இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

வெள்ளி, 6 மே, 2011

அட்சயதிருதியை-அப்பட்டமான வியாபார மோசடியா?

உலகம் முழுவதும் வியாபாரிகளின் ராச்சியம் தான் கொடிக் கட்டி பறக்கிறது.தனது பொருள்களை விற்ப்பதற்க்காக வியாபாரிகள் செய்யும் தந்திரம் சொல்லி மாளாது.மக்கள் நுகர்வு பொருள்களை வாங்கி குவிக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் வருடம் முழுவதும் ரூம் போட்டு யோசித்ததின் விளைவு தான் இந்த அட்சய திருதியை.

வியாபாரிகளுக்கு வருடம் முழுவதும் வியாபாரம் இருக்க வேண்டும்.ஏதாவது காரணத்தால் வியாபாரம் குறைந்து விட்டால்,உடனே ஆடிக்கழிவு,சம்மர் கொண்டாட்டம்,அட்சயதிருதியை,தீபாவளி,பொங்கல்,கிறிஸ்துமஸ்,ரம்சான்,        பக்ரீத்,விழாக்கால சலுகைகள்,பள்ளி மாணவ,மாணவிகளுக்கு,நோட்டுப்புத்தகம்,சீருடைதள்ளுபடிகள்,முகூர்த்த சீசன்கள் என்றால் ஒரு பட்டு புடவை எடுத்தால் இரண்டு இலவசம்.ஐயா,வியாபாரிகளே உங்கள் லீலைக்கு அளவே இல்லையா?

தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்க்காக மக்களை எந்த வழியில் எல்லாம் முட்டாள் ஆக்க முடியுமோ அந்த வழியை எல்லாம் தேர்ந்து எடுப்பார்கள்.பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகள்,இணையதளங்கள்,வானொலிகள்,மூலம் அட்சய திருதியை என்ற இல்லாத ஒன்றை உருவாக்குவார்கள்.தொலைகாட்சி செய்திகளில் தங்கம் விலை குறைவு,கிராமுக்கு அவ்வளவு தள்ளுபடி,இவ்வளவு தள்ளுபடி எனக்கதை விடுவார்கள்.அட்சயைதிருதியை முடிந்த பிறகு 500kilo தங்கம் விற்றது என கதை விடுவார்கள்.இன்று தங்கம் வாங்கினால் மங்கலம் வரும் என்று பத்திரிக்கை மூலம் கட்டுரை எழுதுவார்கள்.[போன அட்சயதிருதியையில் எனது நண்பன் வாங்கிய பத்து சவரன் தங்கம் திருட்டு போய் இன்னும் கிடைக்கவில்லை ,இது தனிக்கதை]மகாபாரதம்,ராமாயணம்,போன்ற கதைகளை எல்லாம் எடுத்து விட்டு,சாமிக்கதைகளை சொல்லி கட்டுரை எழுதி மக்களின் பணத்தை எல்லாம் சுரண்டுவார்கள்.தங்களிடம் உள்ள தரம் குறைந்த நகைகளை எல்லாம் இந்த அட்சயதிருதியையில் விற்று காசாக்கி விடுவார்கள்.

இதை சரி  செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்? அட்சயதிருதியை என்று சொல்லிக்கொள்ளும் ஒருநாள் மட்டும் உண்ணாவிரதம் இருந்து மௌன விரதம் கடைப்பிடித்தால் உங்கள் பணம் காப்பாற்றப்படுவதோடு,உங்கள் உடல் நிலையும் ஆரோக்கியமாக இருக்கும்.இதை மனிதனாகிய நாம் உணர்வோமா.

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.   
                  

4 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இது சில நகை வியாபாரிகளின் சதுர்யம்தான்...
மக்கள் தான் முட்டாள்கள்..

நல்ல பதிவு...

Unknown சொன்னது…

மக்களை முட்டாளாக்கிறார்கள் என்பதைவிட, சின்ன மீனை கொடுத்து பெரிய மீனை பிடிக்கிறார்கள் :))
எல்லா வகையிலும் நாங்கள் வியாபாரிகளுடன் சேர்ந்தே வாழவேண்டி யுள்ளாது :)

Prabu Krishna சொன்னது…

அட..மனிதா... /kadhar24

http://bloggersbiodata.blogspot.com/2011/05/kadhar24.html

அம்பாளடியாள் சொன்னது…

வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை
பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....