இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

சனி, 26 மார்ச், 2011

கல்வி மன்னர்களா?கந்துவட்டி மன்னர்களா?

             ஒரு மனிதன் தான் வயிறு வளர்ப்பதற்கு எத்தனையோ வலிகள் உள்ளன.பள்ளியில்,கல்லூரியில் நன்கு படித்த மாணவன் பிற்காலத்தில் ஒரு அரசு அலுவலகத்திலோ,இல்லை தனியார் அலுவலகத்திலோ பணிபுரிந்து காலத்தை ஓட்டலாம்.இன்னும் சற்று புத்திசாலிகள் சுயமாக தொழில் செய்து பொருளாதாரரீதியில் உயர்ந்த நிலையடைந்து சுகமாக வாழலாம்.இன்னும் சில விந்தையான மனிதர்கள் இருக்கிறார்கள்.இவர்கள்,தான் பொருளாதார நிலையில் மிக உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும்.ஆனால் சமூகம் மதிக்கும் ஏதாவதுதுறையில் இருக்க வேண்டும்.அதற்காக இவர்கள் போடாத வேசமில்லை.கல்விமன்னர்கள் எனச் சொல்லிகொல்வார்கள்.சமுகத்தை நாங்கள்தான் தூக்கி நிறுத்துவோம் என போலி வேசமிட்டு சமுகத்தை சுரண்டுவார்கள்.
                                 இன்று சமுகத்தில் பெரிய மனிதர்கள் என்று சொல்லி கொள்பவர்களை நன்கு கவனித்து பாருங்கள்.அவர்கள் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியோ,பொறிஇயல் கல்லூரியோ,ஒன்றுமில்லை என்றால் ஒரு மழலையர் தொடக்க பள்ளியோ இல்லாமல் இருக்க மாட்டார்கள்.தாங்கள் பிறந்ததே இந்த உலகிற்கு சேவை செய்வதற்கு மட்டும் தான் என்ற ரீதியில் பேசுவார்கள்.
                        ஐயா,உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள்.நீங்கள் தொடக்கபள்ளி ஆரம்பித்து,மெட்ரிகுலேசன் பள்ளியாக மாற்றி,மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி எவ்வளவு பணம் மக்களிடம் கறக்க முடியுமோ அவ்வளவு பணத்தை கரக்கிறிர்கள்.கந்து வட்டி கும்பலை விட மோசமாக பணத்தை பிடுங்கிரிர்கள்.கல்வியை கடை சரக்காக மாற்றி விட்டிர்கள்.
                இன்று அரசும் உங்களுக்கு சாதமாகத்தான் இருக்கிறது.எதோ,கிராமப்புற மாணவர்கள்,நகர்புற மாணவர்களுடன் போட்டிட முடியாமல் திணறுவார்கள் என்ற காரணத்தால் இன்று பொறிஇயல்,மருத்த்வதுறைக்குநுழைவுத் தேர்வையே ரத்து செய்து விட்டார்கள். அவர்களின் உண்மையான நோக்கம் கிராமப்புற மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.அரசியல்வாதிகளும்,அவர்கள் பினாமிகளும் நிறைய பொறிஇயல் கல்லுரி கட்டி விட்டார்கள்.படிக்க ஆள் இல்லை.அதற்கு தடையாக நுழைவுத் தேர்வு உள்ளது.உடனே ''நுழைவு தேர்வை நிறுத்து,கிராமப்புற மாணவர்களின் நிலையை உயர்த்து ''என கோஷமிட்டு சாதித்து விட்டிர்கள்.
                             ஐயா,சமுக சேவர்கலே நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன.வட்டித்தொழில் செய்யலாம்,சீட்டாட்டம் நடத்தலாம்,குதிரை ரேசில் பங்கு கொள்ளலாம்,டாஸ்மாக் பாரை நடத்தலாம்,பங்கு மார்க்கட்டில் ஈடுபடலாம்,கிரிக்கெட் சூதாட்டத்தில் கலக்கலாம்,பல அமைட்ச்ர்களுக்கு பினாமியாக இருக்கலாம் இப்படி பலதுறை இருக்கும்பொழுது நீங்கள் ஏன் கல்வித்துறைக்கு வர வேண்டும் கல்வித்துறை என்பது சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு உரியது.அதுதான் உங்களிடம் இல்லையே.''உங்கள் வழிதனி வழியாக இருக்கும்பொழுது உங்களுக்கு ஏன்?இந்த கல்வி வழி''.இந்த வேஷத்தை கலைத்து விட்டு நீங்கள் உடுத்தும் வெள்ளை ஆடைப்போல் தூய்மையாக இருப்பிர்களா?
                           நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தை தரவும்.நன்றி.    
         

3 கருத்துகள்:

மைதீன் சொன்னது…

"கல்வித்துறை என்பது சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு உரியது"


சேவை மனப்பான்மையா அப்பிடின்னா என்ன சார்..

Chitra சொன்னது…

இன்று அரசும் உங்களுக்கு சாதமாகத்தான் இருக்கிறது.எதோ,கிராமப்புற மாணவர்கள்,நகர்புற மாணவர்களுடன் போட்டிட முடியாமல் திணறுவார்கள் என்ற காரணத்தால் இன்று பொறிஇயல்,மருத்த்வதுறைக்குநுழைவுத் தேர்வையே ரத்து செய்து விட்டார்கள். அவர்களின் உண்மையான நோக்கம் கிராமப்புற மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.அரசியல்வாதிகளும்,அவர்கள் பினாமிகளும் நிறைய பொறிஇயல் கல்லுரி கட்டி விட்டார்கள்.படிக்க ஆள் இல்லை.அதற்கு தடையாக நுழைவுத் தேர்வு உள்ளது.உடனே ''நுழைவு தேர்வை நிறுத்து,கிராமப்புற மாணவர்களின் நிலையை உயர்த்து ''என கோஷமிட்டு சாதித்து விட்டிர்கள்.



......."நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்..... நீ அழுகிற மாதிரி அழு....." என்ற நிலை என்றுதான் மாறுமோ?

பெயரில்லா சொன்னது…

அய்யா ,
கல்வி என்பது பெரிய சாக்கடை பிசினஸ் ஆகி விட்டது. இதில் வெட்க கேட்டான விஷயம் திரு கோவிந்தா ராஜ் கமிட்டி -- அரசாங்கம் அமைத்த இந்த கமிட்டியின் பரிந்துரைகள் , கோர்ட் முடிவுகள் -என இருந்தும் ஏன் இப்படி வசூல் மன்னர்கள்
எதையும் கவலைப்படாமல் வசூல் மகசூல் செய்கிறார்கள்? ஏன் அரசாங்கம், ஒன்றும் செய்யாமல் -- ரொம்ப மட்டமான ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறது ? மக்களே கூட்டமாய் துணிந்து நின்று சவாலை சந்தித்த போது பேருக்கு ஒரு கமிட்டி வைத்து மக்களை முட்டாளாக்கும் இவர்கள் , தாங்களும் வசூல் மன்னர்கள் என நிரூபிக்கிறார்கள். பீஸ் கட்டி பீஸ் பீசாய் போவான் இந்த தமிழன்.