இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

திங்கள், 31 ஜனவரி, 2011

நாம் வாழும் வாழ்கை முறை சரிதானா?

              இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் ,சிந்தனைகள் ,வாழ்கைபோக்குகள் .மனிதனின் பெரும் பகுதிக் காலத்தை பொருள் சேர்பதிலேயே கழிக்க வேண்டியவுள்ளது .இச் சூழ்நிலையில் நம்முள் எழும் கேள்வி நாம் வாழும் வாழ்கை  முறை சரிதானா   ?                                                                                                      காலையில் எழுந்து இரவு அடையும் வரை மனிதன் ஏதாவது பொருளை வாங்கவோ ,விற்கவோ செய்ய நமது ஊடகங்கள் செய்யும் தந்திரம் சொல்லிமாளது .நாளிதழ் ,வானொலி ,தொலைக்காட்சி ,அலைபேசி ,தொலைபேசி ,சுவரொட்டி டிஜிட்டல் பேனர்கள் ,இணையத்தளம் ,ஏதாவது பரிசு பொருளை கொடுத்து அதன் வடிவில் என்று சொல்லிகொண்டே போகலாம் .மக்கள் ஏதாவது ஒரு பொருளை அது தேவையோ தேவை இல்லையோ .வாங்கி குவித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற நுகர்வுவெறி ஒவ்வொரு மனிதனினும் மூளையில் ஏற்றபடுகிறது.பொருள்களை வாங்கி குவிப்பது தான் உயர்வான வாழ்நிலை என்ற மாயத்தோற்றம் போதிக்கபடுகிறது .அதுவும் குறிப்பாக இந்த நகை கடை விளம்பரங்களில் பெண்களை எந்த சுய சிந்தனையும் இல்லாத மாக்களைப் போல் காண்பிப்பது அதன் உச்சம் .ஆணாதிக்கம் நிறைந்த ஊடக இயக்குனர்கலே உங்கள் வீட்டுப் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறிர்களா?உங்கள் சுய நலத்திற்க்காக தவறான பிம்பங்களை ஏற்ப்படுத்தாதிர்கள் .                                                                                                                      ஓடிக்கொண்டே இருக்கும் நகர வாழ்வில் மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தம் ,ரத்த அழுத்தம் ,இன்னும் பெயர் தெரியாத பல நோய்கள் மறைவதற்கு நாம் என்ன மாதிரியான வாழ்கை முறை வாழ வேண்டும் என்று திர்மானித்தே தீரவேண்டும் .நுகர்வு கலாச்சாரம் என்ற மாயவலையில் விழுந்து விடாமல் ,பொருள்களை வாங்கி குவிப்பதுதான் உயர்வான வாழ்கை முறை என்ற நிலைக்கு வந்து விடாமல் .நமது தலைமுறைக்கு தவறான பழக்கத்தை கற்றுக் கொடுக்காமல் வாழ்வதுதான் சிறந்த வாழ்கை என்று தோன்றுகிறது .நாம் சிந்திக்கும்  நேரமிது .                     .      தலைவா பதிவை படித்து கருத்தை பதியவும்.                                             

3 கருத்துகள்:

சமுத்ரா சொன்னது…

well said..

மைதீன் சொன்னது…

இந்த உலகம் முழுவதும் வியாபாரிகளின் ஆதிக்கம்தான் மேலோங்கி நிற்கிறது.ஏன் சில ஆட்சிகளைக் கூட அவர்கள்தான் நடத்துகிறார்கள்.விளம்பரங்களால் தான் சிலர் ஆட்சிக்கே வர முடிந்தது . விளம்பரங்கள் சொல்வதுதான் வாழ்க்கை என்று நாம் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறோம். கருப்பாக பிறந்தது தவறு,கேவலம். என்பது போல மனதில் விளம்பரங்கள் வாயிலாக விஷ விதையை தூவிக்கொண்டு இருக்கிறார்கள். அதை நாம் நன்றாக அனுபவிக்கிறோம்..... பகிர்வுக்கு நன்றி!!

காதர் அலி சொன்னது…

உண்மையை உணர்ந்து நீங்கள் பதித்த பதிவிற்கு நன்றி .