இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

மனசாட்சிப்படி வாழ்வது தப்பா?

                                       இந்த நாட்டில் மனிதர்கள் எப்படித்தான் வாழ்வது?ஒவ்வரு மனிதனும் தான் நம்பிய,தான் விரும்பிய வாழ்கையை வாழ முடியாதா?அதிகார அமைப்புகள் மனிதாபிமானத்தோடு கூடிய மனிதர்களை வாழ விடாதா?அனைத்து மனிதர்களுமே போலியான வேஷங்களைப்போட்டு,ஜால்ரா அடித்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கையில் தன் மனம் காட்டிய அகிம்சை வழியில் வாழ ஒரு மனிதனுக்கு உரிமை இல்லையா?                                                                                                                                             இந்தியாவிலேயே அறிய மருத்துவமனையான வேலூர் C .M .C -மருத்துவமனையில் குழந்தை மருத்துவராக படித்து,குழந்தை உள்ளத்தோடு மலைவாழ் மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்வை அர்ப்பணித்த மருத்துவர் பினாயக் சென்னை இந்த அதிகார அமைப்புகளும்,அரசும் நடத்திய விதங்களும் நடத்திக்கொண்டிருக்கும் நாடகங்களுக்கும் முடிவே இல்லையா?                                                                                                                    ஐயா,அதிகார வர்க்கங்களே,நீதிமான்களை உங்களுக்கு மனம் என்று ஒன்று உண்டா?நீங்கள் இயற்கைக்கு விரோதமாக சிந்தித்தால்,இந்த இயற்கையேஉங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடும்.அப்போது உங்களை இந்த மனிதர்கள் உருவாக்கிய  சட்டமோ,நீங்கள் மதிக்கும் சட்டமோ உங்களை காப்பாத்தாது.உங்களால் மனிதர்களாக வாழ முடியவில்லை என்றால்,மனிதர்களாக வாழ விரும்பும் மனிதர்களை வாழ விடுங்கள்.                                                                                  நண்பர்களே பதிவை படித்து புரியவில்லை என்றால் பினாயக் சென்னைப் பற்றி அறிந்து கருத்து தரவும்.நன்றி.              

4 கருத்துகள்:

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

Nice post.,

Chitra சொன்னது…

http://ww5.4tamilmedia.com/index.php/special/republish/2008-2010-12-27-13-48-29

..I read about him there.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ம்...நீங்கள் சொல்வது சரிதான்

மைதீன் சொன்னது…

இந்த அவசர யுகத்தில் சேவை செய்யும் மனப்பாங்கு உள்ள மனிதர்கள் அரிது. பினாயக் சென்னுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டவர்கள், சேவை செய்யும் நோக்கம் கொண்டவர்களாயிருந்தால் உடனே தன முடிவை மாற்றிக்கொள்வார்கள். சர்வாதிகாரத்திற்கு எதிராக உலகமெங்கும் புரட்சிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவிலும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது என்பதற்கு பினாயக் சென்னுக்கு எதிரான அநீதியே சாட்சி!! பகிர்வுக்கு நன்றி!!!!