இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

புதன், 2 மார்ச், 2011

விஜய்,உங்களுக்கு சுய சிந்தனை உண்டா?

                                         ''நான் முடிவு செஞ்ச பிறகு என் பேச்சை நானே கேட்க மாட்டேன்'' என்று ஏதோ ஒரு சினிமாவில் நீங்கள் வசனம் பேசியதாக நினைவு.இதை நீங்கள் உங்கள் யதார்த்த வாழ்வில் கடைப்பிடிப்பிர்களா?அப்படி கடைப்பிடித்தால் நீங்கள் போகும் பாதையை யாரும் மாற்ற முடியாது.அது சரி,அதற்குரிய தகுதி உங்களுக்கு உள்ளதா?                                         நீங்கள் என்ன விக்கி லீஸ் அசாஞ்ச்ஜெவா,இல்லை உலக அரசியல் முழுவதையும் கரைத்து குடித்தவரா?இல்லை தமிழக அரசியல் பற்றியாவது ஏதாவது தெரியுமா?அதுப்பற்றி ஏதாவது வாசிப்பு பழக்கமோ, தமிழகஅரசியல் பற்றி ஏதாவது புத்தகமோ எழுதி இருக்கிறிர்களா?நீங்கள் செய்தது எல்லாம் நாலு குத்து பாட்டு,இரண்டு தரம் கெட்ட சண்டைகாட்சி,நாலு வரி பஞ்ச் வசனம்.இதை வைத்து உங்களை நாங்கள் எப்படி எடை போடுவது?நீங்கள் மேடையில் பேசினால் சினிமாவில் காமடி நடிகர் பேசுவது போல் உள்ளது.எந்த தன்நம்பிக்கையில் தமிழகத்தை புரட்டிப் போடப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறிர்கள்?தமிழக மக்கள் என்ன லூசா?                                                                                        உங்களுக்கு காலம் நிறைய உள்ளது.உலக அரசியலை படியுங்கள்.இந்திய அரசியலை படியுங்கள் ,நிறைய வாசியுங்கள்.நிறைய எழுதுங்கள்.அதன் பிறகு நான் அரசியலில் ஈடு படப்போகிறேன் என்று ஆர்வம் இருந்தால் தாராளமாக வாருங்கள் வரவேற்க்கிறோம்.அதைவிட்டு அப்பா சொன்னார்.அம்மா சொன்னார் என்று ''சின்னபுள்ள'' தனமா சொல்லிக்கொண்டு,தன்னையும் குழப்பி,உங்கள் ரசிகனையும் பைத்தியகாரனாக ஆக்காதிர்கள்.                                                              தல பதிவை படித்து ஓட்டை விஜய்  அண்ணாவுக்கு போடுங்கள்.நன்றி                            

4 கருத்துகள்:

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

கேளுங்க.. கேளுங்க.. நல்லா கேளுங்க..

Chitra சொன்னது…

பதிவை படித்து ஓட்டை விஜய் அண்ணாவுக்கு போடுங்கள்.நன்றி

....அவருக்கென்று தனியாக இன்ட்லி பட்டை இருக்கிறதா? ஹா,ஹா,ஹா,ஹா...

தமிழ்வாசி - Prakash சொன்னது…

எத்தனை பேர் சொன்னாலும் உங்க பேச்சை அவர் கேட்க மாட்டார்

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்,
மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

Ashwin-WIN சொன்னது…

//அப்பா சொன்னார்.அம்மா சொன்னார் என்று ''சின்னபுள்ள'' தனமா சொல்லிக்கொண்டு,தன்னையும் குழப்பி,உங்கள் ரசிகனையும் பைத்தியகாரனாக ஆக்காதிர்கள்.//
கரெக்டா சொன்னீங்க.. விஜய் ரசிகர்களே உங்க தளபதிய திருந்த சொல்லுங்கப்பா.. அலபறை தாங்க முடியல.
Ashwin Arangam