மாநகரங்களில் நடக்கும் கொள்ளைக்கு அளவே இல்லையா சமீபத்தில் மிகுந்த கால் வலியோடு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன் பையில் உள்ள சில்லறையை தடவியபடியே பேருந்துக்காக காத்துகொண்டிருன்தேன் .வரும் வண்டி அனைத்தும் சொகுசு பேருந்துகள் .அதற்கு மினிமம் பயணச்சீட்டு ரூபாய் 5 .நானும் அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டிய ஆள் தானே என்று ஒய்ட் போர்டு வண்டியை எதிர் பார்த்து கொண்டிருந்தேன் .அதற்கு மினிமம் பயணச்சீட்டு ரூபாய் 2 .அரை மணி நேரமாக பேருந்துக்காக காத்திருந்தேன் .அனைத்து வண்டிகளுமே சொகுசு பேருந்துகள் .அரசு முறையாக பேருந்து கட்டணத்தை உயர்த்தினலே 2 ரூபாய் கட்டணம் 3 ரூபாயாக உயரும் .ஆனால் சொகுசு பேருந்து என்று கிட்டத்தட்ட இரண்டு மடங்கு தொகையை நம்மிடமிருந்து கல்லா கட்டுகிறார்கள் .யாரை ஏமாற்றுகிறது இந்த அரசு?உங்களை நம்பும் எங்களை போன்ற குடிமககளையா !வேண்டாம் இந்த விபரீதம் !காலம் உங்களுக்கு பாடம் கற்று கொடுத்து விடும் . நண்பர்களே பதிவை படித்து வேறு யாருக்கும் ஒட்டு போடாமல் எனக்கு ஓட்டு போடும் படி vendugirayn
1 கருத்து:
அடுத்த ஸ்டாப் வரைக்கும் நடந்து போய் உடம்ப குறைக்கட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் தான் ,இதப் போய் தப்பா நினைச்சிக்குட்டு
கருத்துரையிடுக