவில் செய்த புரட்சியை தமிழக மக்களுக்கு உணர்த்துவிர்களா?நீங்கள் சிந்திக்கும் நேரமிது.                                      நண்பர்களே பதிவை படித்து கருத்தை பகிரவும்.நன்றி.                   
 

7 கருத்துகள்:

ரஹீம் கஸாலி சொன்னது…

இதையும் படியுங்க நண்பா...
நம்ம கடையில் இன்று தந்தியடிக்க இன்னொரு தலைவரும் ரெடியாயிட்டாருங்கண்ணா...

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

இப்பயெல்லாம் நம்ம பக்கம் வருவதில்லை...

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

விக்கி உலகம் சொன்னது…

என்ன நண்பா கிறுக்கன் கிட்ட போய் பாடத்த பத்தி சொல்லிட்டு இருக்கீங்க.....ஹி ஹி!

எனக்கென்னமோ இவனுங்க இறங்கித்தான் கொஞ்சம் செலவு பண்ணட்டுமே பா...........!

kadhar24 சொன்னது…

விக்கி சார் நீங்க சொன்னமாதிரி அவுங்க கொஞ்சம் செலவு பண்ணி பாக்கட்டுமே.

kadhar24 சொன்னது…

கருண் சார் உங்ககிட்ட இருந்து மீள முடியுமா?ஆஜர் ஆயிட்டேனே.

Jayadev Das சொன்னது…

சினிமா எடுக்குறவன் எல்லாம் சொந்த வாழ்க்கையிலும் படத்தில் காண்பித்த நீதி நேர்மையோடு தான் இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால், ஐயாம் வெரி சாரி. அவங்க நோக்கம் படம் நல்லா ஓடனும் நாலு காசு லாபம் பார்க்கணும் அவ்வளவுதான். அது மட்டுமல்ல, கதை சொல்ல வந்த ஒருத்தரிடம் கதையைக் கேட்டுவிட்டு, "வாய்ப்பு தருகிறேன் அப்புறம் வா" என்று கொஞ்சம் பணத்தைக் கொடுத்தனுப்பி விட்டு அதே கதையை தனது மனைவி பெயரில் படமெடுத்த உத்தமர் இந்த ஆள். இதே சந்திர சேகர், தன் மகன் ஆரம்பத்தில் நடித்த ஐந்து படங்கள் ஓடவில்லை என்று என்ன செய்தார்? சில துணை நடிகைகளை விஜய்யோடு குத்தாட்டம்
ஆடவிட்டு படத்தை தேத்த வில்லையா? லாபம் பார்க்க எந்த கீழ்த் தரமான செயலையும் செய்யத் தயாராய் இருக்கும் ஒரு மூன்றாம் தர வியாபாரி இவர், அவ்வளவுதான். அதே மாதிரி இயக்குனர் ஷங்கர், கறுப்புப் பணம், ஊழல் போன்றவற்றை ஒழிக்க வேண்டுமென அந்நியன், முதல்வன், ஜென்டில்மேன், சிவாஜி போன்ற படங்களை எடுத்தவர். இவருடைய படங்களுக்கு டிக்கட்டுகள் பிளாக்கில் விற்கப் படுவதே இல்லையா? இவர் வருமான வரி பாக்கியில்லாமல் கட்டுகிறாரா? எல்லாம் வெறும் வே ஷம், பணம் சேர்க்க. விஜய் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் இது ஜனநாயக நாடு. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். நேர்மையானவரா இருக்கணும், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை இருக்கணும், ஊழல் செய்யக் கூடாதுன்னா காமாரஜரைத்தான் கூட்டிகிட்டு வரணும். அதுக்கப்புறம் எவன்/எவள் ஒழுங்கா ஆட்சி பண்ணுனாங்க? எல்லாமே திருட்டு நா....ங்க தானே, இதில் இந்த திருடனை மட்டும் திருடக் கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

kadhar24 சொன்னது…

சந்திரசேகரப்பத்தி நாங்க பதிவு போடுவதை விட நீங்க பதிவு போட்டிங்கன்னா இன்னும் சிறப்பாக இருக்கும்.நன்றி ஜெயதேவ் தாஸ் சார்.