இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

புதன், 6 ஏப்ரல், 2011

இந்த உலகத்தின் முடிவு நம் கையீளா?

இந்த உலகம் தான் எவ்வளவு இயற்கையானது.எவ்வளவு அழகானது.பூமிப்பந்தில் முக்கால்வாசி நீரும்,கால்வாசி நிலமும் சேர்ந்து,விண்வெளியில் இருந்து பார்த்தால் [உபயம் ;டிஸ்கவரி சேனல்]நீல நிறத்தில் அதன் அழகே தனி.

நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்கு சென்ற பொழுது பூமிப்பந்தை பார்த்து அதன் அழகை,அதன் கோள வடிவத்தை கண்டு அவர் விவரித்த பாங்கு அலாதியானது.அக்காலக்கட்டங்களில் விண்வெளியில் இருந்து பூமியை பார்த்தால் பசுமை நிறத்தில் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.ஆனால் இன்று?விஞ்ஞானிகள் என்ன சொல்லுகிறார்கள்.''எரிந்த கரும் பந்து''போல் பூமி உள்ளது.இயற்கையை எந்த அளவுக்கு சிதைத்திருக்கிறோம்.

மனிதனின் நாடு பிடிக்கும் ஆசையில்,தன் உற்பத்தி பொருள்களை உலகம் முழுவதும் விற்ப்பதற்கு அவன் செய்யும் தந்திரத்தில்,தன் நாட்டின் பெட்ரோல் தேவைக்காக உலகத்தில் எங்கெல்லாம் பெட்ரோல் வளம் உள்ளதோ அந்த நாட்டில் எல்லாம் உள் நாட்டு கலவரங்களை ஏற்ப்படுத்தி,தான் உற்பத்தி செய்த ஆயுதங்களை சோதிக்கும் இடமாகவும்,மென்மேலும் ஆயுதங்களை உற்பத்தி செய்து லாபம் ஈட்டுவதற்கும் அவன் செய்யும் தந்திரம் சொல்லி மாளாது.

போர்களினாலும்,அதிக வாகன உற்பத்தியாலும்,அதிக நுகர்வு பொருள்களினாலும் இயற்கை செல்வங்களை அழிப்பதின் மூலமாகவும்,இந்த பூமி அதன் இயற்க்கை தன்மையிலிருந்து எவ்வளவு மாற்ற முடியுமோ அவ்வளவு மாற்றி விட்டோம்.இதன் விளைவு என்ன?


முக்கால்வாசி நீர் உள்ள இந்த பூமியில்,கால்வாசி நிலத்தில் உள்ள இந்த மனிதர்கள் செய்யும் அட்டூழியத்தால் இயற்க்கை அதன் சமன் நிலையை இழக்கும்.துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகும்.கடலின் நீர் மட்டம் உயரும்.முக்கால்வாசி நீர்,பூமி முழுவதுமாக நீராக மாற்றப்படும்.உலகம் அழியும்.

இதற்க்கு என்ன ஆதாரம்?என்று கேட்கிறிர்களா?இதற்க்கு ஆதாரம் வேண்டுமா?முடிவு மனிதர்களாகிய நம் கையில்தான் உள்ளது.சிந்திப்போமா?

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பனிப்பாறைகள் முற்றிலும் உருகினாலும் உலகம் முழுதும் நீராக வாய்ப்பில்லை. ஆனால் அது சுற்றுச்சூழல் கேடுகளை விளைவித்து, உணவு உற்பத்தி பொய்த்து, மழைப் பொய்த்து மனித குலம் வளராமல் , வளர்ச்சி குன்றும் சூழல் ஏற்படும், கடற்கரைப் பகுதிகள் சில மைல் தொலைவுக்குள் நாட்டுக்குள் வரும்...........

மைதீன் சொன்னது…

குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாலும்.நம்மிலிருந்து நாம் இதை ஆரம்பிக்க முடியுமா? என்று பார்க்க வேண்டும்