இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

இந்த உலகம் எபபடி இயங்குகிறது ?

                    இன்று உலகில் உள்ள அனைத்து அரசியலுக்கும் காரணம் முதலாளி,தொழிலாளி பிரச்சனைதான்.முதலாளி தான் வாழ்வதற்காக ஏகப்பட்ட தந்திரங்களை அரங்கேற்றி அதில் தொழிலார்களை நடிக்க வைத்து தானும்,தன் குடும்பமும் ,தன் முதலாளி வர்க்கமும் மட்டும் நன்றாக வாழவேண்டும் என நினைத்ததன் விளைவு தான் இந்த உலக அரசியல்.                                                                                                            முதலாளி தொழிலாளியை வசப்படுத்தி ஏமாற்றுவதற்காக ஏற்கனவே உள்ள கடவுள் நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொண்டான்.கடவுள் என்று ஒன்று உண்டு,அவனுக்கு நீ சேவை செய்ய வேண்டும்.அவருக்கு [அதாவது தனக்கு ]பிடித்தமானவற்றை நீ செய்வதோடு.அவர் சொல்வதை எல்லாம் நீ கேட்க வேண்டும்.இதற்காக ஏகப்பட்ட தந்திரமான கதைகள்,கதைகள் மூலம் கடவுளை எதிர்த்தால் நீ அழிந்து போவாய் என்ற போலித்தனமான மிரட்டல்கள்.                                                                                                                                                  இந்த முதலாளிக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கோ,இல்லையோ இல்லை என்று வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்கள்.எத்தனை மதங்கள் உண்டோ,எத்தனை கடவுள் உண்டோ அத்தனையும் ஆதரிப்பார்கள்.அது வளர்வதற்காக அவர்கள் உருவாக்கிய பத்திரிக்கை,சினிமா,தொலைகாட்சி,நாடகம் இன்னும் எத்தனை ஊடக வடிவங்கள் உண்டோ அத்தனையும் பயன்படுத்தி கடவுள் நம்பிக்கையை வளர்ப்பார்.எத்தனை திருவிழாக்கள் உண்டோ அத்தனையும் ஆதரிப்பார்.அதற்க்கு தாராளமாக நிதி வழங்குவார்.அதைப் போல நீ இந்திய குடிமகன் ,இந்தியாவுக்காக நீ உயிரையும் கொடுக்க வேண்டும் என்ற போலித்தனமான நாட்டுப்பற்றையும் மனதில் விதைப்பர்.                                                                                                                                                                                      முதலாளி தான் வாழ்வதற்காக உருவாக்கியதுதான் இந்த அரசாங்கம்.அரசாங்கத்தில் உள்ள நீதித்துறை,காவல்துறை,சிறைத்துறை,அரசு ஊழியர்கள் முதலியவர்களை கொண்டு அப்பாவி தொழிலாளர்களை மிரட்டி ,அவன் உழைப்பை உள் வாங்கிக்கொண்டு,அவன் உழைப்பை சுரண்டி தான் மட்டும் நன்றாக கொளுத்து வளர்வதற்கு உருவாக்கியதுதான் இந்த அரசாங்கம்.இதை மட்டுமா செய்தார்கள்?                                                                                                                                                                                தான் நன்றாக ஆதிக்கம் செலுத்துவதைப்போல் தனது தலைமுறைகளும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக தொழிலாளிக்கு குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொடுக்க அதிக ஆர்வம் காட்டுவார்கள்.அப்பொழுது தானே அவன் அடுத்த தலைமுறை தொழிலாளியை உருவாக்க முடியும்.இப்படி உருவாக்கிய தொழிலாளிக்கு, தான் உருவாக்கிய அரசாங்கத்தின் மூலம் அரைகுறையான,அரை வேக்காட்டுத்தனமான கல்வியை கற்றுக் கொடுத்து,அவனுக்கு தேர்வு என்று ஒன்று வைத்து சில பேரை உயர் கல்விக்கும்,பல பேரை குறைந்த கல்வியில் படிக்க வைத்து பெயிலாக்கி தனது தொழிற்ச்சாலையில்,தனது நிறுவனத்தில் அடிமை வேலை செய்ய உருவாக்கிகிரார்கள்.இப்படித்தான் இந்த முதலாளி உலகம் இந்த உலகை ஆள்கிறது.                                                                                                                                                                    இந்த முதலாளி வர்க்கத்திற்கு தலைமையிடம் அமெரிக்கா.உள் நாட்டு முதாலளிகலே இவ்வளவு தந்திரங்கள் செய்யும் பொழுது,உலகை ஆள்வதற்கு அமெரிக்கா என்ன தந்திரம் செய்யும் ?அதைத்தானே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.                                                                                                                                                        நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.                                          

கருத்துகள் இல்லை: