இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

திங்கள், 4 ஏப்ரல், 2011

கடவுளை கண்டுபிடித்த ''சூப்பர் ஸ்டார்''யார்?

இந்த உலகில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு,அவற்றில் பல காலாவதியாகி மறைந்தே விட்டது.சில இன்றும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.அவற்றில் ஒன்றுதான் ''கடவுள்'' என்ற கருத்தாக்கம்.இந்த கடவுளை கண்டு பிடித்து,இந்த உலகத்தில் உலவ விட்ட மகாராசனை உண்மையிலே பாராட்ட வேண்டும்.அவருக்கு எவ்வளவு தொலைநோக்கு பார்வை இருந்தால்,இந்த ஒரு வார்த்தைக்குத்தான் மனிதன் பயப்படுவான் என்று சிந்தித்து,இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருப்பார்.


யாரோ கண்டு பிடித்த இந்த கடவுளை இன்று மனிதர்கள் அவர் அவர்களின் சுயநலத்திற்காக எப்படி எல்லாம் பயன் படுத்திக்கொள்கிறார்கள்.ஒரு நாட்டை ஆக்கிரமித்து கொள்வதற்கு,ஒரு இனத்தை அழிப்பதற்கு தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கு,அப்பாவி தொழிலாளர்களை பயம் காட்டி வழி நடத்தி செல்வதற்கு,குடும்பங்களில் தனது தலைமை பணியை தக்க வைத்துக் கொள்வதற்கு,ஊர்த் தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு இன்னும் விவரிக்க முடியாத அனைத்து செயல்களுக்கும் கடவுளையே ஆதாரமாக கொண்டு மனிதர்களை பணிய வைக்கிறார்கள்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்தகடவுளை பிடித்து தொங்கி கொண்டிருப்பார்கள்.ஐயா,நவீன மனிதர்களே,நீங்கள் ஏதாவது புதிதாக ஒன்றை  கண்டுபிடித்து அறிமுக படுத்துங்களேன்.  அதுவரைக்கும் இந்த கடவுளுக்கு  ''எக்ஸ்பரி டேட்டே''கிடையாதா?

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.

4 கருத்துகள்:

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஷர்புதீன் சொன்னது…

:)

Chitra சொன்னது…

கடவுளை குறித்த உங்கள் பார்வையும் கருத்தையும் சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இல்லையோ, அந்த அளவுக்கு இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு பக்தி இருக்கிறது. :-)

kadhar24 சொன்னது…

இது எனது பார்வைதான். உங்கள் பக்தி உங்களுக்கு.அவரவர் சிந்தனை அவரவருக்கு.வருகைக்கு நன்றி.