ஒரு மனிதனின் மூளை எவ்வளவு காலத்துக்குத்தான் ஆரோக்கியமாக இயங்கும் .அதற்கு வயது என்று ஒன்று உண்டா? அதற்கு நல்லது கெட்டது தெரியுமா ? சரியான சமயத்தில் சாமர்த்தியமான முடிவை எடுக்கும் ஆற்றல் அந்த மூளைக்கு உண்டா? வயது ஏற ஏற அனைத்து உறுப்புகளும் செயல் இழக்கும்போது மூளை மட்டும் தனித்து இயங்கி தர்மத்தை நிலை நாட்டுமா? அரசுப் பணிக்கு குறிப்பிட்ட வயதில் ஓய்வு கொடுக்கும் இந்த அரசு ,அடுத்த தலைமுறைக்கு ஏன்? வாய்ப்பை மறுக்கிறது .அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமையை ஏன்? இளமையான மூளைக்கு வழங்க கூடாது? குடிமக்களாகிய நாங்கள் விரும்புவதும் அதைத்தான் .உங்கள் உறுப்புகளுக்கு நீங்கள் ஓய்வு கொடுத்து ,முதுமைக்கு மரியாதை கொடுத்திர்கள் என்றால் என் போன்ற குடிமக்களின் அன்பை பெறுவதோடு ,சரியான சமயத்தில் ,சரியான முடிவை எடுக்கும் சிறந்த நிர்வாகி என்ற மன நிறைவோடு நாங்கள் வாழ்வோம் !சிந்திக்குமா மூளை? நண்பர்களே பதிவை படித்து தங்கள் கருத்துகளை பகிரவும் .நன்றி .
1 கருத்து:
நண்பரே! மூளை ஓய்வு பெற்றால் கோமாவில் முடியும் அல்லது மரணத்தில் முடியும்.முதுமைக்குத்தான் ஓய்வு கொடுக்க முடியும். அரசு வேலைக்குத்தான் ஓய்வு.அரசியல்வாதிக்கு அல்ல.அதுபோக இன்னும் சில குடும்பங்களை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டியிருக்கிறது.அதுக்குள் அவரப்பட்டால் எப்படி?
கருத்துரையிடுக