இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

சனி, 29 ஜனவரி, 2011

இந்திய குடிமகனாய் பிறந்தது தப்பா ?

                       கருப்பு பணத்தை பதுக்கி வைத்திர்பவர்களின் பெயர்களை வெளிட முடியாது ,சேதாரம் ஆகும் உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு வழங்கமுடியாது ,தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ,வெறும் கண்துடைப்பாக அறிக்கையை மட்டும் வெளியிடுவது ,விலைவாசி விஷம் போல ஏறிக்கொள்ள காரணமான பெட்ரோல் ,டீசல் விலையின் விலையை தீர்மானிக்கும் பொறுப்பை தனியார் கம்பெனிகளிடம் கொடுத்தது ,விலைவாசி உயர்வுக்கு மிக முக்கியமான காரணமான ஆன்லைன் டிரய்டிங் முறைக்கு தடை சொல்லமால் இருப்பது ,சில்லறை வணிகத்தில் பெரும் நிறுவனங்களை அனுமதித்ததோடு ,பன்னாட்டு நிறுவனமான வால்மார்ட் போன்ற நிறுவனங்களை இங்கு தொழில் தொடங்க அனுமதித்தது,                                                                                                                                                ,                                          ஐயா மத்திய அரசே இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் யாரை ஆதரிர்க்கிறிர்கள்? அமேரிக்காவின் கைப்பாவையாக மாறி அவர்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறிர்கள் .நமது நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் உள்நாட்டு விவசாய்களின் பிரச்சனையில் தலைஇடாமல் ,அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளி விட்டிர்கள் .எங்களை போன்ற படிக்காத பாமரத்தனமான சிறு வியாபாரிகள் சிறு வியாபாரம் செய்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம் .அதற்கும் உங்கள் கொள்கை முடிவால் ஆப்பு வைத்து விட்டிர்கள் .பெரும் நிறுவனங்களுக்கும் ,பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அனுமதி கொடுத்ததால் எங்களை போன்ற சிறு வியாபாரிகள் அழிவதோடு ,வரும் காலங்களில் பெரு நிறுவனங்கலோடு போட்டியிட முடியாமல் ,கடன் சுமை தாங்காது நாங்கள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது .இதுதான் நடக்க போகிறது .ஒருவரின் அழிவால் தான் மற்றவரின் வளர்ச்சி உள்ளது என்ற நிலைக்கேற்ப ,எங்களை அழித்து பன்னாட்டு முதலாளிகள் வாழ நீங்கள் வழி செய்கிறிர்கள் .இதற்காகவா ,நீங்கள் பன்னாட்டு பல்கலைகழகங்களில் எல்லாம் படித்து பட்டம் வாங்குநீர்கள் ?ஆனால் ஒன்று உள்நாட்டு அப்பாவி மக்களை எல்லாம் அழித்து ,உள்நாட்டு பெரும் முதலாளிகள் ,அந்நிய நாட்டு முதலாளிகள் மட்டும் வளர நீங்கள் அதரவு கொடுக்கிறிர்கள் ?நாங்கள் என்ன பாவம் செய்தோம் ?இந்திய குடிமகனாய் பிறந்ததை தவீர !                                                                                                                                                                                         இந்திய தமிழர்களே பதிவை படித்து கருத்தை பதியவும் . 

2 கருத்துகள்:

மைதீன் சொன்னது…

தூங்குகிறவர்களை எழுப்பிவிடலாம் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பதைப்போல பிரதமர் அல்ல அவர், பிரதமராய் நடிப்பவர் . நாட்டில் என்ன நடக்கிறது என்பதே அவருக்கு தெரியாது போல....

சேக்காளி சொன்னது…

ஓட்டு போடுவதற்கு வாக்காளன் தேவை.பிடித்துள்ள கொலை வெறி,பணவெறியில் அவனை கொன்று விடாமலிருக்க வேண்டும்.