இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

ஆதம் ஒரு கொடூரனா?

மனிதனின் தீராத ஆசையினாலே இன்று பல பாவங்கள் பவனி வருகின்றன.''அந்த கனியை புசியாதே'' என்று கடவுள் கட்டளையிட்ட பின்பும்,ஏவாளின் தூண்டுதலின் பேரில் ஆதம் அக்கனியை பறித்து உண்ண முதல் பாவம் நிறைவேற்றப்பட்டது.இக்கதை பைபிளில் உள்ளது.

ஆதம் வரலாற்றில் செய்த முதல் பாவம் இன்று காலங்காலமாக தொடர்ந்து வருகிறது.ஆதத்தின் ஆவி இன்று பல தலைமுறைகள் தாண்டியும் மனித மனங்களில் சம்மணமிட்டு ஆதிக்கம் செலுத்திகிறது என்றால் அது ஆதம் என்ற பெயரின் மகிமை தானோ?

ஆதத்திற்கு சுய சிந்தனை உண்டா?இந்த உலகில் நல்லது எது?கெட்டது எது?என்று பகுத்து பார்த்து அறியும் அறிவு உண்டா? இந்த உலகம் அனைத்து மனிதர்களுக்கும் உரியது என்று எண்ணாமல் தனக்கு மட்டுமே உரியது என்று எண்ணும் மனநிலைக்கு உரியவரா?உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தாம் சிறந்த முன்னுதுரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணாமல் தனது சிறு மூளையின் மூலமும்,குறுகிய  புத்தியின் மூலமும் இந்த உலகத்தை தவறான பாதைக்கு அழைத்து சென்ற மனநிலையை என்னவென்று சொல்வது?

ஆதத்திற்கு என்றுமே சுய சிந்தனை கிடையாது.அவர் எப்போதுமே அவரின் மனைவி தலையாட்டுதலின் பேரில் தான் வாழ்ந்தார்.வரலாறு செய்த பாவத்தின் விளைவு இன்று உலகில் ஆதம் என்ற பெயர் உள்ள அனைத்து மனிதர்களுமே அப்படித்தான் இருப்பார்களோ?என்னவோ?

ஐயா,மனிதர்களே நீங்கள் ஆதம் போல் வாழாமல்,ஆலம் [ஆலமரம் ]போல் வாழ்ந்தால் உலகம் சுபீட்சமடைவது போல் உங்கள் தலைமுறையும் குறைவில்லாமல் நீடித்து வாழும்.இதை மனிதனாகிய நாம் உணர்வோமா?        
  

கருத்துகள் இல்லை: