அம்மா உங்கள் கோபம் புரிகிறது .உங்கள் குழந்தைகளுக்கு தந்தை இல்லையே என்ற வருத்தம் புரிகிறது .உங்கள் குழந்தைகள் தந்தைக்கு ஏனம்மா ?இந்தநிலை என்று கேட்கும்பொழுது நீங்கள் அடையும் மனவேதனை எங்களுக்கு புரிகிறது .யாரோ செய்த சில முன் யோசனை இல்லாத நிகழ்வுக்காக ஒட்டு மொத்த தமிழர்கலேயே உங்களுக்கு பிடிக்கவில்லை என்ற எண்ணம் புரிகிறது .இதற்கு பிரயாசித்தமாக நீங்கள் எவ்வளவோ விசியங்கள் செய்து விட்டிர்கள் .உங்கள் குழந்தைகளைப் போன்று இன்று பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் தந்தை ,தாயை இழந்து நமக்கு ஏன்? இந்த நிலைமை ?நாம் ஏன் வாழ்கிறோம் ?என்று யாரிடம் கேட்பது என்று தெரியாமலே உலகம் முழுவதும் ,உங்கள் குழந்தைகளை போன்று ,கண்ணை கட்டி காட்டில் விட்டவரைபோல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் .இதே மன நிலையில் வளரும் ஆ யிரக்கணக்கான குழந்தைகள் வரும் காலங்களில் என்னவிதமான சிந்தனையில் வளர்வார்கள் ?என்று நினைக்கும் பொழுது அச்சமாகத்தான் இருக்கிறது .போனது போகட்டும் ,நீங்கள் நினைத்தபடியே பல விசியங்கள் நடந்து முடிந்து விட்டன .நீங்கள் நினைத்தால் எல்லாவற்றையும் முடித்து வைத்து விடலாம் .அதற்கான மனநிலை உங்களுக்கு வருவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் .நீங்கள் நினைத்தால் அனைவரையும் மன்னித்து விடலாம் .அதற்குரிய அனைத்து அம்சங்களுமான அன்பு, அறிவு,தாய்மை உணர்வு,நல்லது கெட்டது சீர் தூக்கி பார்க்கும் அனுபவ அறிவு அனைத்தும் உங்களிடம் உள்ளன .இருப்பவரிடம் தான் கேட்க முடியும் .உங்களிடம் அனைத்து அம்சங்களும் இருப்பதால்தான் உங்களிடம் வேண்டுகிறோம் .இதற்குரிய மனநிலை உங்களுக்கு வருமா ?வரும் ஏனன்றால் நீங்கள் தாய் உள்ளம் படைத்தவர் தானே . அன்புள்ளவர்களே பதிவை படித்து கருத்தை கவனமாக பதியவும் .நன்றி .
2 கருத்துகள்:
யாரோ ஒருவர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த தமிழினத்தையே அழிக்க நினைக்கிறார்கள் போலும்,இலங்கையில் ராஜபக்ஷே, இந்தியாவில் சோனியா நல்ல முன்னேற்றம். இந்திராகாந்தியை கொன்றதால் சீக்கிய இனத்தை இன்னும் வெறுப்புடன பார்க்கிறார்கள்? பிரதமராக்கி அழகு பார்க்கவில்லை.தமிழனுக்கு மட்டும் ஏனிந்த நிலை? சோனியா காந்தி பிரதமர் ஆகாமல் இந்த நிலை.பிரதமராகியிருந்தால்....
கருத்தை நச் என்று சொன்னிர்கள் .நன்றி மைதீன் .
கருத்துரையிடுக