இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

வியாழன், 27 ஜனவரி, 2011

தமிழர்களுக்கு சிந்திக்கும் வாய்ப்பு உள்ளதா ?

       என்னவிதமான தமிழர்கள் உருவாகி கொண்டிருக்கிறார்கள் .அவர்கள் எந்த பிரட்சனைகாவது தீர்வு வேண்டும் என்று  ஆர்வம் காட்டியிருக்கிறர்களா? எந்த மனிதன் எப்படி போனால் என்ன ? நமக்கு சாப்பாடு கிடைக்கிறதா உடை ,உறைவிடம் கிடைக்கிறதா? அது போதும் .தனது தெருவில் சக மனிதன் சண்டை இட்டு கொண்டால் கண்டும் காணாமலும் செல்லும் ,நம் தமிழ் சமூகம் எப்படி? சக மாநிலங்களிலோ ,சக நாட்டிலோ மற்றோர் தமிழனுக்கு பிரச்சினை என்றால் பொங்கி எழுவான் ?இவன் இப்படி ஆனதற்கு யார் காரணம்?இவனுக்கு சுரனையோ ,மொழி உணர்வோ ,மனிதனாக வாழ வேண்டும் என்ற எண்ணமோ கொஞ்சம் கூட இல்லாமல் போனதற்கு என்ன காரணம் ?சக தமிழர்கள் அநியாயமாக பாதிப்படைவதை பார்த்து அதனால் மனம் பாதிக்கப்பட்டு தனது உள்ளக்குமுறலை வெளிபடுத்திய தமிழர்களை இந்த அரசு ஜெயில்ளில் வைத்து அழகு பார்க்கிறது .என்ன விதமான தமிழர்கள் உருவாகவேண்டும் ?என இந்த அரசு எதிர்பார்கிறது?                                                                                                                                       தமிழர்கள் சிந்திக்க கூடாது ,எந்த பிரச்சனைக்கும் செல்லக்கூடாது .நாங்கள் கொடுக்கும்  டாஸ்மாக் சரக்கை அருந்தி விட்டு ,நாங்கள் கொடுக்கும் ஒரு ரூபாய் அரிசியை சாப்பிட்டு விட்டு ,நாங்கள் கொடுக்கும் இலவச தொலைக்கட்சியில் ,நாங்கள் தயாரிக்கும் மானாட மயில்லாட நிகழ்ச்சியை பார்த்து வாழ்வை ஓட்டி விட வேண்டும் .இதை தானே ஐயா ,நீங்கள் எதிர்பார்க்கிரிர்கள் ? உங்கலை நம்பி எங்கள் குழந்தைகளை உங்கள் அரசுப் பள்ளியில் கல்வி கற்க அனுப்பிகிறோம். என்ன விதமான கல்வியை நீங்கள் எங்கள் குழைந்தைகளுக்கு கற்றுக் கொடிப்பிர்கள் .வளர்ந்த மனிதனாகிய எங்களையை உணர்வில்லாமல் ஆக்குவதற்கு என்ன உண்டோ?அதை செய்கிறிர்கள் .பாவம் எங்கள் குழந்தைகள் சிந்தனை என்றால் என்ன? என்று கேட்கும்படியான ஒரு வாழ்வை அவர்களுக்கு கொடுத்து விடாதிர்கள்.உங்கள் வாரிசுக்காவது சிந்திக்கும் கல்வி முறையை கொடுத்து அவர்கள் நன்றாக வாழ நன்றாக ஆள முயற்சி எடுப்பிர்களா ?அதைத்  தானே செய்கிறிர்கள் .                                    தமிழ் சிங்கங்கலே கருத்தை படித்து பகிரவும் .நன்றி .                                                                     

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

தமிழர்களுக்கு சிந்திக்கும் வாய்ப்பு உள்ளதா ? என்ன சொல்றீங்க இருந்தாத்தானே பிரச்சினை தமிழ்சினிமாக்காரன்கிட்ட,டாஸ்மாக் பார் போய் கேளுங்க அங்க நாங்க அத அடமானம் வச்சி பலவருஷம் ஆச்சி.. அப்படி இருந்தாலும் உங்க இந்திய இறையாண்மை அது என்ன ஆமையோ அது எங்கள உள்ள போட்டுவச்சி பின்னிபெடலடுக்காத.. உங்க சோனியா மன்னுமோகன் ராகுல்கான் கிட்ட எங்க தலைவர் எங்க உயிரோட சேத்து எப்பவோ எழுதிக்கொடுத்துட்டாரு..

Unknown சொன்னது…

உங்கள் சந்தேகம் தலைப்பில் தெரிகிறது, ஆனால் எனக்கோ தமிழனுக்கு சிந்திக்கும் திரன் இருக்கிறதா என்பதிலேயே சந்தேகம் வந்துவிட்டது.