இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

வெள்ளி, 13 மே, 2011

ஊழலே,உனது பெயர் இந்தியாவா?

கி.பி.2020 -ல் இந்தியா வல்லரசாகிவிடும் என ஒரு சாரர் சொல்லிக்கொண்டிருக்க,இந்தியா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் ஊழலில் வல்லரசாகி விடுமோ என அச்சமடைய வேண்டியயுள்ளது.

ராமாயணம்,மகாபாரதம்,போன்ற இதிகாசங்களையும்,திருக்குறள் போன்ற உலக பொதுமறைகளையும் படித்த பண்பட்ட பாரத மக்கள்தான் விஞ்ஞான வழியில் ஊழல் செய்வது எப்படி?என்று வாழ்நிலையை அமைத்துக் கொண்டார்களோ? ''இப்படி எல்லாம் ஊழல் செய்ய முடியுமா? மதராசிகளே''என்று தமிழக பத்திரிக்கையாளர்களை பார்த்து வட இந்திய பத்திரிக்கையாளர்கள் சொல்லும் சொல்லைக் கேட்டால் நாங்கள் எல்லாம் திருக்குறளை பின்தொடர்ந்து செல்லும் உண்மையான மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளலாமா?எனத் தோன்றுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை ஸ்பெக்ட்ட்ரம் ஊழல்,கேதன்பரேர் ஊழல்,டெல்லி ஊழல்,மதுகோடா ஊழல்,சத்யம் ஊழல்,ஹவாலா ஊழல்,ஹர்சத் மேக்தா ஊழல்,பீகார் கால்நடை ஊழல்,சுக்ராம் ஊழல்,போபார்ஸ் ஊழல்,காமன்வெல்த் விளையாட்டு ஊழல்,பெங்களூர் மைசூர்சாலை கட்டுவதில் ஊழல்,I .P .L .ஊழல் இன்னும் இதில் விடுபட்ட பல ஊழல்களை சேர்த்தால் நமக்கு தலையே சுற்றிகிறது .

அது சரி ஊழல் செய்யாமல் வாழ முடியுமா?ஊழலின் ஊற்றுக்கண் என்ன?எந்த செயலுக்கும் லஞ்சம் கொடுக்க கூடாது?லஞ்சம் வாங்கக் கூடாது?என ஒவ்வரு தனி மனிதர்களும் நினைத்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும்.இது இந்தியாவில்  சாத்தியமா?

வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ,தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ அதை சரிசெய்ய வரும் அரசு ஊழியருக்கு ஏதாவது பணம் கொடுக்கிறோம்.சினிமா பார்க்கும் அவசரத்தில் தேவைக்கு மேல் பணம் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி செல்கிறோம்.இப்படி சிறு சிறு செயலுக்கு எல்லாம் லஞ்சம் கொடுத்து பழகி,இப்பொழுது காவல் துறை,பத்திரபதிவு துறை, வட்டார போக்குவரத்து துறை,மருத்துவ துறை,சட்டத்துறை,நீதித்துறை,வனத்துறை,பொதுப்பணித்துறை,நகராட்சி,மாநகராட்சி,அலுவலகங்கள்,தணிக்கைத்துறை,என்று எல்லாத்துறைகளிலும் லஞ்சம் கொடுப்பதும்,வாங்குவது ரொம்ப சாதாரணமாகிவிட்டது.ஊழலும் பழகிவிட்டது.இந்த லச்சனத்தில் இந்தியா 2020 -வல்லரசாகி விடுமாம்.என்னத்த  சொல்ல.

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது,என்பதற்கு ஏற்ப ஒவ்வரு தனிமனிதனும் தனது கடமையை செய்ய லஞ்சம் வாங்கவோ,கொடுக்கவோ மாட்டேன் என்று நினைத்தால்தான் இந்தியா வல்லரசாக மாற வாய்ப்பு உள்ளது.மாற்றம் என்பது தனிமனிதன் மனதில் இருந்து தான் உருவாக வேண்டும் இதற்கேற்ற கல்வி முறையை குழந்தைப்பருவத்திலிருந்தே கற்றுக்குடுக்க வேண்டும்.மனித மனங்களில் நெறி முறைகள் வளர்க்கப்பட வேண்டும்.அதுவரை எத்தனை அண்ணா ஹசாரே வந்தாலும்,எத்தனை லோக்பால் சட்டங்கள் போட்டாலும் மாற்றம் என்பது இந்தியாவில் சாத்தியமில்லை.இதை இந்தியராகிய நாம் உணருவோமா?

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.

4 கருத்துகள்:

jayakumar சொன்னது…

nanbare intha thani manitha olukkam parriye naan oru iyakkam thuvangi irukken...mudinthal en blog paarkkavum...nanri...

ம.தி.சுதா சொன்னது…

வரிகளில் எதிர்கால ஏக்கம் தெரிகிறது சகோரா..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

குட் ஷேர்

Unknown சொன்னது…

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி

கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க

4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!