இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

வியாழன், 24 மார்ச், 2011

அரசியல்வாதிகளின் ''சினிமா மோகம்'' அழியுமா?

                        ஒரு அரசியல்வாதி தான் செய்த சாதனைகள்,தான் செய்ய போகும் திட்டங்கள் முதலியவற்றை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பது தான் ஒரு பழுத்த,வயது முதிர்ந்த,அனுபவத்தில் கொட்டைபோட்ட அரசியல்வாதிகளின் நியாயமான தன்மை.மக்களின் மதியை மயக்காமல்,இலவசங்களை வாரி வழங்காமல் எங்களுக்கு நீங்கள் வாக்களித்தால்,உங்கள் வாழ்வு நல்வழி பெற எங்களால் முயன்றதை செய்வோம் என்று சொல்வதுதான் ஒரு தரமுள்ள அரசியல்வாதியின் செயல்.                                                                                                                                                                           ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் கூத்து  என்ன?  மேடையில் முதல்வர் உட்பட பல கட்சி அரசியல் தலைவர்கள் அமர்ந்திருக்க,அதற்க்கு சம்பந்தமே இல்லாத காமடி நடிகர் வடிவேலுவை பேச வைத்து வாக்கு கேட்கிறார்கள் என்றால் இவர்கள் எல்லாம் ஏன்?அரசியலுக்கு வர வேண்டும்.இவர்கள் தங்களை நம்பவில்லை,தாங்கள் செய்த சாதனைகளை நம்பவில்லை.மாறாக சினிமா மோகத்தையே நம்புகிறார்கள் அந்த மகராஜன் வடிவேலுவோ,எதிர் கட்சி தலைவரை வாடா,போடா,குடிகாரப்பயல்,24 -மணிநேரமும் ரவுண்டுகட்டி தண்ணி அடிப்பவன் என்ற சபை நாகரிகம் கூட தெரியாமல்  பேசுவதை முதல்வரும் சிரித்து வரவேற்கிறார் என்றால் நீங்கள் என்னவிதமான அரசியலை கொண்டு வர முயர்ச்சிக்கிரிர்கள்?நீங்கள் நடத்திக்கொண்டிருப்பது தானே ''டாஸ்மாக்''.அதைத்தானே நாங்கள் குடிக்கிறோம்.அது தப்பு என்றால் அதை ஏன்?நடத்தி கொண்டிருக்கிறிர்கள்?மக்கள் சினிமா மோகத்தில் மிதக்கிறார்கள் என்று நீங்களாக நினைத்துக் கொண்டு உங்கள் மகனில் இருந்து,பேரன் வரை சினிமாவில் நடிக்க ஊக்கப்படுத்திருகிர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் சினிமா மோகத்திலிருந்து மீண்டு வருகிறார்கள்?என்ற கதை உங்களுக்கு தெரியமா?                                                                                                                                   எதிர் கட்சித் தலைவர் அம்மா இருக்கிறார்.தன் கூட்டனிக்கு நடிகர் பட்டாளமே வந்து விட்டது.இனி நாம் தான் முதல்வர் என்ற குருட்டு நம்பிக்கையில்,அவருடன் பல வருடங்களாக கூட்டணி வைத்த நல்ல பேச்சாளர்கலை வைத்துள்ள வை.கோ.கூட்டணியை நிராகரிக்கிறார்.வை.கோவை நீங்கள் ஏன்?நிராகரிக்கிரிர்கள்?[எந்த கம்பெனி முதளாலிடம் பணம் வாங்கினீர்கள் .இது தனிக் கதை ]நீங்கள் சினிமாவில் இருந்து வந்து சாதித்ததை போல்,இப்போது விஜயகாந்த்,சரத்குமார்,விஜய் முதலியவர்களை வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று கணக்கு போடுகிறிர்கள்?போடுங்கள்,போடுங்கள்.                                                                                                                    ஐயா,அரசியல்வாதிகளே நீங்கள் செய்த சாதனைகள்,உங்கள் சுயநலமில்லா போக்கு,உங்கள் குடும்பங்கள் வாழ்வதற்காக தமிழ்நாட்டை சுரண்டாமல் இருக்கும் தன்மை,பத்திரிக்கைக்கு நீங்கள் கொடுக்கம் சுதந்திரம்,நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்க அதை விட்டு விட்டு சினிமா நடிகர்களின் பாராட்டு விழாவில் போய் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பது,தனது குடும்ப உறுப்பினரை வைத்து ஊழல் செய்தால் மாட்டி விடுவோம் எனத் தெரிந்து அப்பாவி மனிதர்களை வைத்து ஊழல் செய்வது,இலவசங்களை கொடுத்து தமிழர்களை பிச்சைக்காரனாக ஆக்கும் தன்மை,இதை வைத்துதான் உங்களுக்கு வாக்களிப்பார்களே ஒழிய உங்களின் சினிமா மோகத்தை வைத்தல்ல.இதை நீங்கள் உணர்வீர்களா?                                                                   நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை சொல்லவும்.நன்றி .      

3 கருத்துகள்:

Chitra சொன்னது…

,இதை வைத்துதான் உங்களுக்கு வாக்களிப்பார்களே ஒழிய உங்களின் சினிமா மோகத்தை வைத்தல்ல.இதை நீங்கள் உணர்வீர்களா?

.....வோட்டு போடும் போது, மக்கள் யோசித்து எடுக்க வேண்டிய முடிவு தானே.

பெயரில்லா சொன்னது…

நீங்க வேற பாஸ் !!! சினிமாக் காரர்களை அரசியல் வாதிகளாக்கும் மக்களின் மோகம் குறையுமா என்றல்லவா பதிவு வந்திருக்க வேண்டும்... மாற்றி எழுதிவிட்டீர்களே !!!

காதர் அலி சொன்னது…

இக்பால் செல்வன் தலைப்பு எப்படி இருந்தால் என்ன?உங்கள் வழியும் ,என் வழியும் ஒன்றுதான் பிறகு என்ன?தங்கள் வருகைக்கு நன்றி.