இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

தந்திரம் செய்யாமல் வாழ முடியுமா?

                                                                                 பல மனிதர்களின் வாழ்க்கை தந்திரமாகத்தான் இருக்கிறது .தந்திரம் செய்யாமல் மனிதன் வாழ முடியுமா?தொழிலில் தந்திரம் ,பணம் சேர்ப்பதில் தந்திரம் ,உறவு முறையில் தந்திரம் ,அதிகாரத்தை செலுத்துவதில் தந்திரம் ,தனது குழந்தை வழி சொந்தங்களுக்கு சொத்து சேர்ப்பதில் தந்திரம் ,தனக்கு பிடிக்க வில்லை என்றால் அவனை அழிப்பதில் தந்திரம் ,உண்மையை சொன்னால் அவனை அழிப்பதில் தந்திரம் ,உலகை நமது ரத்தங்கலே ஆள வேண்டும் என்று நினைக்கும் சுயநலமான தந்திரம்,மனிதர்களில் தான் தான் உயர்வு என நினைக்கும் மடத்தனமான தந்திரம் ,பெண்களை அடக்கி ஆள வேண்டும் என நினைக்கும் ஆணாதிக்க தந்திரம் ,குழந்தைகளை அவர்கள் போக்கில் வாழ அனுமதிக்காமல் தனது ஆசைகளை அவர்கள் மேல் திணிக்கும் மோசமான தந்திரம் ,யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் நமக்கு நாமே உயர்ந்து விட்டோம் என நினைக்கும் பேதை தந்திரம் ,சொந்த பந்தங்களை விட நாம் மட்டும் உயர்வாக வாழ வேண்டும் என நினைக்கும் உதவாக்கரை தந்திரம்,வெள்ளைதான் உயர்வு ,கருப்பு தாழ்வு என நினைக்கும் அறிவியல் புரியாத தந்திரம் ,இந்த உலகம் நமக்கு மட்டு மே சொந்தம் ஏனைய உயிரினங்களுக்கும் ,தாவரங்களுக்கும் இல்லை என நினைக்கும் சுற்று சூழல் புரியாத தந்திரம் ,சக மனிதரிடம் பழகினால் அவனால் நமக்கு என்ன லாபம் ? என கணக்கு போடும் கேடு கெட்ட தந்திரம் ,தொழிலாளியின் உழைப்பை சுரண்டி தான் மட்டும் கொழுக்கும் முதலாளியின் தந்திரம் ,மக்களிடம் போலி வாக்குறுதி கொடுத்து ஜெயித்து விட்டு அவர்களுக்கு பட்டை நாமம் போடும் அரசியில்வாதியின் தந்திரம் ,அடுத்தவன் சொத்தை அபகரிக்க அவனது  பலகினத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் நாலாந்தரமான தந்திரம் .ஏய் தந்திர மே ! உனக்கு சாவே  கிடையாதா ?     

2 கருத்துகள்:

மைதீன் சொன்னது…

அதெல்லாம் சரி, பாலோயர்கள் சேரவும்,பின்னூட்டம் வரவும் , ஓட்டு சேரவும்,ஹிட்ஸ் கிடைக்கவும் , நீங்கள் நிறைய தந்திரம் செய்ய வேண்டும்.

காதர் அலி சொன்னது…

நன்றி மைதீன் சார் ,தந்திரம் செய்து போர் அடிச்சிட்டு /அதுதான் எழுதினேன் .